சோதிடம் என்னும் அற்புத புதையல்
செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
மனித வாழ்வினை நிர்ணயிப்பதில் கிரகங்களின் பங்கு அளப்பறியது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ளவும் மேலும் சோதிடம் என்பது அறிவியலின் ஒரு பிரிவு என்பதை புரியவைக்கவும்தொடர்ந்து முகநூலிலும் மற்றும் எனது வலைதளங்களிலும் எழுதி வருகிறேன்.எனது முகநூல் பக்கத்தில் சோதிடர்ரவிச்சந்திரன்,ஜோதிட குறுந்தகவல்கள் மற்றும் ஜோதிடகவியரங்கம் என்ற வெவ்வெறு facebook page பகுதியில் எழுதி வருகிறேன்.சோதிட ஆர்வலர்கள் அனைவரும் படித்து தொடர்ந்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நமது வானவீதியில் 360 பாகையில் அதாவது முழு நீள வட்டத்தில் கிரகங்கள் சுற்றி வருகிறது.இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை கிரகங்கள் அனைத்தும் பூமியை மையமாக கொண்டு சுற்றி வருவதாக கருதப்பட்டது.இதனை "புவி மையக்கோட்பாடு " என அழைத்தனர்.
கோபர் நிக்கஸ் காலங்களுக்கு பிறகு கிரகங்கள் அனைத்தும் சூரியனை மையமாக சுற்றி வருவதாக கருதப்பட்டது.இயேசுவுக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க விஞ்ஞானி அரிஸ்டார்ச்சஸ் பிரபஞ்சம் மையம் கதிரவனே தவிர பூமியல்ல என்பதை கண்டுபிடித்தார்.
\ இந்த கோட்பாட்டினை "அரிஸ்டார்ச்சஸ் கோட்பாடு அல்லது கதிர் மையக்கோட்பாடு (ஹீலியோ சென்டிரிக் பிரின்சிபில் ) என்று புகழ்பெற்றது.
\ இந்த கோட்பாட்டினை "அரிஸ்டார்ச்சஸ் கோட்பாடு அல்லது கதிர் மையக்கோட்பாடு (ஹீலியோ சென்டிரிக் பிரின்சிபில் ) என்று புகழ்பெற்றது.
பிறகு "தாலமி " அதை மாற்றி பூமியே மையம் என மறுப்பு தெரிவித்தார்.
மறுபடியும் "பிரபஞ்ச மையம் கதிரவனே "என்ற உண்மையை நிலைநிறுத்த ஆயிரம் ஆண்டுகள் பிடித்ததன.கெப்ளரும்,கோபர்நிக்ஸ் வந்துதான் பிற்காலத்தில் அதை நிலை நாட்ட போராட வேண்டியிருந்தது.எனவே கிரேக்க விஞ்ஞானி அரிஸ்டாரச்சஸ் கண்டு பிடித்த உண்மை நீண்ட காலம் மறைந்து கிடந்து கோபர் நிகஸ் பழைய கருத்தை திறந்து பார்த்து "பிரபஞ்ச மையம் சூரியனே "என பிரகனபடுத்தினர்.
இவர் காலத்திற்கு பிறகுதான் சூரியகுடும்பம் எனும் கருத்து நிலை நாட்டப்பட்டது.
எனவே சூரியனை மையமாக கொண்டு நவகோள்களும் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.
எனவே சூரியனை மையமாக கொண்டு நவகோள்களும் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.
வானவீதியில் 360 பாகையில் சுற்றி வரும் கிரகங்கள் ஜெனன காலத்தில் அவை பெற்றிருக்கும் பாகை அடிப்படையில் பணிரெண்டு ராசிகளில் கிரகங்கள் வைக்கப்படுகிறது.ஒரு ராசிக்கு முப்பது பாகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இருபத்தெழு நட்சத்திரங்களில் ஒரு ராசிக்கு இரண்டெகால் பாதம் அடிப்படையில் பணிரெண்டு ராசிகளுக்கும் நட்சத்திரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது.ஒரு ராசிக்கு முப்பது பாகை என்பதால் ஒரு கிரகம் ஒரு ராசியில் ஒரு பாதம் கடக்க 3 பாகை மற்றும் 20 கலைகள் வீதம் ஒரு நட்சத்திரத்தை கடக்க 13 பாகை மற்றும் 20 கலைகள் நகரப்பட வேண்டும்.ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதம் வீதம் பணிரெண்டு ராசிகளுக்கு 108 பாதங்கள் ஆகும்.
கிரகங்களில் புதன் பகவானும் மற்றும் சுக்கிரபகவானும் சூரியனிற்கு மிக அருகில் இருப்பதால் உள்வட்ட கிரகங்கள் ஆகும்.இதில் புதன் பகவான் முப்பது பாகைக்குள் சூரியன் இருக்கும் வீட்டிற்கு முன் மற்றும் பின் என இருக்கும்.இதேபோல சுக்கிரபகவான் அறுபது பாகை வித்தியாசத்தில் சூரியன் இருக்கும் வீட்டிற்கு முன் ,பின் என இருக்கும்.
எனவே ஒருவருக்கு கணிக்கப்பட்ட சாதகம் சரியா ? என்பதை எளிதாக கண்டறிய வழிமுறையானது ஒருவருக்கு கணிக்கப்பட்ட சாதகத்தில் புதன்பகவான் ஆனவர் சூரியனோடு அல்லது சூரியனுக்கு முன் மற்றும் பின் ஒரு வீட்டிற்குள்தான் இருக்கும்.
சுக்கிரபகவான் ஆனவர் சூரியனோடோ அல்லது சூரியனுக்கு முன் மற்றும் இரண்டு வீடுகள் வித்தியாசத்திற்குள்தான் இருக்கும்.ஆதலால் சுக்கிரன் மற்றும் புதனின் இடத்தை எளிமையாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.
இதேபோல சாதக கட்டத்தில் சூரியனின் இடத்தையும் எளிதாக கண்டறியலாம்.சூரியன் ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் பணிரெண்டு ராசிகளையும் பணிரெண்டு மாதம் சுற்றி வருகிறது .இவையே ஒரு ஆண்டு ஆகும்.
சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் பிரவேசிக்கிறது.இவ்வாறாக ஒரு ராசிக்கு ஒரு மாதம் சுற்றி வருவதால் சாதகரின் பிறந்த மாதத்தை கொண்டு சூரியன் இடம்பெறும் ராசியையும் எளிதாக கண்டறியலாம்.
இதில் உள்ள அறிவியல் உண்மையை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குகிறேன் வாருங்கள்.சித்திரை மாதத்தில் வெயில் அதிகமாக தனது முழு உஷ்ணத்தையும் காண்பிப்பதைதான் சிம்பாலிக்காக உணர்த்தவே சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் ஆகும்.அதே நேரத்தில் அதன் ஏழாம் ராசியில் ஐப்பசி மாதம் மழைகாலம் என்பதால் சூரியனின் உஷ்ணத்தன்மை குறையும் என்பதால் இங்கு சூரியன் நீசமாகி விடுகிறது.
ஒருவர் ஜெனித்த சாதகத்தில் அமாவாசை காலங்களில் அல்லது இரண்டேகால் நாளில் முன் மற்றும் பின் சூரியனும் மற்றும் சந்திரனும் ஒருவரது சாதகத்தில் ஒரு ராசியில் இணைந்திருக்கும்.
பொளர்ணமி காலத்தில் சூரியனும் மற்றும் சந்திரபகவானும் ஒன்றுக்கொன்று 180 பாகையில் அதாவது ஒரு வீட்டிற்கு ஏழாவது வீட்டில் சூரியனும் மற்றும் சந்திரபகவானும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளூம்.
இதேபோல ராகு மற்றும் கேதுக்களுக்கு இடமானது ஒரு சாதகத்தில் ராகு இடம்பெறும் ராசிக்கு ஏழாமிடத்தில் அதாவது 180 பாகை நேர்கோட்டில் இருக்கும்.
மனதுக்காரன் எனப்படும் சந்திரபகவான் ஒரு ராசிக்கு 21/4 நாள் வீதம் இருபத்தெழு நாட்கள் பணிரெண்டு ராசிகளையும் சுற்றி வருகிறார்.
சூரியனும் ,சந்திரனும் இணைந்து ஒரு ராசியில் இருப்பதை அமாவாசை ஆகும்.சூரியனை விட்டு பிரிந்து சமசப்தமாக சூரியனுக்கு ஏழாவது ராசிக்கு சந்திரன் வருவதையே பொளர்ணமி என்கிறோம்.இவ்வாறாக அமாவாசை காலத்திலிருந்து பொளர்ணமி காலம் வரை இடைப்பட்ட காலங்களிலினை பதினைந்து திதிகளும் வளர்பிறை அல்லது பூர்வபட்ச அல்லது சுக்கில பட்ச திதி என்கிறோம்.இதுவே வளர்பிறை காலம் ஆகும்
. இதேபோல பொளர்ணமி காலத்திலிருந்து அமாவசை காலம் வரை உள்ள காலத்தை தேய்பிறை அல்லது கிருஷ்ணபட்சம் அல்லது அமரபட்சம் என்கிறோம்.
. இதேபோல பொளர்ணமி காலத்திலிருந்து அமாவசை காலம் வரை உள்ள காலத்தை தேய்பிறை அல்லது கிருஷ்ணபட்சம் அல்லது அமரபட்சம் என்கிறோம்.
வளர்பிறை சந்திரன் சுபராகவும்,தேய்பிறை சந்திரனை பாவியாகவும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.எனவேதான் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு வளர்பிறை உகந்தது என்பதால் வளர்பிறை காலங்களில் வரும் திதிகளை எடுத்து( அஷ்டமி,நவமி தவிர ) சுபகாரியங்கள் வீடுகளில் நிகழ்த்தப்படுகிறது.
சந்திரனின் இடத்தை கண்டறிய சாதகர் ஜெனித்த நேரத்தில் பால் வீதியில் என்ன நட்சத்திரம் தெரிகிறதே அந்த நட்சத்திரமே சாதகரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.அந்த நட்சத்திரம் இடம் பெறும் வீடே சாதகரின் ஜென்ம ராசி ஆகும்.
அந்த நட்சத்திர அதிபதியே சாதகரின் ஜென்ம திசை ஆகும்.
அந்த நட்சத்திர அதிபதியே சாதகரின் ஜென்ம திசை ஆகும்.
அந்த நட்சத்திரம் ஜெனன காலத்தில் எவ்வளவு தூரம் அந்த நட்சத்திர பாதத்தில் கடந்துள்ளதே அவரின் நட்சத்திர பாதம் ஆகும்.பாத அளவிற்கு ஏற்ப திசையில் சென்றது போக சாதகரின் ஜெனன கால திசை இருப்பு இருக்கும்.இதனை அடிப்படையாக வைத்து கால வயதிற்கு ஏற்ப சாதகரின் நடப்பு திசை,புத்தி மற்றும் அந்தாரம் கணக்கிடப்படுகிறது.
நன்றி! தொடரும்...
(தங்களது குடும்ப அங்கத்தினரின் சாதக பலன் ,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போனின் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.நீங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )
எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647
97 151 89 647
எனது அலைபேசி
740 257 08 99
97 151 89 647
740 257 08 99
97 151 89 647
My Email id
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My facebook id. Search it below the address
m.facebook.com/ravichandran3538039
எனது முகநூல் பக்கபகுதி
m.facebook.com/சோதிடர்ரவிச்சந்திரன்-1596147833982373
No comments:
Post a Comment