ஆன்மீகவாதியாகும் யோகம் உங்களுக்கு உண்டா ?
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
« » வாலிப வயதில் மனம்போன போக்கில் தனது இஷ்டப்படி ஆடிவிட்டு ஒரு குறிப்பிட்ட நாற்பது வயதை கடந்த பிறகு தான் ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என ஆசை பலருக்கு வந்து அதனால் சோதிடர்களை நாடி நான் ஆன்மீகவாதியாக மாறும் யோகம் ? எனது சாதகத்தில் உண்டா ? என வினவும் பலருக்கு பயன்படட்டும் எனும் நோக்கில் இப்பதிவை கொண்டு செல்கிறேன்.
ஆன்மீகம் எனும் வார்த்தையை பயன்படுத்தி பிரச்சினைகளிலிருந்து சமூகத்தின் பார்வையில் தப்பித்துக்கொள்ளவே அதை பலர் நாடுகிறார்கள்.
காவி உடை அணிவதாலோ அல்லது மொட்டை அடிப்பதாலோ அல்லது உடல் முழுவதும் திருநீறு பூசுவதனாலேயே ஒருவர் ஆன்மீகவாதியாகிவிட முடியாது.இதனைத்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவர்கூட
"மழித்தலும் நீட்டலும் வேண்டாது உலகம் பழித்து தொழித்து விடும் "என்கிறார்.
"மழித்தலும் நீட்டலும் வேண்டாது உலகம் பழித்து தொழித்து விடும் "என்கிறார்.
ஆன்மீகம் என்பது தன்னையறிதல் ஆகும்.தன்னையறிந்தவனே மெய்ஞானி.ஒருவன் தன்னையறிந்த பின் அவனுக்கு என எந்த அடையாளத்தையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டான்.இதனால்தான் "கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர்" என்றனர்.
ஆன்மீகத்தின் உச்சநிலையை அடைந்தவன் தன்னை பெரிதாக காட்டிக்கொள்வதில்லை.ஆன்மீகத்தின் உச்சநிலையை அடைந்ததாக தன்னை பீற்றிக்கொள்பவர்கள் நிச்சயமாக அந்த மெய்ப்பொருளை அடைந்ததில்லை.
ஆன்மீக சாதனையில் ஈடுபட்டு அனைவரும் வென்றதில்லை.எனவேதான்
"ஓடி ஓடி ஓடி ஓடி
உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி
நாட்களும் கடந்துபோய்
வாடி வாடி வாடி வாடி
மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி
எண்ணிறந்த கோடியே"
என அழகாக பாடுகிறார்.
ஆன்மீக சாதனையில் ஈடுபட வயது,கல்வி,திறமை மற்றும் பொருளாதர நிலை என எதையும் சார்ந்திருக்கவில்லை.ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன்கூட ஞான நிலையை அடையமுடியும்.அதேநேரத்தில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அந்த பேருண்மையை அடையமுடியாது.அது ஒரு விநாடிநேர மின்னல் ஆகும்.
ஆன்மீக சாதனையில் ஈடுபட வயது,கல்வி,திறமை மற்றும் பொருளாதர நிலை என எதையும் சார்ந்திருக்கவில்லை.ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன்கூட ஞான நிலையை அடையமுடியும்.அதேநேரத்தில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அந்த பேருண்மையை அடையமுடியாது.அது ஒரு விநாடிநேர மின்னல் ஆகும்.
ஆன்மீக சாதனையில் ஈடுபட விரும்புவரது சாதக கட்டத்தில் ஓன்பதாம் பாவமும் ,ஒனபதாம் அதிபதியும் ஒருவருக்கு துணைபுரிய வேண்டும்.அதேபோல லக்கனாதிபதியை வைத்தே ஒருவரது குணாதிசியமும்,இயல்பும் அமையும் என்பதால் அமையும் என்பதால் லக்கனாதிபதியும் பலம்பெற்றிருக்கவேண்டும்.
ஒருவர் ஆன்மீக சாதனையில் சிறக்க ஆன்மீக செம்மல் எனப்படும் குருபகவானும்,ஞானக்காரகர் கேதுபகவானும்,கர்மக்காரகன் சனிபகவானும் மற்றும் மனோகாரகன் சந்திரபகவானும் பலமடைந்து இருக்கவேண்டும்.
ஒருவரது சாதக கட்டத்தில் ஒன்பதாம் பாவம் குறிக்கும் சில பாவக காரங்களைப் பார்ப்போம்.அவையாவன
தந்தையின் நிலை,தெய்வபக்தி,ஆத்மசாதனை,ஆலயத்திருப்பணி,சத்சங்கம்,மடம் நிறுவுதல்,ஆசிரமம் நடத்துதல்,தானதர்மம் வழங்குதல்,ஆன்றோர் தரிசனம்,குருஉபதேசம் பெறல்,குருவாக இருத்தல்,யாத்திரை அழைத்துபோதல் மற்றும் பாக்கியவனாக திகழ்தல் முதலியன ஆகும்.
ஒருவர் ஆன்மீகவாதியாக தேவையான அனைத்து அம்சங்களையும் ஒன்பதாம் பாவக காரகங்கள் பெற்றிருப்பதால்தான் ஒன்பதாம் பாவமே மிகவும் இன்றியமையாத பாவம் ஆகும்.எனவேதான் ஒன்பதாம் அதிபதியை தர்மாதிபதி என்கிறோம்.
எனவே ஒருவரது சாதகத்தில் ஒன்பதாம் இடமும் மற்றும் ஒன்பதாம் அதிபதியும் சுப கிரகங்களின் (பாவிகளில் கேதுபகவான் தவிர) தொடர்பும் மற்றும் பார்வையும் பெற்று ஒன்பதாம் அதிபதி பலமடைந்திருக்கவேண்டும்.
ஒருவரது குணநலன்களையும்,இயல்பையும் குறிக்கும் லக்கனாதிபதி எங்கு அமர்கிறதோ அதன் தன்மையை ஒருவன் பெறுவான் எனும் வகையில் லக்கனாதிபதி ஒன்பதாம் இடத்தில் அமர்வதும் அல்லது ஒன்பதாம் இட அதிபதி லக்கனத்தில் அமர்வதும் அல்லது லக்கனம் மற்றும் ஒன்பதாம் இடத்து அதிபதிகள் ஒருவரையோருவர் சுபராகி பார்த்துக்கொள்வதும் அல்லது இருவரும் பரிமாறிக்கொள்வதும் அல்லது இருவரும் இணைந்து லக்கனத்திலோ அல்லது ஒன்பதாம் இடத்தில் அமர்வதும் மேற்கண்ட எல்லா அமைப்புக்கும் ஞான செம்மல் குருபார்வை பெறுவதும் ஆன்மீக சாதனையில் ஒருவரை ஜொலிக்க வைக்கும் அமைப்பாகும்.
லக்கனத்தில் அல்லது ஐந்தில் அல்லது ஒன்பதில் அமர்ந்த குருபகவானும் ,குருவின் பார்வை பெற்றுள்ள ஞானக்காரகன் கேதுபகவானும் அல்லது மனோகாரகன் சந்திரபகவானும் ஒருவரை ஆன்மீக சாதனையில் ஈடுபடவைக்கும்.
ஞானகாரகன் கேதுபகவான் லக்கனம்,வாக்குஸ்தானம்,பூர்வபுண்ணியஸ்தானம்,தர்மஸ்தானம் மற்றும் வியஸ்தானம் போன்ற இடங்களில் அமர்ந்து குருபகவானின் பார்வையைப்பெற்று ஒன்பதாம் அதிபதியும் பலம் பெற்றவர்கள் தெய்வ அருளை நிரம்பபெற்றவர்கள்.இவர்களது வாக்கு பலிக்கும்.பின்னால் நடக்க இருப்பதை முன்னால் யூகிக்கும் சக்தி படைத்த சித்தர்களாவர்.
கர்மக்காரகன் சனியும்,ஆன்மீக செம்மல் குருபகவானும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளமால் இருத்தல் நலம்.ஏனெனில் ஏழாம் பார்வை எல்லாகிரகங்களுக்கும் முழுப்பார்வை என்பதால் சனிபகவான் குருவை சமசப்தமாக பார்க்கும்போது குருவிற்க்கே உரித்தான குணத்தை சனிபகவான் மாற்றிவிடுவார்.எனவே சனியை குருபகவான் தனது ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையால் பார்க்கப்பட்டூ லக்கனமும் ,ஒன்பதாம் பாவமும் பலப்பட ஆன்மீக சாதனையில் வெற்றிப்பெறமுடியும்.
நன்றி! நன்றி!
(தங்களது சாதக பலன் மற்றும் விவாக பொருத்தம் போன்ற பலன்களை எந்த நாட்டில் இருந்தாலும் போன் வழியாகவே பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.நீங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது அலைபேசிக்கு அல்லது எனது வாட்ஸ்அப் (97 151 89 647 ) க்கு மெஸ்ஸேஸ் செய்தால் போதும் .ஜெனன சாதகம் எழுதி போஸ்டலிலும் அனுப்பிவைக்கப்படும் )
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ ரிசர்ச் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ ரிசர்ச் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு.
எனது அலைபேசி
97 151 89 647
740 257 08 99
97 151 89 647
740 257 08 99
My Email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
Do you want to read more information in Astro field search my Facebook address
m.facebook.com/ravichandran3538039
No comments:
Post a Comment