Thursday, 24 December 2015

கிரக பார்வைகளும் அதனால் மனிதனுக்கு ஏற்படும் மாற்றங்களும்

கிரக பார்வைகளும் -மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும்

                                                        

பத்ரகாளியம்மன் துணை !

         "சாதக கட்டத்தில் கிரகங்களின் பார்வையால் மானிட வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

                              ஒருவருடைய சாதக கட்டத்தில் பணிரெண்டு ராசிகளில் தந்தைக்காரகன் எனப்படும் சூரியனும் ,சூரிய பகவானின் மைந்தனான சனி பகவானும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.அவ்வாறு பார்த்துக்கொள்ளும் சாதக அமைப்பை பெற்றவர்களின் தந்தை, மகன் உறவுநிலை சரியாக அமையாது.அவர்களுக்கிடைய சிறிய வெறுப்புணர்வு இருக்கும்.சில நேரங்களில் சுபரின் பார்வை மற்றும் ஓன்பதாமிட அதிபதியின் வலு ஆகியவற்றைப்பொறுத்து மேற்கண்ட பலன் மாறுபடலாம்.

                             இதேபோல சனி பகவானை குரு பகவான் பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் சனியின் ஆதிக்க பண்பு குறைந்து  குருவின் ஆதிக்கப்பண்பை  பெற்றுவிடுவார்கள்.நல்ல குணங்களே மேலோங்கி இருக்கும்.

                                                                                 மாறாக சனி பகவான் ,                                    குரு பகவானை பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் குரு ஆதிக்கப்பண்பு குறைந்து சனி பகவானின் ஆதிக்கப்பண்பே மேலோங்கி நிற்கும்.இதேபோல குருவும் ,சனியும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளாமலே இருத்தல் நலம்.

                        அடுத்து "சனி பகவானும் ,செவ்வாய் பகவானும் சேர்ந்து ஒரு ஸ்தானத்தை பார்க்கும்போது அந்த ஸ்தானத்திற்குரிய ஆதிபத்திய பலனை மாற்றி பாதிக்கவைத்துவிடும்.
உதாரணமாக "சனியும் செவ்வாயும் சேர்ந்து நான்காமிடத்தை பார்க்கும்போது அவனை காம எண்ணம் மிகுந்தவனாக மாற்றிவிடும்.
இதேபோல இரண்டாமிடத்தில் பார்த்தால் அவனது பேச்சில் சுத்தம் இருக்காது.ஏழாமிட பார்வை மனைவி அமைவது கால தாமதமாக்கிவிடுவதோடு மனைவியின் குணநலத்தையே(காம எண்ணம் மிகுந்தவளாக) மாற்றிவிடும்.இப்படியாக பார்க்கப்படும் ஸ்தான மற்றும் பார்க்கப்படும் கிரக குணநலன்களையே மாற்றிவிடும்.

.                       இதேபோல சனியும் செவ்வாயும் சமசப்தமாகவும் பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.இவ்வாறு பார்த்துக்கொள்ளும்போது வாகன விபத்துக்களை தந்து இரத்தம் கசிந்து எலும்பு முறிவு போன்றவற்றை செவ்வாய் திசை சனி புத்தியிலோ அல்லது சனி திசை செவ்வாய் புத்தியிலோ நிகழ வாய்ப்புண்டு.எத்சரிக்கையாக இருத்தல் நலம்.

                            அடுத்து சனி பகவானும் ,புதன் பகவானும் பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.அவ்வாறு பார்த்துக்கொள்ளும் புதன் பகவான் தரக்கூடிய கணிதம்,எழுத்து ,கவிதை ,ஜோதிடம் போன்ற நுணுக்க விஷயங்களை தரவிடாமல் செய்துவிடுகிறது.
அதிலும் புதன் மற்றும் சனி பகவான் இருவரும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும்போது சாதகரை அலித்தன்மை உடையவராக ஆக்கிவிடுகிறது.

                                  குரு பகவானும்,சந்திர பகவானும் பார்த்துக்கொள்ளும்போது "குரு-சந்திர யோகத்தை தருகிறது.இந்த யோகம் தர இரு கிரகங்கள் சேர்ந்து இருக்கும் வீட்டின் அதிபதி மறைவு,நீசம் ,அஸ்தனம் போன்ற பலவீனமான அமைப்பை பெறக்கூடாது.மேலும் ராசியை பொறுத்து இரண்டில் ஒன்று பாதாகாதிபதியாகவோ ,மாரகாதிபதியாக இருக்ககூடாது.

                             அடுத்தபடியாக " காம கிரகம் மற்றும் ஆண்,பெண் இருபாலருக்கும் களஸ்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இருவரும் பார்த்துக்கொள்ளும்போது காம எண்ணம் மிகுதியாக்கிவிடுகிறது.

                             மனதுக்காரகன் எனப்படும் சந்திர பகவானை  ,சுக்கிர பகவான் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும்போது காமம் சம்பந்தப்பட்ட கற்பனை மிகுதியாக இருக்கும்.ஒரு சிலர் காம கதை ,கவிதை ,சினிமா மற்றும் பாடல்கள் அமைப்பதற்கும் இவையே காரணம்.சுக்கிரன் உச்சம் ஆட்சி போன்ற பலம் பெற்றிருக்க வேண்டும்.

                         ஒருவரது சாதகத்தில் சூரியனும்,சந்திரனும் சமசப்தமாக 180  பாகையில் சந்தித்துக்கொள்ளும்போது  "பொளர்ணமி யோகத்தை "வழங்குகிறது.இவர்கள் பொளர்ணமி நாளில் பிறந்திருப்பார்கள்.சில நேரங்களில் இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காம எண்ணம் குறைவாகவே பெற்றிருப்பார்கள்.

                            குரு பகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கே அதிக பலன்களை தருவார்.பொதுவாக இருக்கும் இடத்திற்கு அதிக அளவு நன்மைகளை செய்யமாட்டார்.அதிலும் குறிப்பாக குரு தனித்து நின்றால் அந்த இடத்தை பாதிப்பார் என்பதால்தான் "அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசம் என்பார்கள்".
சனி பகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கப்படும் இடத்தை அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்.

                                ராகு பகவான் ,கேது பகவான்  மற்றும் செவ்வாய் பகவான்,சனி பகவான், தேய்பிறைச்சந்திரன் மற்றும் பாவியோடு சேர்ந்த  புதன்  பகவான் போன்ற இயற்கை பாவிகளால் பார்க்கப்படும் அந்த ஸ்தானமும்  அதில் உள்ள கிரகங்களின் தன்மையை எதிர்மறையாக மாற்றி  கெடுதல் செய்ய வைத்துவிடுகிறார்கள்.

                      அதே நேரத்தில் இயற்கை சுபரான குரு பகவான்,சுக்கிர பகவான்,வளர்பிறைச்சந்திரன்,பாவியோடு சேராத புதன் பகவான் ஆகிய கிரகங்கள் பார்க்கப்படும் ஸ்தானமும் ,கிரகங்களும் பாவ கிரகங்களாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் பாதிப்பை இல்லாமலோ அல்லது குறைத்தோ அதன் பலனை மாற்றி நேர்மறையாக மாற்றிவிடுகிறார்கள்.

                         எனவேதான் மேலோட்டமாக ஒரு சோதிட பதிவை படித்துவிட்டு ஆகா எனது சாதகத்திலும் இதுபோன்ற அமைப்பு இருக்கிறதே என வருத்தப்படுவதோ அல்லது அவ்வாறு நடக்காமல் போகும்போது நீங்கள் கூறியது போல எனக்கு அந்த அமைப்பிருந்தும் கெடுதலான பலனை தரவில்லை ? என கேள்வி கேட்டு எதிர்வாதம் செய்வது தவறு.
சோதிடர்களாகிய நாங்கள் பதிவுகளை பதிவிடும்போது ஒரு சாதக பலன்கள் கூறுவதற்கான எல்லா கோணங்களையும் ஒரே பதிவில் விளக்கிவிட முடியாது.

                       ஒரு உதாரணத்தின் மூலமாக இவற்றை விளக்கிவிடுகிறேன்.சற்று பொறுமையாக மனதை இங்கு செலுத்தி படியுங்கள்.

                               ஒரு பெண்ணிற்கு கற்பு ஸ்தானமான நான்காமிடத்தில் "சனி பகவானும்,செவ்வாய் பகவானும் சேர்ந்திருக்கும்போது அந்த பெண் காம எண்ணம் மிகுந்தவளாக ,தவறு செய்யும் ஆசையுடையவளாக இருப்பாள் என நான்  எனது பதிவில் பதிந்திருப்பது "பெது பலன்".நான் கூறிய இந்த பொதுப்பலனை மட்டும் வைத்துக்கொண்டு பெண் பார்க்கும் படலத்தில் அப்ளை செய்து (பதிலீடு ) பார்த்தீர்கள் என்றால் ஒரு பெண்ணின் சாதகத்தில் நான்காமிடத்தில் சனி,செவ்வாய் சேர்ந்திருந்த பெண்ணை தேர்ந்தெடுக்காமல்  விட்டுவிடுவீர்கள்.

                               ஆனால் அந்த பெண்ணை விசாரித்து பார்க்கும்போது நல்ல குணநலவாதியாகவும்,நன்கு கல்வி புலமை பெற்றவளாகவும் இருப்பாள்.நான் கூறிய பொதுப்பலனை மட்டும் தேடியதால் ஒரு நல்ல பெண்ணை சந்தேகம் கொண்டு தவிர்த்துவிடும் துரதிஷ்ட நிலைக்கு ஆளாகிவிடுவாய்.

                                  ஏன் நாலில் "சனி ,செவ்வாய் சேர்ந்திருந்தும் அந்த மாதிரியான பலனை தராமல் போவதற்கு சோதிட சூட்சுமம் அறிந்த சோதிடர்களுக்கு மட்டுமே புரிந்த சில
"சிறப்பு காரணங்களும்" உள்ளது.


                              அது என்னவெனில் சேர்ந்திருக்கும் இரு கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் நீசம் போன்ற பலவீனம் அடைந்திருருக்கலாம் அல்லது இரு கிரகங்களும் சுப நட்சத்திர காலில் நின்றிருக்கலாம் அல்லது குரு பகவான் போன்ற சுப கிரகங்களின் பார்வையை பெற்றிருக்கலாம் அல்லது நான்காமாதிபதி ஆட்சி உச்சம் போன்ற பலமான அமைப்பை பெற்றிருக்கலாம்.இதுபோன்ற அமைப்புகளில் ஏதேனும் ஒரு அமைப்பை பெற்றிருந்தாலும்  அந்த பெண் நாலில் சனி செவ்வாய் சேர்ந்திருந்தாலும் நல்ல குணநலவாதியாக இருப்பாள்.

                       எனவே "அன்பார்ந்த சோதிட ஆர்வலர்களே மேலோட்டமாக நாங்கள் பதியும் பதிவுகளை படித்துவிட்டு தவறான முடிவுகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.தவறான முடிவினை தாங்களே எடுத்துக்கொண்டு பிறகு சோதிடமே தவறு என இன்றைய கற்ற இளைஞர்கள் எதிர்விவாதம் செய்யாதீர்கள்.தங்களைப்போன்றே  கல்லூரியில் படிக்கும் காலங்களில் சோதிடம் என வாதம் புரிந்தவன்.

                        எனது தாய் மாமவும்,சோதிடரும் ஆன மரியாதைக்குரிய கலியுகம்பிள்ளை அவர்கள் எனது சாதகத்தில் புதனும் ,குருவும்
உச்சம் ,ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் பிற்காலத்தில் பார் போற்றும் சோதிடராக வருவாய் எனவும் ,வாக்கு ஸ்தானத்தோடு ஞானக்காரகன் கேது பகவானின் தொடர்பு இருப்பதால் சோதிட சூட்சுமமும் பெறுவாய்.உனது வாக்கு பலிக்கும் என்பதை படிக்கும் காலம்வரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. சோதிடம் கற்று தருகிறேன் என அழைத்த போதெல்லாம் மறுத்து வந்தேன்.


                  எனக்கு திருமணமாகி ஒரு மாதம் கழித்து அவரே நோட்டு வாங்கிவந்து அதில் பிள்ளையார் சுழி போட வைத்து விநாயகர் சுலோகம் மனப்பாடம் செய்யவைத்து குரு தட்சனையாக பத்து ரூபாய் வாங்கி சென்றார்.அன்று மறுத்தவன் இன்று எனது முகநூலின் பக்கம்(Page) பகுதியில் மூன்று பக்கங்களை திறந்து உள்ளேன்.

         அதில் 1) சோதிடர் ரவிச்சந்திரன் -இந்த பக்கத்தில்(Page) எனது சோதிடம் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பதிவுகள் இருக்கும்.இதில் "கிரகங்கள் படுத்தும் பாடு " எனும் தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.விருப்பமுடையவர்கள் முகநூல் பக்கம் பகுதியில் தேடி லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.

           2) கவிதை நான் சொல்லவா -எனும் முகநூலில் பக்கம்(Page) பகுதியில் கவிதைகள் பல பதிந்து வருகிறேன்.விருப்பமுடையவர்கள் லைக் செய்து இணைந்திடுவீர்.

          3) "வாழ்வியல் சிந்தனைகள்"-என்ற பக்கம்(Page)  சோதிடம் அல்லாத வாழ்க்கைக்கு பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்.விருப்பமுடையவர்கள் லைக் செய்து இணைந்திடுங்கள்
இதுமட்டுமல்லாமல் முகநூல் குரூப்(Group) பகுதியில் "சோதிடர் ரவிச்சந்திரனின் சோதிடபாமாலை " என்ற குரூப்(group) ஆரம்பித்து "கற்றதையும்,பெற்றதையும் மற்றவர்களுக்கு பகிர்வோம்" எனும் கருத்தின் அடிப்படையில் சோதிட கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்.

                  இது மட்டுமல்லாமல் சோதிட ஆலோசனையை வீட்டிலிருந்தபடியே தங்களது சாதகங்களுக்கு போனின் மூலம் பலன்பெற விரும்புகிறவர்களுக்கு சோதிட பலன்களை கட்டண அடிப்படையில் பலன் கூறி வருகிறேன்.பலர் எனது வாட்ஸ்அப்  மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ அல்லது போனின் மூலமாகவோ தொடர்புகொண்டு பலன்பெற்று வருகிறார்கள்.ஆசிரிய பணியோடு இப்பணியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது."

                 படிக்கும் காலத்தில் சோதிட துறையை மறுத்தவன் என்னையறியாமலே இதில் என்னை நுழைய வைத்து இன்று முழுநேரம் சோதிடத்திற்கு செலவிட வைத்துவிட்டது.சோதிடம்  எவ்வளவு உண்மை  என்பதை எனது அனுபவத்திலிருந்து விளக்கவே மேற்கண்ட இன்றைய எனது நிலையை விளக்கினேன். படிக்க படிக்கவும் ,பலன் கூற கூறவும் அதன் சூட்சும விஷயங்கள் பரம்பொருளின் அருளால் எனக்கு புரிந்துவருகிறது.

                                 எனது ஒரே ஆசை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அறிவியல் அடிப்படையில் விளக்கி இது ஒரு அறிவியலின் ஒரு பிரிவு என புரிய வைக்கவேண்டும் என்பதே ஆகும்.
வாழ்க நிறைவான ஆனந்தத்துடன்.நன்றி.

                                                



                                                        அன்புடன்,
               சோதிடர்  
சோப..ரவிச்சந்திரன்
         M.SC,M.A,BEd
            ஆசிரியர்  &சோதிட ஆய்வாளர்,
  ஓம் சக்தி  ஆன்லைன்ஜோதிட ஆலோசனை மையம், 
        கறம்பக்குடி,
 புதுக்கோட்டை மாவட்டம்
           தமிழ்நாடு.



  செல் : 

    97 151 89 647                                        740 257 08 99
                                                          whatsup no                                                                  97 151 89 647


Email ; masterastroravi@gmail.com

My facebook  link
m.facebook.com/ravichandran3538039


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

.....,.   ......    .......     .......   ........  ......

No comments:

Post a Comment