" சாதகத்தில் உள்ள கிரக நிலைகளை எவ்வாறு ஆய்வு செய்து பார்ப்பது.? -ஓர் விரிவான அலசல்.
கிரகங்கள் படுத்தும் பாடு
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
ஒரு சாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பின்வருமாறு கவனிக்கப்பட வேண்டும்.
1) ஒரு கிரகம் உச்சம் பெற்று இருந்தால் அந்த கிரகத்தின் பாகை நிலை அறிந்து உச்ச எல்லைக்குள் அக்கிரகம் உள்ளதா ? என கவனிக்கப்பட வேண்டும்.அக்கிரகம் உச்ச எல்லையை தாண்டி இருக்கும் போது சராசரியான நிலையையே பெற்றிருக்கும்.எனவே உச்சநிலைக்குரிய பலனைத்தருவதில்லை.எனவே உச்சம் பெற்றிருப்பதால் ஆஹா,ஒகோ புகழ்ந்த நிலையில் எதிர்பார்த்த அளவு பலன் தராததற்கு இவை ஒரு காரணம் ஆகும்.
2) வக்ரம்
சில சமயங்களில் கிரகங்கள் பின்னோக்கி சென்றவாறு காணப்படும்.அப்பொழுது அக்கிரகங்களுக்கு பலம் அதிகம்.அவைகளின் தன்மையே மாறிவிடும்.ஒற்றை கிரகங்கள் மகாபலவான்கள்
சந்திரன்,ராகு,கேது வக்கிர கதி கிடையாது.குரு,சனி,புதன்,சுக்கிரன்,
செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்களும் வக்கிரம் அடைகின்றன.
வக்ர கதி என்பது சூரியனால் உண்டாகக்கூடியது.புதன்,சுக்கிரன்,
செவ்வாய்,குரு,சனி ஆகிய ஐந்து கிரகங்கள் இருந்த வீட்டுக்கு ஐந்தில் சூரியன் வரும்போது வக்ரகதி அடைந்து ஒன்பதாம் இடத்திற்கு சூரியன் வரும்போது வக்ர நிவர்த்தி அடைகிறது. மேற்கண்ட ஐந்து கிரகங்கள் இருந்த வீட்டிற்கு எந்த இடத்தில் சூரியன் இருந்தால் என்ன நிலை என்று கீழ்கண்டவாறு பார்ப்போம்.
மேற்கண்ட ஐந்து கிரகங்கள் சூரியனுடன் இணையும்போது அஸ்தங்க நிலை,
மேற்கண்ட கிரகங்கள் இருந்த வீட்டிற்கு இரண்டு,பதினொன்றில் சூரியன் வரும்போது மேற்கண்ட கிரகங்கள்"சீக்கிரகதி"அடைகிறது.
மூன்றில் சூரியன் வரும்போது " சமகதி "
மேற்கண்ட ஐந்து கிரகங்கள் இருந்த வீட்டிற்கு நான்கில் சூரியன் வரும்போது மேற்கண்ட கிரகங்கள்"மந்தகதி"அடைகிறது.
மேற்கண்ட ஐந்து கிரகங்கள் இருந்த வீட்டிற்கு 5,6 ல் சூரியன் வரும்போது "வக்கிரகதி"அடைகிறது.
மேற்கண்ட ஐந்து கிரகங்கள் இருந்த வீட்டிற்கு 7,8 ல் சூரியன் வரும்போது "அதிவக்கிரகதி"அடைகிறது.
மேற்கண்ட ஐந்து கிரகங்கள் இருந்த வீட்டிற்கு 8,9 ல் சூரியன்"வக்கிரநிவர்த்தி"
அடைகிறது.
அடைகிறது.
9,10 ல் சூரியன் இருப்பது "குடிலகதி
குரு, சனி, செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் இருந்த வீட்டிற்கு 12-ல் சூரியன் வரும்போது "சீக்கிரகதி"அடைகிறது.
குரு, சனி, செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் இருந்த வீட்டிற்கு 12-ல் சூரியன் வரும்போது "சீக்கிரகதி"அடைகிறது.
புதன்-மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மூன்று வார காலம் வக்ரகதி அடையும்.
சுக்கிரன் -பதினெட்டு மாதத்திற்கு ஒருமுறை ஒன்றரை மாதகாலம் வக்ரகதி அடையும்.
செவ்வாய் இரண்டு வருடங்களுக்கு மூன்று மாதகாலம் வக்ரகதி அடையும்.
சனி ஒரு ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து மாதகாலம் வக்ரகதி அடையும்.
குரு ஒரு ஆண்டுக்கு மூன்று மாதத்திற்கு அதிகமாகவும் வக்கிரம் அடைகிறது.
மேற்கண்டவற்றில் செவ்வாய் கிரகத்திற்கு மட்டும் "ஸ்தம்பன்கதி" என்ற சிறப்பு பெயருண்டு.செவ்வாய் சிலநேரங்களில் 4,5 மாதகாலம் ஆனாலும் ஒரே இடத்தில் அசைவற்று நிற்பது போல தோற்றமளிக்கும்.எந்த ஒரு கிரகமும் ஒரே இடத்தில் நிலையாக நிற்பதில்லை. ஆனால் செவ்வாய் மட்டுமே ஒரே இடத்தில் நிற்பதுபோல தோற்றமளிக்கும்.
கிரகங்கள் அனைத்தும் தத்தம் பாதையில் முன்னோக்கிதான் சென்று கொண்டிருக்கும் அவை பின்னோக்கி நகர்வதில்லை.ஆனால் பின்னோக்கி வருவதுபோல தோற்றம் அளிப்பதைதான் நாம் "வக்ரகதி" என்கிறோம்.
3) வக்கிரம் நீங்குதல்
ஒரு கிரகம் உச்சம் பெற்றிருந்தும் வக்கிரம் பெற்றிருந்தால் அக்கிரகம் நீசத்திற்கு சமமான பலனையையே கொடுக்கும். மாறாக
நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் பெறின் உச்ச.நிலையை தரும்.
ஆட்சி பெற்று வக்கிரம் பெற்ற கிரகம் நற்பலன் தந்துவிடுகிறது.
வக்கிரம் பெற்ற கிரகம் உச்சம் வர்க்கோத்தமம் பெறுமானால் அவர் இருக்கும் வீட்டின் இடத்தினை பாதிப்பதில்லை.
பாவிகள் உச்சம் பெற்று வக்கிரம் பெறுமானால் அவர்களின் திசையில் யோக பலன்களைகளையே தரும்.
வக்கிரம் பெற்ற கிரகத்தினை உச்சம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்படும்போது வக்ரபலன் நீங்கி நற்பலன் தந்துவிடுகிறது.
வக்கிரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றாலும் வக்ரபலன் நீங்கி நற்பலன் தந்துவிடுகிறது.
வக்ரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெறுவதும்,பிறகு அந்த வீட்டின் அதிபதி உச்சம் பெறுவதும் (டபுள் டெபாசிட்டர் முறை )வக்ர பலன் நீங்கி நற்பலன் தந்துவிடுகிறது.
3)நீச-பங்க ராஜயோகம்
ராசியில் ஒரு கிரகம் நீசம் பெற்று அம்சத்தில் உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது நீசம் பெற்ற வீட்டின் அதிபதி உச்சம் பெற்றாலோ அல்லது அவ்வீட்டின் அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீச பங்க ராஜ யோகம் பெற்று நன்மையைத்தரும்.ஒரு கிரகம் நீச பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் அல்லது நீசமடைந்த கிரகம் வர்க்கோத்தமம் பலம் அடைந்து இருந்தாலும் அக்கிரகம் நீச பங்கம் பெறும்.
4) வர்க்கோத்தமம்
ராசியிலும் ,அம்சத்திலும் ஒரு கிரகம் ஒரே ராசியில் இருப்பின் வரக்கோத்தம பலன் பெற்று நன்மையைச் செய்யும்.
5) "விபரீத ராஜயோகம்
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதற்கிணங்க கெட்ட ஸ்தானங்களான (3,6,8,12) மூன்றுக்கு உடையவன் ஆறிலும்,ஆறுக்குடையவன் எட்டிலும் மற்றும் எட்டுக்குடையவன் பணிரெண்டிலும் இதுபோல் இருப்பின் நன்மையைச் செய்யும்.இந்த மறைவிட ஸ்தான அதிபதிகள் (3,6,8,12 ) தங்களுக்குள் பரிவர்த்தனை அடைந்து இருப்பின் அதன் திசை காலங்களில் விபரீத ராஜயோகத்தினை தருகிறது.
6) ஒரு சாதகத்தில் 1, 2,7,8 ம் இடங்கள் சுத்தமாக இருந்தால் திருமண வாழ்க்கைக்கு நல்லது.
7 )அஸ்தங்கம்:-
சூரியனுடன் பத்து பாகைக்குள் இணைந்த கிரகங்கள் சூரியனால் எரிக்கப்படும் கிரகங்கள் அவை அஸ்தமனம் அடைந்த கிரகங்கள்
சூரியனுடன் இணைந்த நிலையில்(பத்து பாகைக்குள்) உள்ள கிரகங்களை பார்க்கும்போது அஸ்தமனம் அடையாமல் உள்ளதா ? என கவனிக்கவேண்டும்.அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் நன்மையைச்செய்யாது.
8 ) அஸ்தங்கம் பாகை அளவு
செவ்வாய்-சூரியனிடமிருந்து முன்பின்னாக 17 பாகைக்குள்ளும்,
இதேபோல
புதன்- 11 பாகைக்குள்,
குரு - 15 பாகைக்குள்,
சுக்கிரன் -9 பாகைக்குள்
சனி -17 பாகைக்குள்
சூரியனிடம் நிற்கும்போது அஸ்தங்கம் அடைகிறது.சந்திரனுக்கு அஸ்தங்கம் தோஷம் இல்லை.
கிரகங்களில் புதன்,சுக்கிரன் மட்டும் அஸ்தங்கம் அடையும் போது சொந்த காரக பலன்களை இழப்பதில்லை.
புதன்,சுக்கிரன் மட்டும் சூரியனுக்கு முன்,பின் என இருந்தபடி இரு வகையான அஸ்தங்கம் அடைகிறது.முன்புறமாக அஸ்தங்கம் அடையும்போது தனது சுய காரகத்துவ பலனை இழக்காது.அதேநேரத்தில் ஸ்தானதிபத்திய பலனை இழக்கிறது.
சூரியனுக்கு பின்புறம் அஸ்தங்கம் அடையும் போது முற்றிலும் காரக மற்றும் ஸ்தான பலனை இழந்து விடுகிறது.
புதன்,சுக்கிரன் ஆகிய இரு கிரகங்கள் மட்டுமே அஸ்தங்கம் அடையும் போது வக்கிரம் அடைகிறது. மற்ற கிரகங்கள் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் அடையாது.
புதன், சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்கள் மட்டுமே அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டினையும் தனித்தனியாகவும்,இரண்டினையும் இணைந்தும் அடைகிறது.
கிரகங்களில் சூரியன்,புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் உள வட்ட பாதையில் சுற்றி வருகின்றது.எனவேதான் ராசி கட்டத்தில் புதன் சூரியனுடனோ அல்லது ஒரு ராசிக்குள் முன்,பின் சுற்றி வருகின்றன.இதேபோல சுக்கிரன் சூரியன் உடன் அல்லது இரண்டு ராசிக்குள் முன் பின் சுற்றி வருகின்றன.
செவ்வாய், குரு மற்றும் சனி ஆகிய கிரகங்கள் சூரியனை மையப்பொருளாக கொண்டு பூமியின் வட்ட பாதைக்கு அடுத்தாற்போல வெளிவட்டபாதை அமைத்துக்கொண்டு சுற்றி வருகின்றன. இவை பூமிக்கும்,சூரியனுக்கும் இடையில் வருவதில்லை.ஆனால் புதன்,சுக்கிரன் சூரியனுக்கும்,பூமிக்கும் இடையில் வருகின்றன.
செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கம் அடைகிறது. புதன் அஸ்தங்கமும்,வக்கிரமும் ஒரே நேரத்தில் இருப்பதீல் சூரியனுக்கு முன் நிற்கிறது.
எல்லா கிரகங்களும் மேற்கில் அஸ்தங்கம் கிழக்கில் உதயமாகிறது.புதன், சுக்கிரன் மட்டும் கிழக்கில் அஸ்தங்கம் அடைந்து மேற்கில் உதயமாகிறது.
9 ). உதயகதி
அஸ்தங்கத்தில் இருக்கும் கிரகம் அஸ்தங்கம் எல்லையை விட்டு விலகுவதை "உதயகதி " என்கிறோம்.
இதன் பலன் இதுவரை சாதகர் இழந்திருந்த ஸ்தான பலன் மற்றும் காரக பலன் ஆகிய இரண்டினையும் மீண்டும் பெறுவார்.
10 ) கேந்திராதிபத்திய தோஷம்
கேந்திரம் என்பது 1,4,7,10 ஆகும்.
ஒரு சுபர் இந்த கேந்திரத்திற்கு அதிபதியாகி கேந்திர ஸ்தானங்களில் நின்றால் அது "கேந்திராதிபத்திய தோஷத்தினை " கொடுக்கும்.
சுபர்கள் கோணங்களிலோ அல்லது மறைவு ஸ்தானங்களிலும் இடம்பெறும்போது அவை கேந்திராதிபத்திய தோஷத்தினை தந்துவிடுவதில்லை.பொதுவாக சுபர்கள் திரிகோணங்களிலோ அல்லது மறைவிடங்களிலோ அமர்தல் நல்லது .அதேபோல பாவர்கள் கேந்திரத்தில் இடம்பெறுதல் நல்லது ஆகும்.
11) ஒவ்வொறு கிரகங்களின் நட்சத்திர சாரம் மற்றும் பார்வை,சேர்க்கைகளை கவனிக்க வேண்டும்.
12 ) பரிவர்த்தனை;
இரண்டு கிரகங்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு தங்களது வீடு மாறி நிற்பது ஆகும்..இதுவும் கிரகத்திற்கு வலிமை தரும்.
பரிவர்த்தனையில் இரண்டு வகைப்படும்
அவையாவன:-
1) சுபயோக பரிவர்த்தனை
2) அவயோக பரிவர்த்தனை
சுபயோக பரிவர்த்தனை
கேந்திர மற்றும் கோண அதிபதிகள் கேந்திரங்களுக்குள்ளேயே அல்லது கோணங்களுக்கு இடையையே அல்லது இரண்டுக்குள்ளேயும் பரிமாறி நிற்பது ஆகும்.
இதேபோல மறைவிட அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறி கொள்வது ஆகும்.இது "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் "என்ற வகையில் சுப பரிவர்த்தனை ஆகிறது.
இந்த சுபயோக பரிவர்த்தனை நற்பலன்களை தனது திசையினில் தரவல்லது.
அவயோக பரிவர்த்தனை
மறைவிட அதிபதிகள் (3,6,8,12) கேந்திர கோண அதிபதிகள் உடன் பரிமாறி நிற்பது ஆகும்.
இதன் பலன் அதன் திசை காலங்களில் அவயோகத்தினை தரும்.
13 ) கிரக யுத்தம்;-
ஒரு ராசியில் செவ்வாய்க்கு பின் கூடியிருக்கும் கிரகங்கள் யுத்தத்தில் தோற்ற கிரகங்கள் .இவைகள் நல்ல பலனை தராது.
14 ) பாதகாதிபதி
சர ராசி -11-ம் அதிபதி
ஸ்திர ராசி-9-ம் அதிபதி
உபய ராசி-7-ம் அதிபதி
மேற்கண்ட அதிபதிகளின் தசை நன்மையைச்செய்யாது
15 ) ஷஷ்டாஷ்டம்
ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு 6 அல்லது 8 இடத்தில் இருப்பது இக்கிரகங்களின் தசா புத்தி நன்மையை செய்யாது(தோஷம்)
மேஷம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,
தனுசு
தனுசு
கும்பமாகில் ஷஷ்டாஷ்டக தோஷமும் மற்ற ராசிகளில் 2,12 ம் இடத்தோஷமில்லை என்பது சிலர் கருத்து.
16 ) திவிர்த்வாதசம்
ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு -2 லோ 12 -லோ நிற்பது.இந்த தசா புத்திகள் நன்மையைச் செய்யாது.
17 ) ஆத்மாக்காரகன்
ஒரு ராசியில் எந்த கிரகம் அதிகமாக சென்றுள்ளதோ அந்த கிரகம் ஆத்மாக்காரகம அந்த கிரகம் பலமுடைய கிரகம அதன் தசா புத்தி நன்மயைச் செய்யும்
18 ) மாரகாதிபதி
சர ராசி -2,7- ன் அதிபதி
ஸ்திர ராசி -3,8-ன் அதிபதி
உபய ராசி -7,11 ன் அதிபதி
மேற்கண்ட அதபதி தசைகள் மாரகத்தை தரக்கூடியவை.
19 ) திக் பலம்
லக்கனத்தில் குரு மற்றும் புதன்
ஏழாம் இடத்தில்- சனி
நான்காம் இடத்தில்-சந்திரன்,சுக்கிரன்
பத்தாம் இடத்தில் -சூரியன்,செவ்வாய்
திக்பலம் பெற்ற கிரகங்கள் தனது திசையில் உச்ச கிரக பலனிற்கு நிகரான பலன்களை சாதகருக்கு தருகிறது.தனது திக் பலத்திற்கு ஏழாம் வீட்டில் தனது பலனை இழக்கிறது.
எனவே சோதிடர்களாகிய நாம் இதுபோல் பல விஷயங்களை கவனித்து ஆராய்ந்து பரம்பொருளின் துணைகொண்டு பலன் உரைக்கவேண்டும்.ஏனெனில் சோதிடம் என்பது தெய்வீக கலையாகும்.எனவே நம்மை நம்பி வந்து பலன் கேட்பவர்களுக்கு மேலோட்டமாக பதில் அளித்துவிடாமல் நன்கு ஆய்வு செய்து பலனுரைப்போம்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற, தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
ஆசிரியர் & சோதிடர்
சோதிட ஆராய்சியாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
தொடர்பு கொள்ள
செல் : 97 151 89 647
செல்; 740 257 08 99
வாட்ஸ்அப்; 97 151 89 647
My email
masterastroravi@gmail.com
My blogspot. Google search
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai. blogspot. com
............
No comments:
Post a Comment