புதன் பகவான் தரும் புத்திசாலித்தனம்.
செவ்வாய்படி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு மனிதனை அறிவாளி ஆக்கக்கூடிய கிரகம் புதன் பகவானாவார் .
புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்ற நிலையில் உடல் உழைப்பின்றி மூளையைப் பயன்படுத்தி அதிகமாக பொருளீட்டி வாழ்வில் உயர்வடைவார்கள்.
தனது அறிவால் மனதை செலுத்தி உடல் உழைப்பின்றி ஒரு புதிய படைப்பை அதாவது படைப்பாற்றலை வளர்த்துக்கொண்டு அதன்மூலம் பொருளீட்டி புகழ்பெற வைக்கக்கூடிய கிரகம் புதன் பகவானாவார்.
இந்த உலகிற்கு புதிய கண்டுபிடிப்பை தருபவரும் புதன் பகவானாவார்.
தனது எண்ணத்தை குவித்து சிந்தனையால் செயல்களை செய்ய வைப்பவர் புதன் பகவானாவார்.
இந்த உலகம் போற்றக்கூடிய பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், தலையங்கம், நாவல்கள் சிறுகதைகள்,, இதிகாசங்கள் மற்றும் இசை போன்றவற்றை படைக்கக் கூடிய ஆற்றலை மனிதனுக்கு தரக்கூடிய கிரகம் புதன் பகவானாவார்.
எதிர்காலத்தை தனது ஆராய்ச்சியால் புள்ளி விவரமாக துல்லியமாக தரக்கூடிய ஆற்றல் படைத்த சோதிடரை உருவாக்க வல்ல கிரகம் புதன் பகவானாவார்.
ஆலோசனை வழங்குவதில் மந்திரியாகவும், புள்ளிவிவரங்களை தருவதில் கெட்டிக் காரராகவும், சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதில் வல்லமை படைத்தவராகவும், மனதை இளமையாக வைத்து கொள்ளக்கூடிய ஆற்றல் படைத்தவரும் புதன் பகவான் தனது ஜாதகத்தில் பலமாக பெற்றவர்களே ஆவார்.
அழகிய கைவேலைப்பாடுகள், சித்திரம் வரைதல்,
சிற்ப வேலைப்பாடுகள், போன்றவற்றில் தனித்துவம் நிறைந்த நிபுணத்துவம் பெற்றவராக ஒருவரை திகழ வைப்பதும் புதன் பகவானாவார்.
இன்றைய அபரிதமான இணைய வளர்ச்சியில் கணிப்பொறியை அதிகமாக பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கக் கூடிய நிபுணத்துவம் பெற்றவரும் புதன் பகவான் பலமாக பெற்றவர்களே ஆவார்.
புதன் பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றவர்கள் அனைவரும் மேற்கூறிய திறமை பெற்றிருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது சில நேரங்களில் தவறாகவும் கணித்து விடக்கூடும்.
சில நேரங்களில் உபய லக்னத்திற்கு புதன் கேந்திரங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று கேந்திராதிபத்திய தோஷம் என்ற வகையில் எதிர்பார்த்த பலனைத் தராமல் போய் விடுவதும் உண்டு.
மிதுன லக்னத்திற்கு நான்காமிடத்தில் உச்சம், ஆட்சி மற்றும் மூலத்திரிகோணம் என்ற நிலையில் பலம் பெற்றிருந்தாலும் அது கேந்திராதிபத்திய தோஷத்தை தரும் என்ற வகையில் நீங்கள் பெரிய கணித அறிவு பெற்றவளாக,, கம்ப்யூட்டர் அறிவு பெற்றவராக இருப்பார் என்று நீங்கள் விரிந்து உரைத்தால் கடைசியில் அவர் படிப்பறிவு இல்லாத
ஆடு ,மாடு மேய்க்கும் சிறுவனாக இருக்கக்கூடும்.
சில நேரங்களில் புதனுடன் சனி ,செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்களுடைய நெருக்கமான இணைவு எதிர்பார்த்த பலனைத் தராமல் மாற்றிவிடக் கூடிய வாய்ப்பும் உண்டு. அதேநேரத்தில் மேற்கூறிய இயற்கை பாவ கிரகங்கள் இணைந்திருந்தாலும் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன் மற்றும் சுக்கிரன் போன்றவற்றை தொடர்பு பெரும்பொழுது மீண்டும் அதன் பாவ தன்மை நீக்கி சுபத்தன்மை பெற்று எதிர்பார்த்த மேற்கூறிய பலனை அதன் தசை காலங்களில் சிறப்பாக தரும்.
லக்கினாதிபதி பலமடைந்துள்ள நிலையில் உகந்த தசை அமைப்புக்கள் வரும் காலங்களில் புதன் பகவானை பலமாக பெற்றவர்களே அறிவாற்றலால் இருந்த இடத்தில் இருந்து அகில உலகத்தையும் ஆளக்கூடியவராகிறார்கள்.
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.