Saturday 14 November 2015

( 8 ) சினிமா துறையில் ஜொலிக்க..கிரக அமைப்புகள்

                           

சினிமா துறையில் ஜொலிக்க - கிரக அமைப்புகள்.  



                                                        
ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !

                 "சினிமாத்துறை என்பது ஒரு கனவுத்தொழிற்சாலை ஆகும்.இதில் நுழைந்து எல்லோராலும் வெற்றி பெற முடியாது.இத்துறையில் வெற்றி பெற ஒருவர் பலவித இன்னல்களை அனுபவித்த பிறகே வெற்றியடைய முடிகிறது.இத்துறையில் வெற்றி பெற வேண்டுமாயின் கலைத்திறமையும் அவற்றின் நுணுக்கங்களும் பெற்றிருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.இத்தகுதியை அடைய  கிரகங்களின் பங்கும் முக்கியமானது.எனவே சினிமா துறையில் பிரபலமாவதற்கு உறுதுணையாக அமைந்த கிரக நிலைகளை பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

பாடகராக .....

                                                பாடகராக ஒருவர் பின்னனி பாடி கலைத்துறை மூலம் செல்வமும்,செல்வாக்கும் பெற கீழ்கண்ட கிரகங்களும்,ஸ்தானங்களும் பலம் பெற வேண்டும்.

                                                வாக்கு ஸ்தானம் பலம் பெற வேண்டும்.வித்தைக்கு அதிபதியான புதன் ஆட்சி,உச்சம் பெற்று கேந்திர கோணங்களில் பலம் பெற்றிருக்க வேண்டும்.


                                                     கலைக்காரகன் எனப்படும் சுக்கிரன்  உச்சம்,திரிகோணம்,ஆட்சி  பெற்று ஜீவன ஸ்தானமாகிய பத்தாம் இடத்திலோ அல்லது  பத்துக்கு பத்தாம் வீடான ஏழாம் இடத்திலோ அமையப்பெற வேண்டும்.
வாக்கு ஸ்தானதிபதி தன் வீட்டிற்கு லாப ஸ்தானத்தில் பலம் பெற வேண்டும்.

                                      இசைக்கு அதிபதியான சுக்கிரனும்,நல்ல மன நிலை தரக்கூடிய சந்திரனும் பாடகராக்கூடிய சாதகத்தில் பலம்பெற்றிருக்கும்.
பாடகரிலும் பலவித ரகம் உண்டு சிலர் பக்திப்பாடல்கள் பாடுபவராக இருப்பர்.அவர்களது ஜாதக கட்டத்தில் வாக்கு ஸ்தானத்தில் அங்காரகனும்,சுக்கிரனும் பலம் பெற்றிருக்க வாய்ப்புண்டு.

                               இதேபோல் ஒரு சிலர் சிற்றின்ப பாடல்களை பாடி புகழ் பெறுவார்கள்.இவர்களது ஜாதகத்தில் சப்தம ஸ்தானமான ஏழாம் வீட்டில் நீச சுக்கிரன் இருந்தால் இது போன்ற பாடகராகி புகழ்பெறும் வாய்ப்பை பெற்றிருப்பார்கள்.

                                  சிலர் சங்கீத சாஸ்திரங்களில் கரை கண்டவராக உலகம் போற்றும் பாடகராக திகழ்வதற்கு இவர்களுடைய ஜாதகத்தில் ராசி சக்கரத்தின் இரண்டாம் இடத்திலோ அல்லது பஞ்சம ஸ்தானத்திலோ  சூரியனும்,புதனும்  அல்லது குருவும்,சந்திரனும் இணைந்து இருப்பின்  இவ்வாறு புகழ்பெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

                          ஒரு சிலர் நவீன யுக யுக்தியான கணிப்பொறி உதவியால் புகழ்பெறுவதற்கு கணிப்பொறிக்கு அதிபதியான சனி பகவானை குரு பார்வை பெற்றவர்கள் ஆகும்.



கவிஞராக..

   
                                           சினிமா துறையில் புகழ்பெற்ற கவிஞராக பிரபலயமடைய கலைக்காரகன் சுக்கிரனும்,வித்தை மற்றும் எழுத்துக்காரகர் என போற்றப்படும் புதனும் பலம் பெற்று குரு பகவானின் நற்பார்வைப்பட வேண்டும்.


                                   சந்திர கேந்திரத்தில் சுக்கிரனும்,புதனும் திகழ வேண்டும்.
மேலும் கவிஞராக பாக்கிய -விரய ஸ்தானங்களும்,தர்ம-கர்ம ஸ்தானங்கள் பலம் பெற்று தர்ம-கர்மாதிபதி யோகமும் பெற்று இவற்றிற்கு குரு பார்வையும் பெற வேண்டும்.

                           குருவிற்கு இரண்டாமிடத்தில்  அதன் அதிபதி மற்றும் சந்திரனிருக்க  ,புதன் ஒன்பதாமாதிபதியுடன் கூடி புகழ் ஸ்தானமான  மூன்றாமிடத்தில் இருக்க கவிஞராக வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.

                          சந்திரனும்,புதனும் சம சப்தம பார்வை வேடிக்கை விநோதமான பல பாடல்களை இயற்றுபவராக திகழ்வார்.

                           சிலர் பக்தி பாடல்கள் எழுதி புகழ் பெற வேண்டுமாயின் பஞ்சம ஸ்தானத்திலோ அல்லது வாக்கு ஸ்தானத்திலோ கேது இருந்து  மேற்கண்ட அமைப்புகளும் பலம் பெற்றிருப்பின் பக்தி பாடல்கள் பல எழுதி புகழ்பெறுவார்கள்.

                                   மேலும் லாப ஸ்தானத்தில் சந்திரனும்,பஞ்சம இசை ஸ்தானமாகிய ஐந்தில் குரு இருப்பதும்,
லக்கனத்தில் சுக்கிரன் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் குரு இருப்பவருக்கு கவிதை ஞானம் மிகுந்து பக்தி பரவச பாடல்களை இயற்றுவர்.

                                  வாக்கு மற்றும் பஞ்சம ஸ்தானங்களில் சுக்கிரன் தொடர்பு மற்றும் காம காரகாரகர் செவ்வாய் சேர்க்கை,பார்வை மற்றும் சாரம் இவற்றில் ஒன்றை பெற்றவர் சிற்றின்ப பாடல்கள் எழுதி புகழ்பெறுபவராக திகழ வாய்ப்புண்டு.

இசையமைப்பாளராக திகழ...

                         ஒருவர் ஜாதகத்தில் சூரியன்,சந்திரன்,புதன்,சனி மற்றும் கலைக்காரகராகிய சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பலமடைந்தவர்கள் இசையமைப்பாளராக திகழ்வார்கள்.உச்சம் பெற்ற சனியை குரு பார்த்தால் கணிப்பொறி உதவியால் பிரபல இசையமைப்பளராக மாறும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.


நடனம்

                                   நடனத்தில் புகழ்பெற்ற நாட்டிய தாரகையாக/தாரகனாக திகழ நடனத்திற்குரிய சுக்கிரனும்,சனியும் பலம் பெற்றிருக்கவேண்டும்.
நான்கு மற்றும் ஏழாமிட பரிவர்தனை பெற்றிருக்கவேண்டும்.இவற்றோடு குரு மற்றும் கேது நான்கு மற்றும் ஏழாமிட தொடர்பு உடையவர்கள் பரத நாட்டியம் முதலான பக்தி பாடல்களுக்கும்.,

                       செவ்வாய்,சுக்கிரன் நான்கு மற்றும் ஏழாமிட தொடர்பும் இவற்றுடன் பத்தாம் அதிபதியும் சேர கவர்ச்சி நடன மங்கையாவள்.

இயக்குனராக......

                              சூரியன்,புதன்,சுக்கிரன் ஒன்று சேர்ந்து லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ கேந்திரங்களிலோ அல்லது கோணங்களிலோ அமைந்தாலும்,
பாக்கியாதிபதி பலம் பெற்று தர்ம-கர்மாதிபதி யோகம் பெற்று குரு பார்வை பெற கலை உலகம் உள்ளவரை பிரபலமான இயக்குனராக வாய்ப்புகள் உண்டு.

                                    இதில் புதன் அதிக பலம் பெறும்போது கலைப்படங்களை இயக்கும் வாய்ப்பும்,
சுக்கிரன் அதிக பலம் பெறின் கமர்ஷியல் படமும்,
சூரியன் உச்சம் பெற்று குரு பார்வை பெறின் பக்தி படங்களும் எடுக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.

நடிகராக ....

                                      கலைக்குறிய சுக்கிரன் பலம் பெற்று ஜீவன ஸ்தான தொடர்பும்,இதேபோல் சனியும் பலம் பெற வேண்டும்
சுக்கிரன்-சந்திரன் பரிவர்தனை  பிற மொழி படங்களில் நடிக்க வாய்ப்பும்,
பத்தாம் இடத்தோடு சுக்கிரன் தொடர்பு பெற்று ஆட்சி ,உச்சம் பெறும் ஜாதகர் இதனுடன் லாபாதிபதி சேர்ந்து சந்திரனும் பலம் பெற்றிருக்க வேண்டும்.

பட தயாரிப்பளராக...

                          கலைக்காரகன் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று இவை இரண்டு,பதினொன்றுக்குடையவனாகி
இவற்றுடன்  ஜீவனக்காரகர் சேர சினிமா தயாரிப்பளராக இருப்பர்.


நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

     வாட்ஸ் அப்
       9715189647

           செல்
     9715189647
       7402570899

                                 

அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,        கரம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம்.


1 comment:

  1. சோதிடர் ரவிச்சந்திரனின் அன்பு வணக்கம்
    இந்த பதிவை படித்து தங்களது கருத்துக்களை பதிவிடவும்.

    ReplyDelete