Thursday 8 December 2016

கோள்களும் அவற்றின் தன்மைகளும்

                         

கோள்களும் அவற்றின் தன்மைகளும்



செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன்
 துணை !

                  " இந்திய சோதிடவியல் வரலாற்றில் முதலில் ஏழு கோள்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.இராமாயணத்தில் இராமன் பிறந்ததை குறிப்பிடும்போது கூறுமிடத்தில் வால்மீகி முனிவர் இராமர் பிறந்த நேரத்தில் ஐந்து கோள்கள் உச்சமாகவும்,குருபகவான் சந்திரனுடன் சேர்ந்திருந்தாகவும் தெரிவிக்கின்றனர்.

                 இதைக் கருத்தில் கொண்டு ,சித்திரை மாதத்தில் ராமன் பிறந்ததை வைத்து பார்க்கும்போது சூரியன் மேஷத்தில் உச்சமாக இருப்பதை அறியலாம்.சூரியனுக்கு அருகிலேயே புதனும்,சுக்கிரனும் காணப்படும் என்பது பொதுவான விதியாகும்.அதாவது சூரியன் இருக்கும் ராசிக்கு முன் மற்றும் பின் ஒரு ராசியில் புதன் இருக்கும் .சுக்கிரன் பகவான் சூரியனுக்கு முன் மற்றும் பின் இரு ராசி விட்டு சுக்கிரபகவான் இருக்கும் என்பதால் மேஷ ராசிக்கு அருகில் மீன ராசியில் உச்சமாக இருக்ககூடிய கோள் சுக்கிரன் ஆகும்.ஆனால் சூரியனுக்கு முன் பின் ராசிகளில் புதன் உச்சமாக வாய்ப்பு இல்லை.
                                                 


                 எனவே சூரியன்,சுக்கிரன் இரண்டு கிரகங்கள் உச்சமாக இருத்தலை அறியலாம்.இராமன் பிறந்த நட்சத்திரம் புணர்பூசம் என்பதால் சந்திரபகவான் ரிஷபத்திலே உச்சம் என்பதால்  மிதுனத்திலோ அல்லது கடகத்திலோ சந்திரபகவான் உச்சமடைய வாய்ப்பில்லை.

                ஆதலால் புதன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களை தவிர சூரியன் ,செவ்வாய்,குரு,சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்களே இராமன் பிறந்தநேரத்தில் உச்சமாக இருந்திருக்க முடியும் என்பதை அறியலாம்.

                ஆகையால் இராமாயணக் காலத்தில் சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன் மற்றும் சனியாகிய ஏழு கோள்களே வழக்கில் இருந்திருக்ககூடும்.ஆனால் சுந்தரகாண்டத்தில் பலவிடங்களில் "இராகுவின் வாயினின்று வெளிப்பட்ட சந்திரன்போல "என்ற உவமைக் காணப்படுவதால் நிழல்கிரகங்களான இராகுவும்,கேதுவும் இருந்திருத்தல் வேண்டும்.
                                                                



கோள் (Planet ) என்பதன் பொருள் :-


              கோள் எனும் சொல்லுக்கு வடமொழியில் "க்ரஹம்" என்று பெயர்.க்ரஹணம் என்றால் பிடித்தல் என்று பொருளாகும்.எடுத்துக்காட்டாக சூரிய கிரஹணம் என்பதற்கு "சூரியன் பிடிபடுதல் " என்று பொருள் ஆகும்.

         இவ்வாறே பாணிக்ரஹணம் என்று திருமணத்திற்கு பெயர்.பாணிக்ரஹணம் என்பதற்கு "கையை பிடித்தல் "என்று பொருளாகும்.

            ஒவ்வொருவரின் முன்வினைக்கேற்ப நற்பலன்களை அல்லது தீயபலன்களை துய்க்க செய்வதற்காக இவைகள் அவர்களை பிடிக்கின்றன எனும் பொருள்படும்படி க்ரஹணம் என்று பெயரிட்டனர்.மேற்கூறப்பட்ட ஏழு கோள்களுடளுடன் பிற்காலத்தில் நிழற்கிரகங்களான இராகுவையும்,கேதுவையும் சேர்த்து ஒன்பது கோள்களாக கொண்டு பலன்கள் கூற தலைப்பட்டன. இதையே வடமொழியில் "நவகிரஹம் " என்று போற்றுகின்றனர்.

            கோள்களின் அமைப்புகளும்,தன்மைகளும் ; -

                                                       
                   வான்மண்டலத்தில் சூரியனை மையமாக கொண்டு ஏனைய பிற கோள்கள் சுழன்று வருகின்றன்.புதன் முதல் சுற்று வட்டபாதையிலும்,சுக்கிரன் இரண்டாவது சுற்று பாதையிலும் , நாம் வசிக்கும் பூமி மூன்றாவது சுற்றுவட்ட பாதையிலும் சுழன்று வருகின்றன்.

                  சந்திரன் பூமியை சுற்றும் துணைகோளாகும்.செவ்வாய் நான்காவது சுற்று வட்ட பாதையிலும் ,குரு ஐந்தாவது ஐந்தாவது சுற்று வட்ட பாதையிலும் ,சனி ஆறாவது சுற்று வட்ட பாதையிலும் சூரியனை சுற்றி வருகின்றன.

                சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் புதன் மற்றும் சுக்கிரனின் சுற்று வட்டபாதை அமைந்துள்ளதால் இவற்றை "உள்வட்ட கோள்கள்  என்றும் , செவ்வாய்,குரு,சனி ஆகியவை பூமியின் சுற்று வட்டபாதைக்கு பின் சுற்றுவதானல் இவற்றை "வெளிவட்ட கோள்கள் " என்று கூறப்படுகிறது.இராகு ,கேது ஆகியவை நிழற்கோள்களாகும்.இவற்றிற்கு உருவம் கிடையாது.சோதிடவியலில் பூமியை மையமாக பூமியில் வசிக்கும உயிரினங்களுக்கு ஏற்படும் சுப- அசுப பலன்களை பற்றி ஆராய்ந்து கூறுவதால் ஒன்பது கோள்களும்,பன்னிரு இராசிகளில் சுற்றி வருவதாக கருதப்பட்டது.
                                                        


       சூரியன்


                ஒன்பது கோள்களில் முதன்மையானவர் சூரியன் ஆவார்.அனைத்து கோள்களும் சூரியனிடமிருந்தே ஒளியை பெற்று பிரதிபலிக்கின்றன்.சூரியன் ஆத்மாக்காரகன் ,ஆண்கிரகம்,நெருப்புகிரகம்,தன்னம்பிக்கை ,புகழ் மற்றும் கொளரவத்துக்கு காரகர்,தந்தைக்கு காரகர் ,அரசாங்க காரகன் ஆவார்.

              சூரியன் பூமியிலிருந்து சுமார் 9,30,00,000 மைல்கள் ஆகும்.இதன் கண அளவு பூமியைப்போல 13,00,000 மடங்குகளாகும்.சூரியன் ஒரு ராசியை கடக்க சுமார் ஒரு மாத காலமாகிறது.பணிரெண்டு ராசிகளையும் 365 நாள்,15 நாழிகை 32 விநாடிகளில் சுற்றி வருகிறது.

             சூரியன் சிம்ம ராசியை ஆட்சி வீடாகவும் ,மேஷராசியை உச்ச வீடாகவும் அதற்கு ஏழாம் வீடான துலாம் ராசியை நீச வீடாகவும் கொண்டுள்ளது.


             சூரியபகவான் ஆனவர் சுக்கிரன்,சனி ,இராகு மற்றும் கேதுபகவானோடு பகைமையும் ,குரு,சந்திரன் மற்றும் செவ்வாய் பகவான்களோடு நல்ல நட்பு நிலையையும் மற்றும் புதனோடு சம நிலையை பெற்றுள்ளார்.

           சூரியன் மாத ஒரு ராசி வீதமாக சித்திரை மாதத்தில் மேஷ வீட்டிலிருந்து  ஒரு வருடத்திற்கு பணிரெண்டு ராசிகளையும் சுற்றி வருகிறது.

              சூரியபகவானின் நட்சத்திரங்களாவன : கார்த்திகை,உத்திரம் ,உத்திராடம் ஆகும்.இதன் திசை ஆறு ஆண்டுகளாகும்.இதன் தேவதை சிவன் ஆகும்.சூரியபகவான் செந்தாமரை மலரையும்,கோதுமை தானியத்தையும் ,மாணிக்க இரத்தினத்தையும்,தாமிரம் உலோகத்தினையும்,நிறங்களில் சிவப்பையும்,வாஸ்திரங்களில் சிவப்பையும்,தாமஸ குணத்தையும்,குரூரசுபாவத்தையும்,கார சுவையையும்,எருக்கு சமித்தையும் கொண்டுள்ளது.

           தேர் மற்றும் மயிலையும் வாகனத்தையும்,நடு திக்கையும்,மார்பு அங்கத்தையும்,எலும்பு தாதுவினையும்,பித்தநாடியையும்,ஆண்கிரகமாகவும்,வட்ட ஆசனத்தையும்,கலிங்க தேசத்தையும்,காலனை உபகிரகமாகவும் ,ஏழாம் பார்வையையும் கொண்டது.

சூரியனின் வேறுபெயர்களாவன் :

              ரவி,ஆதித்தன்,பரிதி,பானு,தினகரன்,கதிரவன்,மார்த்தான்டன்.
                    சூரியன் பகவான் ஒருவருடைய சாதகத்தில் பலப்படும்போது அரசாங்க யோகத்தையும்,அரசாளும் யோகத்தையும் மற்றும் தந்தையால் லாபத்தை பெறக்கூடிய வாய்ப்பையும் தருகிறது.
தொடரும்.....

              (தங்களது சாதக பலனை நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் போன் வழியாக சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பலன் பெறலாம்.தாங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை இமெயிலிலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ அல்லது போன்வழியாகவோ தந்து கட்டணம் செலுத்தும் விபரங்களையும் பெறலாம் )



                                          


  அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
   M.SC,MA,BEd,
  சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.


தொடர்புக்கு

                     செல்


                     740 257 08 99
                        97 151 89 647


        வாட்ஸ்அப்
          97 151 89 647


Mail id

masterastroravi@gmai.com
********************************************************************************