Monday 28 March 2016

கிரகங்கள் படுத்தும் பாடு-முகநாலில் நான் எழுதி வரும் நீண்ட தொடர்

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

ல்லாம் வல்ல பரம்பொருளின் ஆசியோடு முகநூலில் மனித வாழ்வில் கிரகங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்து துல்லியமாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு நீண்ட தொடராக "கிரகங்கள் படுத்தும் பாடு "-எனும் தலைப்பில் எழுதி வருகிறேன்.சோதிடத்தில் ஆர்வமுடையவர்கள் கீழ்கண்ட முகநூல் லிங்கை கிளிக செய்து எனது முகநூல் டைம்லினிற்கு சென்று படித்து அறிய பல கருத்துக்களை பெற்றிடுங்கள்.

Respected viewers,
  Do you want to know more information about Astrology field ?
Please join my facebook link.


MY FACEBOOK LINK
m.facebook.com/ravichandran3538039

Do you want to consult  your horoscope through your Cell,Conduct my cell and whatsup no:
97 151 89 647


Mail id:
masterastroravi@gmail.com


My Account details:


P.Ravichandran
Acc no : 105201000004608
Ifs code: IOBA0001052
MICR CODE; 622020016.
BANK; IOB
BRANCH; REGUNATHAPURAM


Saturday 12 March 2016

ராஜயோகங்கள்-ஒரு சிறப்பு பார்வை


                       ராஜயோகங்கள் - ஒரு சிறப்பு பார்வை

                                

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                                 ஒரு மனிதன் எவ்வளவுதான் அறிவுநிரம்பப பெற்று இருந்தாலும்,கெட்டிகாரனாக இருந்தாலும் அவனுக்கு குறைந்த அளவாவது  யோகம் என்பது இருக்க வேண்டும்.இதனைதான் நமது முன்னோர்கள் அழகாக ஒற்றைவரியில் எடுத்துகூறியிருப்பார்கள்.
அதாவது "மலையளவு உழைத்தாலும் கடுகளவு யோகமாவாது இருக்கவேண்டும் " என்பர்.நமது சோதிட சாத்திரத்தில் எண்ணற்ற ராஜயோகங்கள் உள்ளது.இதில் அன்றாட வாழ்வில் நடைமுறையில் அனுபவித்து பார்க்கின்ற அனுபவிக்கின்ற யோகங்களில் ஒன்றான "பஞ்சமகா யோகங்களை "பார்ப்போம்.

           செவ்வாய் பகவான் உச்சம்,ஆட்சம் போன்ற பலம்பெற்றால் #ருசக யோகம் ஆகும்.

         புதன் பகவான் பலம்பெறுமெனில் பத்ரயோகமும்,


        சுக்கிரன். பலம்பெற்றால் #மாளவீகாயோகம் தருகிறது.

         குரு பகவான் பலம்பெற்றால் ஹம்சயோகம் ஆகும்.

      சனி பகவான் பலம்பெறும்போது #சசயோகமும் கொடுக்கிறது.

         இந்த ஐந்தும் சிறந்த இராஜயோகங்களாகும்.இவை நற்பலனை அதன் தசைகளில் தரவேண்டுமெனில் அக்கிரகங்கள் பாதகாதிபதியாகவோ அல்லது ஆறு அல்லது எட்டாமாதிபதி போன்ற கெட்ட ஸ்தானங்கள் பெறக்கூடாது.மேலும் வக்ரம் மற்றும் அஸ்தமனம் பெறக்கூடாது.

                                   இவைமட்டுமல்லாமல் குருசந்திரயோகம்,கெஜகேசரியோகம்,குருமங்களயோகம்,பிருகுமங்கள யோகம்,சசிமங்கள யோகம்,தர்ம-கர்மாதிபதி யோகம்,கேந்திரகோணாதிபதியோகம்,நீசபங்க யோகம்,அஷ்டலெட்சுமி யோகம்,சந்திர அதியோகம்,இலக்கன அதியோகம், வஸூமத் யோகம்,புஷ்கலாயோகம்,கேஸரியோகம்,நரபதியோகம்,அமலயோகம்,சக்கரவர்த்தியோகம்,கர்மயோகம்,மிருகயோகம்,தூபயோகம்,வீணையோகம்,மனவிஷ்ணுயோகம்,மந்தாகினியோகம்,பூபயோகம்,பாசகயோகம்,சுக்கிரயோகம் மற்றும் கிரகமாறி யோகம் இதுபோன்ற எண்ணற்றயோகங்கள் உள்ளது.

          இந்த பதிவிலும் அடுத்து தொடர்ந்து வரும் பதிவுகளிலும் ஒவ்வொறு ராஜ யோகங்களையும் விரிவாக அலசி ஆராய்ந்து பார்ப்போம்.
இதில் முதலில் சாதாரன மனிதனையும் சாதனையாளன் ஆக்கும் முக்கியமான யோகங்களில் ஒன்றான " பரிவர்தனை யோகம் "-பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.
                                                                 


பரிவர்தனை யோகம் அல்லது கிரகமாறி யோகம்:-


              ஒரு வீட்டின் கிரகம் மற்றொரு வீட்டிலும்,மற்றொரு வீட்டின் கிரகம் முதல் வீட்டிலும் இடம் விட்டு இடம் மாறி உட்கார்ந்து கொள்வது இவ்விதயோகமாகும்.

            பழனிமலை முருகனின் அருள்பெற்ற சித்தர் போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் மருத்துவம் பற்றி புலிப்பாணி -500,என்ற நூலும்,சோதிடம் பற்றி புலிப்பாணி -300 எனும் நூலும் எழுதியுள்ளார்.
அவர் தனது புலிப்பாணி -300 என்ற நூலில் கிரகங்கள் தமக்குள் பரிமாறிக்கொள்வதாடல் உண்டாகும் யோகத்தை அழகாக கவிவடிவில் தந்து இருப்பார்.படித்து ருசியுங்கள்.

      "தானேன்ற கோள்களது மாறி நிற்க தரணிதனில் போர்விளங்கும் தனமுள்ளோன் ஊனேன்ற உடல்நாதன் பாம்புகூடில் உத்தமனாம் யோக்கியனாம் புனிதன் சேயன்  கோனென்ற குமரியுட பூசை செய்து கொற்றவனே குவலயத்தில் வாழ்ந்திருப்பான்  மானென்ற மறலி பயம் இல்லையில்லை மைந்தனே இடமறிந்து வழுத்துவாயே"

பாடலின் விளக்கம்:-

   நல்ல பரிவர்தனை யோகம் பெற்றவன் நற்புகழுடன்,செல்வத்துடனும் இருப்பான்.ஒழுக்கசீலனாகவும்,பெண்தெய்வ வழிபாடு உடையவனாக இருப்பான்..எமனுக்கே பயப்படாத ஆத்ம ஞானம் நிறைந்தவனாக இருப்பான்.இவை யாவும் கிரகங்கள் அமரும் இடத்தை உணர்ந்து பலன் உரைப்பாயாக.

பரிவர்தனை யோகத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1)ராஜயோக பரிவர்தனை

2)அவயோக
பரிவ

ர்தனை

3)விபரீத யோக பரிவர்தனை


மேற்கண்ட மூன்று வகையான பரிவர்தனை யோகத்திற்கான விளக்கங்களை பெறுவோம்.


இராஜயோக பரிவர்தனை:-


    திரிகோணதிபதிகள் (1,5,9) தங்களுக்குள் பரிவர்தனை பெறுவதும்,கேந்திராதிபதிகள்(1,4,7,10) ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும்,கேந்திர கோணாதிபதிகள் தங்களுக்குள் இடம் மாறிக்கொள்வதும் ஆகும்.

.இப்படி அமர்ந்த இவர்களுக்குள் தனலாபாதிபதி பரிமாறிக்கொண்டால் முதல் தரமான ராஜயோகமாகும்.

இதேபோல தன-பாக்கியாதிபதி பரிமாறிக்கொள்ளுதலும் மிகுந்த தனயோகத்தை அத்திசை காலங்களில் கொடுக்கும்.

பாக்கியாதிபதி எனப்படும் தர்மாதிபதியும்,ஜீவனத்தான் எனப்படும் கர்மாதிபதியும் பரிமாறிக்கொள்வது இதனை "தர்ம-கர்மாதிபதி யோகம்"என்பர்.

பாக்கியலாபாதிபதி பரிமாறிக்கொள்வது பாக்கியயோகம் நிரம்ப பெற்றவனாவான்.

லக்கனாதிபதியும்,புத்திரஸ்தானதிபதிகள்  பரிமாறிக்கொள்வதும்,நான்கு மற்றும் ஐந்தாமாதிபதி பரிமாறிட்கொள்வதும் நல்லது.இது ஒரு சிறந்த யோகமாகும்.நல்ல அறிவாற்றலையும்,கல்விநிலையையும் அளிக்கும்.


இதனை தொடர்ந்து அடுத்து நாம் பார்க்க இருப்பது
அவயோக பரிவர்தனை:-

    திரிகோணாதிபதிகளுடனும்,கேந்திராதிபதிகளுடனும் துர்ஸ்தானாதிபதிகளான ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாம் அதிபதிகள் பரிவர்தனை பெறுவது ஆகும்.