Wednesday 9 December 2015

கிரகங்களின் சேர்க்கையும் அதனால் உண்டாகும் பலன்களும்

                          

கிரகங்களின் சேர்க்கைகளும் அதனால் உண்டாகும் பலன்களும்


                                                                   

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
                                                                ஒருவரின் குணநலன்கள் அவரோடு சேர்ந்து இருக்கும் நபரின் தன்மையைப்  பொறுத்து மாறுபடுவதுபோல "கிரகங்களும் தன்னுடன் சேர்ந்துள்ள மற்ற கிரகங்களின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகின்றன்".

                                                         நீரானது தான் சார்ந்துள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்றார்போல தனது தரம் மாறுவதுபோல மனிதர்களின் வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடானது அவை சேர்ந்துள் கிரகங்களுக்கு ஏற்றார்போல மாறுபடுகிறது.

                                                  ஒருவரின் சாதகத்தில் சூரியன் மற்றும் சந்திரன் தனித்தனியாக இருக்கும்போது அதன் காரகம் மற்றும் ஸ்தானத்திற்கு ஏற்றார்போல பலன்களை கொடுத்தலும் அவை இரண்டும் சேர்ந்து இருக்கும் போது "அமாவாசை யோகத்தை " வழங்குவார்.இவ்விதமாக அமாவாசையில் பிறந்தவர் திருடனாக இருப்பார் என ஒரு விதமான அபிப்ராயமும் மக்கள் மத்தியில் உள்ளது.இதற்கு காரணம் மனிதன் என்ற ரஜினி படத்தில் அமாவாசையில் பிறந்ததால் அவன் திருடனாகி  சிறைக்கு சென்று விட்டது போல படம் எடுத்திருப்பார்கள்.

                                                                    


                    அந்த படத்தில் வரும் ஒரு பாடலில்

"வானத்தை பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனிதனை இன்னும் பார்க்கலேயே ?
உள்ளே உள்ள அத்தனை பேரும் குற்றவாளி இல்லைங்க
வெளியில் உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லைங்க !
பலநாள் இருந்தேன் கருவறையில்
சிலநாள் இருந்தேன் சிறையறையில்
அம்மா என்னை ஈன்றது "அமாவாசையாம்"
அதனால் பிறந்து தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா !


                  என ஒரு பாடலும் அப்படத்தில் வைக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் இதுபோன்ற கருத்துக்கள் எளிதாக பரவியது.ஆனால் பொதுவாக சந்திரன் மனதை ஆட்டுவிப்பவர்.அவர் சூரியனுடன் சேரும்போது ஒரு சில மனக்குழப்பங்களை கொடுக்கும் என்பது மட்டும் உண்மை.
இங்கு சூரியன் என்பவர் அப்பா,சந்திரன் என்பவர் அம்மாவின் காரகர் ஆவார்.இவ்விரண்டு கிரகங்களும் சேர்ந்து பணிரெண்டாம் இடத்தில் இருந்தால் அவை தரும் பலன்களை பின்வரும் பாடல் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

"ஆறுமி ஆறு தன்னில் அம்புலி கதிரோன் சேர 
கூறுவாய் ஈனன் என்று கொடும்பிணி விரோதன் என்று 
சீருள அன்னை தந்தை செல்வமும் விரயமாவதோடு
வேறு  வேறு ஆவார் என்பது வேதியர் உரைத்த வாக்கு "


                 மேற்கண்ட பாடலிருந்து "சூரியன் பகவான் சந்திர பகவானோடு பணிரெண்டில் சேர்ந்து இருக்கும் காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறந்தால் பாவம் சீரோடும் ,சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருந்த அம்மா மற்றும் அப்பா தனித்தனியாக பிரிந்து வாழ்வார்.அவர்களது செல்வமெல்லாம் குறைந்து போகும்.அவன் கெட்டவனாகவும் பெயரெடுப்பான்.பாவம் விதிப்பயனை  என்ன செய்வது ? -இப்படி ஒரு பிள்ளை பிறந்ததற்கு பிறக்காமலே இருந்திருக்கலாம்.

                  இதே போல சூரியனும்,சந்திரனும் சேர்ந்து நான்கமிடத்தில் இருந்தால் அவர்களது குணத்தை கெடுக்கும்.
இதேபோல் குருவும் ,சந்திரனும் சேரும்போது
"குருசந்திர யோகத்தை" வழங்குவார்.ஆனால் குருவோ அல்லது சந்திரனோ பாதகாதிபதியாக வராமல் இருக்க வேண்டும்.
குருவும்,சந்திரனும் சேர்ந்து ஏழில் இருக்க கூடாது.

          "பால்மதியும்,பரம குருவும் ஏழில் நின்றால் பாலகன் பிறந்த வீடு நாசமாகும்" எனவும்,


              "பாரப்பா இன்னமொரு புதுமைகேளு
                பால்மதியும் பரமகுரு ஏழில் நிற்க
                     சீரப்பா ஜென்மனுக்கு வேட்டலில்லை

               செந்திருமால் தேவியுமோ விலகியுருப்பாள்"

       என புலிப்பாணி சித்தர் அருளிய பாடல்களின் சான்றுப்படியும் "குரு பகவானும்,சந்திரபகவானும் "ஏழில் இருபபின் அந்த வீட்டிற்கே ஆகாது.இதேபோல் குருவும் சந்திரனும் இணைந்த வீட்டின் அதிபதி பலமிழந்திருந்தாலும் மற்றும் அவற்றுடன் பாவிகள் சேர்ந்திருப்பினும் இந்த யோகம் வேலை செய்யாது.எனவே குருவும்
சந்திரனும் சேர்ந்தாருந்தாலே உடனே ஜோதிடர்களாகிய நாம் குருசந்திர யோகம் என அள்ளி விட கூடாது இது போன்ற ஜோதிட சூட்சும விஷயங்களை ஆய்ந்தே நாம் பலனுரைக்க வேண்டும்.


                                                                       

            "தேவ குருவான பிரகஸ்பதியும் (குரு), அசுர குருவான சுக்கிராச்சாரியரும் ஒருவருக்கொருவர் பகைவர்கள்.எனவே இவர்களின் இணைவு பெற்ற திசைகள் நன்மை செய்வதில்லை.

                சனி பகவானும்,செவ்வாய் பகவானும் இணைந்து பார்க்கும் ஸ்தானங்களை பாதிக்கிறது.குறிப்பாக லக்கனத்தில் இணைந்திருக்கும் போது தன்னுடைய குணத்தை கெடுப்பதோடு இருவரும் இணைந்தே சம சப்தமாக ஏழாமிடத்தை பார்ப்பதால் மனைவி ஸ்தானத்தையும் பாதித்துவிடுகிறது.

                 மேலும் லக்கனத்திற்கு எட்டில் இருந்து குடும்ப ஸ்தானத்தை பார்க்கும் தனம் ,வாக்கு ,படிப்பு மற்றும் குடும்ப ஸ்தானத்தை பாதிக்கிறது.
இதேபோல் இவை இரண்டும் இணைந்து பார்க்கும் ஸ்தானங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது.இதுபோன்ற அமைப்பை பெற்றவர்கள் சனி திசை செவ்வாய் புத்தியிலோ அல்லது செவ்வாய் திசை சனி புத்தியிலோ எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.

                  "இதேபோல சந்திர பகவானோடு சுக்கிரன் இணைந்து பத்து பாகைக்குள்ளாகவோ அல்லது சந்திரனும்,சுக்கிரனும் 180 பாகை வித்தியாசத்தில் ஏழாமிடம் அல்லது நான்காமிட தொடர்பு ஆண்/பெண் யாராக இருந்தாலும் காம உணர்வு மிகுந்து வேலி தாண்டிய வெள்ளாடு போலவும்,பல மலரை நாடி சுவைக்கும் வண்டு போல" ஆகுவார்.
"சந்திரனுடன் ராகு பகவான் சேரும்போது மனக்குழப்பங்களும்,திருமண தடையையும் தரும்.தாய் ஸ்தானம் பாதிப்பு உண்டாகும்.

சந்திரனுடன் கேது பகவான் சேரும்போது ஆன்மீக நாட்டம் மிக்கவராகவும்,ஞானமுடையவராக்கும்.திருமண தடையை உண்டாக்கும்.தாய் ஸ்தானம்  பாதிக்கப்படும்
சந்திரனுடன் சனி சேரும்போது திருமண தடை ,மனக்குழப்பம் உண்டாகும்.

                                                                     


சந்திரனுடன் செவ்வாய் பகவான் சேர்திருக்கும்போது "சசிமங்கள யோகம்" எனும் யோகத்தை வாரி வழங்கி மனைவியால் யோகத்தை வாரி வழங்குகிறது.

சுக்கிர பகவானோடு செவ்வாய் பகவான் சேரும்போது "பிருகு மங்கள யோகத்தை " அள்ளித்தருகிறது.காதல் திருமணத்தை கொடுக்கும்.
சுக்கிர பகவானோடு ராகு /கேது இணைவுபெறும்போது சுக்கிரன் களஸ்திரகாரகனாதலால் திருமண தடையை உண்டாக்கும்.மேலும் வாகன காரகனாதலால் வாகனயோகம் பாதிக்கப்படும்.

குரு பகவானோடு ராகு பகவான் இணையும்போது "குரு சண்டாள யோகத்தை "தந்து ஆன்மீக நாட்டமின்றி இருப்பர்.புத்திரபாக்கிய தடையை உண்டாக்குவார்.

குரு பகவானோடு கேது சேரும்போது  தரும் பலனை பின்வரும் பாடலை கவனியுங்கள்

"வல்லரவு தனித்திருந்து மறையவனோடு இசைஞானி மறுவக்காணில் எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவன் என இயம்புவதற்கு ஏதுவாய் இருப்பான் போலும் "
 
                      என பாடப்படுவதன் மூலம் குருவோடு கேது இணையும்போது ஏழாமிடத்தில் ராகு இருக்கும் (தனித்திருக்க வேண்டும்) போது ஆன்மீக நாட்டம் மிக்கவனாகவும்,தனம் மிக்கவனாக இருப்பான்.புத்திர தடையும் ஏற்படும்.

                    "குரு பகவானோடு சனி பகவான் இணையும் போது ஆன்மீக சான்றோர்களாக்கி விடும்".

                    "குரு பகவானோடு செவ்வாய் இணைவுபெறும் போது "குருமங்கள யோகத்தை" வாரி வழங்குவார்.இதன் பலன் நல்ல மனைவியும் ,மனைவியால் யோகமும் உண்டாகும்.

                  "சூரியனோடு புதன் பகவான் இணைவு புத ஆதித்ய யோகம் எனும் சரஸ்வதி யோகத்தை வழங்கி பல பட்டங்களை பெறக்கூடிய கல்வி புலமையை தந்துவிடுகிறது ".

                                                                       


                   மேலும்
                "விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டு நான்கு ஒன்றில்                          வளையக்கூடின் மன்னவனாம்"

                        ஆம் புதனும் சூரியனும் இணைந்து எட்டு ,நான்கு மற்றும் ஒன்றில் இருந்தால் அந்த காலத்திற்கு மன்னன் ஆனால் காலத்திற்கு ஏற்றார்போல தற்பொழுது அரசு அதிகாரியாகலாம்.
இந்த யோகத்தை சிறப்பாக பெற வேண்டுமெனில் இரண்டில் ஒன்று ஆட்சி உச்சம் போன்ற அமைப்பை பெறவேண்டும்.

                    சில நேரங்களில் சூரியனோடு இணைந்த புதன் உச்ச வக்கிரம்,பாவிஇணைவு,பாதகஸ்தானம் மற்றும் நீசம் போன்ற அமைப்பை பெற்றால் மேற்கண்ட யோகம் வேலை செய்யாது.
பாவியோடு சேராத புதன் யோகராக உள்ளார்.புதன் வலிமை பெற்று சுபரோடு சேரும்போது ஜாதகரை கணிதம்,ஜோதிடம் போன்ற துறைகளில் மிளிர வைப்பார்.

                          புதனோடு சந்திர பகவான் சேரும்போது கதை ,கவிதை ,கட்டுரை எழுததூண்டி சிறந்த எழுத்தாளராக்குவார்.வேடிக்கையாக பேசுவதில் வல்லவராகி பேச்சாளராக்கும்.இசை நாட்டம் உண்டாக்கும்.
அதேநேரத்தில் புதன் பகவானோடு பாவிகளான ராகு,கேது ,சனி போன்ற பாவிகள் சேர்க்கை பெறும்போது பாவராகி புதனுக்குரிய காரகத்தை எதிர்மறையாக செய்ய வைக்கும்.

                      சூரியனோடு பாவிகளான ராகு,கேது  பகவான் சேரும்போது தகப்பனால் எவ்வித பலனும் கிடைப்பதில்லை.அரசாங்க யோகம் குறைவு ஏற்படலாம்.சம்பாதிக்கும் திறமை குறையும்.இங்கு சூரியன் என்பவர் அரசு கிரகமாகவும் ,தந்தைக்கு காரகரும் ஆவார்.

                       மேலும் "சூரியன் என்பவர் தந்தை அவரது மைந்தன் சனி பகவானும் இணைந்திருந்தால் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவுநிலை சரியாக அமையாது.

                    சனியும் ,செவ்வாயும் இணைந்து நான்காமிடத்தில் இருந்தால் ஒருவரின் குணத்தை கெடுத்து காம எண்ணத்தை தூண்டும்.ஏழாமிடத்தில் இருந்தால் தாமத திருமணம் உண்டாகும்.
எனவே ஒரு மனிதன் நல்லவரோடு பழகும்போது நல்லவனாகவும்,தீயவர்களோடு சேரும்போது தான் தீயவனாகி தீமை செய்வதுபோல கிரகங்களும் சுபரோடு சேர்ந்தால் நன்மையையும்,பாவியோடு சேரும்போது தீமையை தருகிறது என இதுவரை பார்த்தோம்.இவை அனைத்தும் கடந்த பல ஆண்டு ஆராய்சி செய்து பல ஜாதகங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்த பின்னரே மற்றவர்களும் பயன்பெறட்டும் என நோக்கோடு இங்கு பகிர்ந்துள்ளேன்.

              (  "இதேபோல தங்களது சாதகங்களில் உள்ள கிரக சேர்க்கைகள் பற்றியும் அதனால் பலன் உண்டா ? என தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்கண்ட எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ அல்லது செல் மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு.சிலர் போன் வழியாக ஒரு சில கிரகங்களை கூறி பலன் கேட்கின்றனர் இது தவறு தங்களது முழு ஜாதகம் பார்க்காமல் கூறும் பலன் தவறாக அமைந்துவிடும் எனவே இதுபோல் கேட்பவர்களை தவிர்த்துவிடுவதற்கு மன்னிக்கவும்.)
                                                   


அன்புடன்
சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
PG Assistant chemistry (Teacher)
Astrology Researcher
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு
செல் : 97 151 89 647
My Email
masterastroravi@gmail.com
சோதிடம் தொடர்பான அதிக தகவலு பெற கீழ்காணும் எனது முகநால் பக்கத்தை கிளிக் செய்து இணைந்திடுங்கள்.
My facebook link
m.facebook.com/ravichandran3538039

No comments:

Post a Comment