சன்னியாச யோகம்
ஸ்ரீபத்ரகாளியம்மன் அருளுடன்
ஒருவர் பிறக்கும் போது சாதரன நிலையில் பிறந்து பிறகு சந்நியாச நிலைக்கு உயர்ந்தவர்கள் பலருண்டு.
கொளதம புத்தர் அரச குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அவன் பிறந்த உடனே அவர் பிற்காலத்தில் சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்வார் என அவர்களது அரச சோதிடர் புத்தருடைய தந்தையிடம் கூறியவுடன் அவர் தன் மகன் சித்தார்த்தான் சந்நியாச வாழ்வு மேற்கொள்ளக்கூடாது என அவரை அறையில் அடைத்தே வைத்திருந்தார்.
அங்கு அவருக்கு சகல வசதிகளையும் கிடைக்கும்படி செய்தார். வாடாத மங்கைகளை வைத்து பணிவிடை செய்ய வைத்தார்.அங்கு உள்ள பூச்செடியில் உள்ள பூ கூட உதிர்ந்து விழுவது மகனுக்கு தெரியக்கூடாது என பூ வாடி விடுவதற்கு முன்னே பறிக்கும்படியான ஆட்களை நிரப்பி வைத்திருந்தார்.ஏனெனில் பூ உதிர்ந்து விழுவதை பார்த்துக்கூட ஏன் ?எதற்கு ? வினா எழுப்பி ஞானம் பெறக்கூடும் என எண்ணினார்.
அங்கு அவருக்கு சகல வசதிகளையும் கிடைக்கும்படி செய்தார். வாடாத மங்கைகளை வைத்து பணிவிடை செய்ய வைத்தார்.அங்கு உள்ள பூச்செடியில் உள்ள பூ கூட உதிர்ந்து விழுவது மகனுக்கு தெரியக்கூடாது என பூ வாடி விடுவதற்கு முன்னே பறிக்கும்படியான ஆட்களை நிரப்பி வைத்திருந்தார்.ஏனெனில் பூ உதிர்ந்து விழுவதை பார்த்துக்கூட ஏன் ?எதற்கு ? வினா எழுப்பி ஞானம் பெறக்கூடும் என எண்ணினார்.
திருமணமும் நடத்திவிட்டார்.ராகுல் என்ற மகனும் பிறந்துவிட்டான்.இனி தன் மகன் மாற மாட்டான் என வீதியை சுற்றி பார்க்க அனுமதி அளித்தான்.அங்கு பிணியுற்றோர்,இறந்தோர் போன்றவர்களை பார்த்த பிறகு மனித துன்பத்திற்கு காரணம் என்ன ? என்னும் வினா அவர் உள்ளத்தில் எழுந்து அதன் விளைவாக ஒருநாள் மனைவி மக்களையே விட்டு பிரிந்தார்.கயா எனும் மரத்தடியில் இருந்து தவமிருந்து "ஆசையே துன்பத்திற்கு காரணம்,ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம் " என விடை கண்டு ஞானம்பெற்றார்.
நான் இக்கதையை(சோதிட சம்பந்தப்பட்ட கருத்துக்களை அதிகம் பதிவிட விரும்பியதால் புத்தர் கதையை சுருக்கிவிட்டேன்)
சோதிடம் அறியாத காலத்தில்
இளம்வயதில் அவனது சாதகத்தை பார்த்த சோதிடர் என்ன கூறியிருப்பார் ? என வினா எழும்பியதுண்டு.
இளம்வயதில் அவனது சாதகத்தை பார்த்த சோதிடர் என்ன கூறியிருப்பார் ? என வினா எழும்பியதுண்டு.
அதற்கான விடையை சோதிடராகிய பிறகுதான் அதற்கான விடையை பெற்றேன்.ஒருவரது சாதகத்தில் கர்மாதிபதி என அழைக்கப்படும் பத்தாம் அதிபதியுடன் இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் கூடி 2,4,7,8,10 மற்றும் 12 ஆம் இடங்களில் நிற்கும் சாதக அமைப்பை பெற்றவர் சந்நியாசி ஆவான் என்பது சோதிட விதியாகும்.
மேலும் புலிப்பாணி சித்தரும் தனது புலிப்பாணி சோதிடத்தில்
"கேளப்பா ஈரைந்தில் முக்கோள் நிற்கில் கெதியுள்ள சந்நியாச யோகம் யோகம்" என்கிறார்.
"கேளப்பா ஈரைந்தில் முக்கோள் நிற்கில் கெதியுள்ள சந்நியாச யோகம் யோகம்" என்கிறார்.
கொளதம புத்தரின் சாதக விபரம்
கடக லக்கனம்,துலாம் ராசி
6-ல் கேது
10-ல் சூரியன்,செவ்வாய்,குரு,சுக்கிரன் மற்றும் சனி (ஐந்து கிரகங்கள்.
11-ல் புதன்
12-ல் ராகு
எனவே கொளதம புத்தருடைய சாதகத்தில் பத்தாம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று ருசகயோகமும் பெற்று இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து இருந்ததால்தான் இளம்வயதிலே சோதிடர் இவரை சந்நியாசி ஆவார் என கூறியதும் அதேபோல பிற்காலத்தில் மாறியதும்தான் சோதிடத்திற்கு வரலாற்று ரீதியான சான்றுகளாகும்.
இவை மட்டுமல்லாயமல் சூரியன் உச்சம் பெற்று குரு உடன் சேர்ந்து இருப்பது ஆன்மீகத்தில் சிறந்த தலைவராகலாம்.எனவேதான் புத்தமதத்தை நிறுவசெய்து அதன் தலைவராக மாற்றியது.மேஷத்தில் கர்மக்காரகன் என சனி பகவான் நீசம் பெற்று சூரியன் உச்சம் பெற்று நீசபங்க யோகத்தையும் உண்டாக்கியது.
ஒரு மனிதனை ஐந்தாமிடத்தில் கேது பகவான் அமர்வதும் அதுவே கடக வீடாக இருந்து கடக கேதுவும் ,மகர ராகுவும் சந்நியாச வாழ்வு மேற்கொள்ள வைக்கும்.
எனவேதான் ஜோதி ராமலிங்க சுவாமி (வள்ளலார்) அவர்களது சாதகத்தில் கடக கேதுவும்,மகர ராகுவும் இடம் பெற்ற காரணத்தால் சுவாமி அவர்களுக்கு இயற்கையிலே தெய்வ தன்மை ஏற்பட்டது.
இவருக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் ,கேது சேர்க்கை சந்நியாச வாழ்க்கையை தந்தது.இவர் இளமைக்காலத்தில் மழைக்கூட பளளிக்கூடம் ஒதுங்கியதில்லை .ஆனால் இவர் எழுதிய திருவருட்பா முதலான பல நூல்களுக்கு தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களால் கூட தொகுக்க முடியாத அளவிற்கு புலமை வாய்ந்ததாக திகழ்ந்தது.
வள்ளலார் சாதக விபரம்
மீனம் லக்கனம்,துலாம் ராசி,சித்திரை நட்சத்திரம்-4-ம் பாதம்
3-ல் சனி
4-ல் குரு
5-ல் செவ்வாய்,கேது
7-ல் சூரியன்,சுக்கிரன்
8-ல் புதன்,சந்திரன்
11-ல் ராகு.
ஒருவரது சாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று ஞானகாரகன் கேது பகவானையும் மற்றும் கர்மக்காரகன் சனி பகவானை சமசப்தமாக பார்காமல் பார்த்து அவரது குடும்ப மற்றும் களஸ்திரஸ்தானம் பலவீனப்படும்போது சம்சார வாழ்வை விட்டு விலகி சந்நியாச வாழ்வை மேற்கொள்வான்.
"கட்டிய மனையாள் ஏறுக்குமாறானால் சற்றேனும் கூசாமல் சந்நியாசம் கொள்"எனும் கூற்றுப்படி லொளகீக வாழ்வை வெறுத்து சந்தர்ப்ப வசத்தால் சந்நியாசி ஆவாருண்டு.
"கட்டிய மனையாள் ஏறுக்குமாறானால் சற்றேனும் கூசாமல் சந்நியாசம் கொள்"எனும் கூற்றுப்படி லொளகீக வாழ்வை வெறுத்து சந்தர்ப்ப வசத்தால் சந்நியாசி ஆவாருண்டு.
சாதக அலங்கார பாடலில் கூறியுள்ளபடி
"வேண்டிடும் செவ்வாய் ரவி மதி மூவர் கூடி விரும்பு பத்தாமிடத்திலிருக்க மின்னார் பொன்தனக்கும் ஈண்டிய தேர் விரிவில்லாச் சன்னியாசி ஆவான்"
சூரியன்,சந்திரன்,செவ்வாய் கூடி பத்தாமிடத்தில் இருந்தாலும் இவர்களை குரு பார்த்தாலும் இவன் எப்பொழுதும் சன்னியாசியாக இருப்பான்.
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம் சக்தி ஜோதிட ஆய்வு மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு.
சோதிடர்ரவிச்சந்திரன்
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம் சக்தி ஜோதிட ஆய்வு மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு.
எனது வாட்ஸ்அப் மற்றும் செல் எண் இரண்டும் ஒரே எண்
அவை 97 151 89 647
மற்றொரு செல்
740 257 08 99
அவை 97 151 89 647
மற்றொரு செல்
740 257 08 99
(தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு சோதிட பலனை நன்கு ஆராய்ந்து ஒவ்வொறு பாவத்திற்கு உண்டான பலனை விரிவாக போன் வழியாக பெற தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு)
No comments:
Post a Comment