Tuesday 28 July 2015

( 4 ) உங்களது ஜாதகப்படி உங்களுக்கு புத்திரபாக்கியம் உண்டா?!....நீண்ட தொடர்


உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா ?-நீண்ட தொடர்


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

           "செல்வம் எனறு செல்லப்படும் செல்வம் அனைத்தையும் படைத்து பல்லோறுடன் உண்டு மகிழும் செல்வந்தராயினும் சின்னஞ்சிறு கைகளை நீட்டியும் ,குறுகுறுவென நடந்தும் ,தட்டில் இட்ட சோற்றை தரையில் கொட்டியும்,கைகளால் பிசைந்தும், நெய்யிட்ட சோற்றை உடம்பின்கண் படச்செய்தும்,இன்பமயக்கத்தில் ஆழச்செய்யும் புதல்வரை பெறாதவர்க்குப் பயனால் முடிக்கப்படும் பொருள் யாதுமில்லை என்பதால் பிள்ளைப்பேறு எவ்வளவு முதன்மையானது.

ஓருவன் பெறும் செல்வங்களுள் நன்மக்களை பெறுதலே சிறப்பானது.
பிள்ளையில்லாத பாக்கியம் எவ்வளவு பெற்றாலும் பிள்ளை பாக்கியத்திற்கு நிகராகது.


இக்கருத்தை மக்களின் புறவாழ்வுபற்றி கூறும் "புறநானூறு"
அழகாக எடுத்துரைக்கிறது.


""படைப்புப்பல படைத்துப் பலரோடுண்ணும் உடைப்பெருஞ்செல்வராயினும் மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்துத் மயங்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறையில்லைத் தாம் வாழும் நாளே""



                                                            




புத்திர ஸ்தானம் என்பது:

***************************
ஓரு மனிதனுக்கு புத்திர ஸ்தானம் என்பது அவனது ஜாதகத்தில் உள்ள பணிரெண்டு கட்டங்களில் ஐந்தாவது கட்டமாகும்.இதே கட்டம் தான் பூர்வபூண்ணியஸ்தானமுமாகும்.இதிலிருந்து முற்பிறப்பில் நல்ல புண்ணிய காரியங்களில் ஈடுபட்டிருந்தால் இப்பிறப்பில் நல்ல புத்திரம் கிடைக்கும் என்பதனை சூட்சுமமாக தெரிவிக்கும் பொருட்டே வைத்துள்ளார்கள்.

ஐந்தாமிட அதிபதியை புத்திரஸ்தானாதிபதி என்போம்.

பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு
பகாவானை புத்திரகாரகன்  என அழைக்கப்படுகிறது.
பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் இடத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

                                                                   




புத்திரபாக்கியம் பற்றி அறிய நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை:

***********************************
             5 ம் இடம் ,9 ம் இடம் மற்றும் அதன் இரு அதிபதிகள் மேலும் நவகோள்களில் புத்திரகாரகன் என அழைக்கப்படும் குரு பகவான்
மேற்கண்ட இவர்களின் நிலையை கவனிக்கவேண்டும்.



புத்திரபாக்கியம் அமைய எனது அனுபவ ரீதியான  கிரக நிலை விளக்க:-

1)  புத்திர ஸ்தானாதிபதி சுப நட்சத்திர  சாரம் பெற்று  ஆட்சி,உச்சம்,கேந்திரம்(1,4,7,10),கோணம்(1,5,9),மற்றும்  நட்பு பெற்று
சுபர் பார்வை பெற வேண்டும்.மறைவு ஸ்தானங்களில் (6,8,12)  இடம் பெற கூடாது.
இங்கு சுபர் என குறிப்பிடபடுவது  குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன்,பாவியோடு சேராத புதன்.


2)  புத்திரஸ்தானத்தில் அசயர்களான ராகு,கேது,சனி(செவ்வாய் தவிர ஏனெனில் காம காரகன் என்பதால்)  போன்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம்.

3)  புத்திரகாரகன் குரு நீசம் அஸ்தமனம்,பகை பெறாமல்  பலம் பெற்று (ஆட்சி,உச்சம்,கேந்திரகோணம்)  மறைவு ஸ்தனங்களாகிய 6,8,12 இடம்
பெறாமல் சுப சாரமும்,பார்வையும் பெற்றிருக்கவேண்டும்.


4)  ஐந்துக்கு ஜந்தாமிடமாக ஒன்பதாமிடம்  அமைவதால்
பாக்கிய ஸ்தானத்தையும் கவனித்தல் நலம்.


5) ராசிக்கு ஐந்தாமிடத்தையும் மேற்கண்ட அமைப்புபடி உள்ளதா எனவும் கவனிக்க வேண்டும்


மேற்கண்ட அடிப்படையில் கிரகங்கள் இருப்பின் அவர்களுக்கு பார்போற்றும் புத்திரன் அமைவான்.

                                                            




குழந்தை பாக்கியம் அமைய நான் கற்ற பல்வேறு ஜோதிடநூல்களின் கருத்து;-

          1)  கடக லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு  குரு லக்கனத்தில் உச்சம் பெற்று இருந்தால் சத்புத்திர பாக்கியம் ஏற்படும்.

           2)  குரு பகவான் 9 -ல் ஆட்சி பெற்றிருந்தால் சத்புத்திர பாக்கியம் ஏற்படும்.

       3 )  குரு பகவான் 2 அல்லது 11 -ல் இருப்பின் புத்திர பாக்கியம் ஏற்படும்.

       4 )  குருவுடன் சந்திரன் இணைந்து  லக்கினம் 9  அல்லது 11 ல் இருந்தால் ஜாதகருக்கு சுட்டிதனமுள்ள புத்திசாலிதனமான குழந்தை பிறக்கும்.

      5)   குரு பகவான் துலாத்தில்  சுக்கிரனுடன்  இருப்பின் ஆண்,பெண் குழந்தைகள் பிறக்கும்.

   6)  செவ்வாய் 11-ல் சுக்கிரனுடன் இணைந்திருப்பின் ஜாதகருக்கு ஆண் பெண் வாரிசு ஏற்படும்.

7)  செவ்வாய்  4-ல் சுக்கிரனுடன் இணைந்து காணப்படின் தாமத குழந்தை பாக்கியம் ஏற்படும்.

8 ) குருவும், செவ்வாயும் இணைந்து 9  அல்லது  10- ல் இருப்பின் ஆண் குழந்தைபாக்கியம் ஏற்படும்.

9 )  குருவும்,செவ்வாயும் இணைந்து
இரண்டு அல்லது நான்கில் இருந்தாலும புத்திரபாக்கியம் ஏற்படும்..குருவும்,ஜந்தாம் வீட்டிற்குரிய கோளும் சமசப்தமாக பார்த்துக்கொண்டாலும் புத்திர பாக்கியம் உண்டு.


10 ) குரு நின்ற இடத்திலிருந்து  5- மிடத்தில் சுபகோள் நின்றாலும் புத்திரபாக்கியம் உண்டு.

                                                                


அதிக புத்திர பாக்கியம்  ஏற்பட
++++++++++++++++++++++++,+,
1) ஐந்தாமாதிபதியும்,ஒன்பதாமாதிபதியும் சுபஸ்தானம் பெற்று கேந்திர,திரிகோணம் பெற்று சுபகிரகங்களால் பார்க்கப்பட்டால் வெகு புத்திரர்கள் உண்டு.


2 )கன்னி லக்கனமாகி ஐந்தாமிடத்தில் செவ்வாய் உச்சம் பெற்றால்  ஜந்து குழந்தை
கள் உண்டு.

3) துலாம் ஜென்ம ராசியாக இருந்து ஐந்தில் சனி ஆட்சி பெற்றால் பல புத்திரம் உண்டு.

இரட்டை குழந்தை பிறக்க:
***************************
1)  ஜந்தாமாதிபதியும்,மூன்றுக்குடையவரும் கூடி மூன்றில் இருப்பின் இரட்டை குழந்தை பிறக்கும்.


ஆண்குழந்தைகளே பிறக்கும் ஜாதகம்:-
+++++++++++++++++++++++++++++
ஐந்தாமாதிபதி ஆண்கிரகமாகி ஆண் ராசியில் இருந்து குரு,சூரியன்,செவ்வாய் இவர்களால் பார்க்கப்பட்டால் ஆண் குழந்தைகளே பிறக்கும்.


பெண்குழந்தைகளே பிறக்கும் ஜாதகம்:-
+++++++++++++++++++++++++++
1) ஐந்தாமாதிபதி பெண் கிரகமாகி பெண் ராசியில் இருந்து சனி,புதன்,சுக்கிரன்,ராகு இவர்களால் பார்க்கப்பட்டால் பெண் குழந்தைகளே பிறக்கும்.

2 )மீனத்திற்கு ஜந்தாமிடம் கடகம் இதில் குரு உச்சம் பெற்றிருந்தால் பெண் குழந்தை பிறக்கும்.

3 ) புத்திர தோஷமுள்ள. ஜாதகருக்கு ஐந்தாமிடத்தில் குரு இருந்தாலும் பார்த்தாலும் பெண் புத்திரம் ஏற்படும்

4 ) ஐந்தாமிடம் மகர ராசியாக இருந்து அதில் சனி ஆட்சி பெற்றால் பெண் புத்திரம்.

                                                                        


புகழுடைய குழந்தை பிறக்க
+++++++++++++++++++++++++
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னாற்றான்கொல் எனும் சொல்"
என்ற குறள்படி "இது போன்ற பிள்ளையைப் பெற இவனது தந்தை என்ன தவம் செய்தானோ என  பிறர் போற்றும்படியான  பிள்ளைகளைப்பெற உங்களது ஜாதகத்தில்

1)  குரு,சந்திரன்,செவ்வாய் மூவரும் இணைந்து லக்கனம் ,2,4,9,10,11 ஆகிய இடங்களின் ஒன்றில் இருப்பின் ஆண்-பெண் குழந்தைகள் ஏற்பட்டு பிறக்கும் சிறு வயதிலே பெறும் புகழை அடையும்.

2) தனுசு லக்கனத்திற்கு ஜந்தாமாதிபதி செவ்வாய் கேந்திர,திரிகோண ஸ்தான அமைப்பு பெற்று ஜந்தாமிடத்தை குரு பார்த்தால் புத்திரத்தால் பெருமை ஏற்படும்.தந்தையை விட புகழுடையவர்களாக மாறுவார்கள்.

நிறைவுரை:-
"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்செல் கேளாதவர்"
  தாம் பெற்ற குழந்தையின் மழலைச்சொல் கேளாதவர்தான் யாழ் இனிது,குயிலின் குறள் இனிது
என்பார்கள் என்கிறார் திருவள்ளுவர்.
புத்திரம் பாக்கியம் பற்றி எனக்கு தெரிந்த ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.அடுத்த பதிவில் புத்திரதோஷம் ஏன் ஏற்படுகிறது அதற்கான பரிகாரங்களை உங்களுடன் பகிரலாம்  என உள்ளேன்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
                                 



அன்புடன் 
சோதிடர்  சோ.ப.ரவிச்சந்திரன்

                    M.SC,MA,BEd

முதுநிலை வேதியியல் ஆசிரியர்,

ஓம் சக்தி ஜோதிட ஆராய்ச்சி நிலையம்,கரம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு.


அலைபேசி:9715189647
அலைபேசி : 740 257 08 99

எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647


Email; masterastroravi@gmail.com


My bank Account detail

P.Ravichandran
Account no;  105201000004608

Bank:  I.O.B

Branch:Regunathapuram.


வாழ்க மகிழ்வுடன் நன்றி.






1 comment:

  1. for kataga lagnam guru and sukra in 5th place in anusha naktra. mars in 4th place in vishaka naktara and saturn in 10th place in bharani nakthara.. what about getting child please tell sir.

    ReplyDelete