Saturday 22 August 2015

( 5 ) குழந்தைபாக்கியம் காலதாமதம் ஆவதற்கு சோதிட ரீதியான விரிவான விளக்கம்....

குழந்தை பாக்கியம் காலதாமதம் ஆவதற்கு சோதிட ரீதியான விளக்கம்,

                                                     

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

அனைவருக்கும் வணக்கம்,

                ஒரு தம்பதியர்களிடம் திருமணம் முடிந்தவுடன் உறவினர்களும்,நண்பர்களும் மற்றும் சமூகமும்  கேட்கும் அடுத்த கேள்வி வீட்டிலே ஏதாவது விசேஷமா? என சூசகமாக கேட்கும் கேள்வியிலே  அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதுதான் .

இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆனால் நேரடியாக கேட்டுவிடுவார்.என்னப்பா ஏதாவது டாக்டர்களிடம் காட்டினாயா இல்லை ஜாதகம் ஏதாவது பார்த்தீர்களா?என கேள்வி மேல் கேள்வி கேட்டு மனம் நோக செய்துவிடுவார்கள்.

குழந்தை பாக்கியம் சிலருக்கு மட்டும் தாமதமாவதற்கும்,ஒரு சிலருக்கு அந்த பாக்கியம் கிடைக்காமல் போவதற்கும் காரணத்தையும்,அதற்குரிய பரிகார பலனையும் அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


                                                      




புத்திர ஸ்தானமும்,அதன் அதிபதியும்

              புத்திர ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடத்தில் பாவிகள் என்றழைக்கப்படும் ராகு,கேது,சனி போன்ற கிரகங்கள் இருந்து சுபர் பார்வையற்று இருப்பினும்,
புத்திர ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்தாமிட அதிபதி நீசம்,அஸ்தமனம்,பகை பெற்று இருந்தாலும்,அல்லது 6,8,12 போன்ற  மறைவிடங்களில் இருந்தாலும்
மேலும் புத்திர ஸ்தானாதிபதி பாவர் ந்ட்சத்திர சாரம் பெற்று பாவர் சேர்க்கை மற்றும் பார்வை பெற்று 6,8,12 போன்ற மறைவிடங்களில் இருப்பின் இருப்பினும் புத்திர தோஷம் ஆகும்.

                                                          

 

புத்திரகாரகர் எனப்படும் ஸ்ரீகுரு பகவான்.

              ஸ்ரீ குரு பகவான் நீசம்,அஸ்தமனம்  மற்றும் பகை பெற்று  6,8,12 போன்ற மறைவிடங்களில் இருந்து பாவர் நட்சத்திர சாரமும்,சுபர் பார்வையற்று இருப்பினும் புத்திர தோஷமாகும்.


ஒன்பதாமிடம்

      புத்திரஸ்தானம் ஐந்திற்கு ஐந்தாமிடமாக ஒன்பதாம் இடம் திகழ்வதால் ஒன்பதாமிடத்தையும் நன்கு கவனிக்க வேண்டும்.


ஜோதிடர்களின் பங்கு

திருமண பொருத்தம் பார்க்கும் போது இருவருடைய ஜாதகப்படி பால் பொருத்தம் மற்றும் யோனி பொருத்தம் இருக்கிறதா? என பார்க்க வேண்டும

தம்பதியர் இருவருக்கும்  பால் உள்ள மரம் வந்து யோனி பொருத்தம் இருந்தாலும் ஜாதக கட்ட ரீதியாக இருவருக்கும் மேற்குறிப்பிட்டப்படி ஐந்தாமிடம் மற்றும் அதன் அதிபதி,புத்திரகாரகன் குரு ஆகியவர்களின் நிலையறிய வேண்டும்.

ஏனைய தோஷம் உள்ளவர்களுக்கு(செவ்வாய் தோஷம்,ராகு தோஷம்,சனி தோஷம்.....) தோஷம் உள்ளவர்களை இணைத்தாலும் ,
ஆனால் புத்திர தோஷம் உள்ள ஒரு ஆணின் ஜாதகத்திற்கு புத்திர தோஷம் இல்லாத பெண்ணின் ஜாதகப்படி குழந்தை இருக்க வாய்ப்பு உண்டு.

இருவருக்கும்  ஜாதக கட்ட ரீதியாக
புத்திர தோஷம் உள்ள தம்பதியர்களை இணைக்காமல் இருத்தலே நலம்.
இது ஜோதிடர்களின் தலையாய கடமையாகும்.இதுவரை புத்திர தோஷம் ஏற்பட அடிப்படையான காரணத்தை பகவானின் அருளாளும்,குருவருளாளும் எனக்கு தெரிந்த விஷயத்தின் அடிப்படையில் விளக்கினேன் .


                                                                               


இனி
புத்திர தோஷம் ஏற்பட

பல்வேறு ஜோதிட நூல்கள் கூறும் காரணங்கள்

மாந்தீரிக சக்கரவர்த்தி ஸ்ரீ குருவாயூரப்ப தாஸன் எழுதியது

                 1) சூரியன்,சுக்கிரன்,புதன் ஒன்று கூடி பெண்களுக்கு ஐந்தாம் இடத்தில் இருப்பின் கருச்சிதைவு.

                2 ) 7,8 க்கு உடையவர்கள் ஐந்தில் கூடினால் புத்திர சேதம் புத்திர தோஷம் ஏற்படுகிறது.இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

               3 ) லக்கினம் மீனமாகி 5-ம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசம் பெற்ற ஜாதகருக்கு முதல் தாரத்திற்கு குழந்தை இல்லை.ஆனால் இளைய தாரம் உண்டெண்றால் புத்திரபேறு ஏற்படலாம்.

           4) 1,5,9 -ல் சனி வலுத்து சுபர் பாராது இருப்பின் புத்திரதோஷம்.

            5) ஐந்தாம் அதிபன் பாவாதிபன் சனி உடன் கூடியிருப்பின் வீர்ய பலன் குறைந்து நீராகி புத்திரபேறு தடைபடும்.

          6) பெண் ஜாதகத்தில் ஜன்ம லக்கனத்திற்கு உரியவனும்,9-க்கு  உடையவனும் பரிவர்தனை பெற்றால் பிரசவத்தின்போது வயிற்றில் மகவுடனேயே தாயும் மரிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

          7)  பெண்ணுக்கு கடகம் லக்கினமாகி விருட்சகத்தில் சந்திரன் நீசனாகி இருந்தால் ஆண்குழந்தை சொற்பம்(அரிது).

         8) 5-ம் அதிபதியுடன் 6-ம் அதிபதி கூடியிருக்க இதில் ஆறாம் அதிபதி மட்டும் வலுத்திருந்தால்(சூரியர்,சந்திரர்களுக்கு மட்டும்தான் பொருந்துவார்) .இந்த மாதிரியாக கூடிய 5,6 அதிபதிகளை சுபர் யாரும் பார்க்காமல் இருந்தால் அவன் பகைவன் இட்ட சாபத்தால் மகப்பேறின்றி துன்புறுவான்.

          9) 4-ம் இடத்திலும்,12-ம் இடத்திலும் பாவிகள் இருக்க 5-ம் அதிபதியுடன் பாவிகள் கூட அல்லது சனி கூட பெற்ற தாய் இட்ட சாபத்தால் மகப்பெறு அற்று போகும்.

          10) ஒன்பதிலே பாவி இருக்க ஐந்தாம் இட அதிபதியுடன் சனி கூட திரிகோன ஸ்தானங்களில் ஒன்றில் குளிகன்(மாந்தி) இருக்க தந்தை செய்த பாவத்தால் மகவுகள் பிறக்காது.பிறநதாலும் அழிந்துவிடும்.

           11 ) தனுசு அல்லது மீன வீட்டில் சந்திரன் இருக்க ஐந்தாம் இடத்தில்  பாவிகள் இருக்க ,சந்திரனையும் அந்த பாவர்களையும் சுபர்கள் பாராது விட்டால் அவனுக்கு ஓளரஸ் மகவு இல்லை. ஓளரஸ் என்றால் தன் இந்திரியத்திற்கு பிறக்கும் குழந்தை என்பது பொருள்.

        மனைவி வழி தவறிச்சோரம் போய் பிறர் இந்திரியத்திற்கு குழந்தை பிறந்து அதை தகப்பன் தனது என்றே எண்ணி உண்மையை அறியாமல் தன் மகவாக எண்ணி உண்மையை அறியாமல் வளர்ப்பான்.அல்லது
இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்றார்போல் மாற்றான் இந்திரியத்தை ஊசி மூலம் செலுத்தி அதன்மூலம் பெற்ற குழந்தையாக இருக்கும்.


         12) லக்கனத்திற்கு ஐந்தாம் வீட்டை சனி,ராகு,கேது இவைகளில் ஒருவர் சந்திரனுக்கு கேந்திரங்களில் நின்று பார்ப்பாராகில் குழந்தை பிறந்து  இறந்து போகும்.

                                                         




கேரள ஜோதிடத்தில் உள்ளபடி புத்திரபாக்கியம்

            1)  ஐந்துக்குடையவர் புதன் வீட்டில் ஏகனாய்(தனித்து) நின்றால் குழந்தை பாக்கியம் இல்லை.கூட்டுகிரகம் இருந்தால் அல்லது பாரத்தால் மறுதாரம் செய்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறக்கும்.

             2)  குருவோடு சூரியன்  அவருக்கு ஏழில் குஸனும் ,சனியும் சேர அவனுக்கு புத்திரவம்சம் நிற்க வாய்ப்பு குறைவு.சந்திரனும் கூடியிருந்தால் தாய்க்கு தோஷம் ஆகும்.

          3 )  திருவாதிரை அல்லது அஸ்த நட்சத்திரலாவது புத்திரஸ்தானாதிபதி புத்திரர் இருக்க வாய்ப்பு குறைவு.

             4 ) மிருகசீரிடம்,புனர்பூச நட்சத்திரத்தில்5-ம் அதிபதி இருப்பின் வெகுகாலம் கழித்து புத்திரபாக்கியம் ஏற்படும்.

              5 ) புத்திஸ்தானாதிபதி புதனாக இருந்து சனி வீடு ஏறினாலும்,சனியாக இருந்து புதன் வீடு ஏறினாலும் புத்திரபாக்கியம் ஏற்பட வாய்ப்பில்லை.

                                                           




சில்லறைக்கோவை -298 -ம் பக்கம்

*************************************
             லக்கனம்,பஞ்சமஸ்தானம்,ஒன்பதிலும் சனி,ராகு,கேது,மாந்தி இருந்தால் முன் ஜன்மத்தில் செய்த பழிபாவத்தினாலும்,கருவழித்தனத்தாலும்,சர்ப்பத்தை கொன்ற பாவத்தினாலும் சந்தநி இல்லாமல் கலங்குவார்கள்.ஆனால் அதற்குரிய கர்ம சாந்தி செய்ய கீர்த்தி பிரகாசம் பொருந்திய பிள்ளை பிறக்க வாய்ப்பு ஏற்படும்.



மேலும் பல அனுபவகருத்துக்கள்

                  1) புத்திஸ்தானாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று அஸ்தங்கம் ஆனாலும் புத்திரதோஷம் ஏற்படும்.

                 2) 5-ல் ராகு,கேது,செவ்வாய்,சூரியன் மற்றும் சனி யாராவது ஒருவர் இருந்தாலும்,ஐந்தாம் வீடு சனி அல்லது புதன் வீடாகி அவ்வீட்டாதிபதி சனியுடன் இணைந்தாலும் புத்திரயோகம் இல்லை.

                  மேற்கண்ட காரணங்களால் புத்திரதோஷம் ஏற்படுகிறது..புத்திரதோஷங்களை பரிகாரங்களால் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
                                                         
(தங்களது சாதக பலன்,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

     அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
           M.Sc,M.A,BEd

                    சோதிட ஆராய்சியாளர்,
          முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
         வாழ்வியல் ஆலோசகர்
      ஓம் சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
       கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.தமிழ்நாடு.



                   அலைபேசி :9715189647

                   அலைபேசி : 
  740 257 08 99



                   எனது வாட்ஸ்அப் எண்

                               97 151 89 64

Email ; masterastroravi@gmail.com
....