Thursday 5 November 2015

( 7 ) உங்களுடைய ஜாதகப்படி எந்த துறையை நீங்கள் தேர்வு செய்யலாம் ?

                            

உங்களுடைய ஜாதகப்படி எந்த துறையை நீங்கள் தேர்வு செய்யலாம் ?

                                            



ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

            அன்பிற்குரிய பெற்றோர்களே 
      தங்களது  குழந்தைகளுக்கு என்ன துறையை தேர்ந்தெடுக்கலாம் என குழம்பிக்கொள்ளும் பெற்றோர்களுக்கு இந்த கட்டுரையை தொடர்ந்து படிப்பதன் மூலம் ஒரளவு  புரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவு பதியப்படுகிறது.

மருத்துவராகும் யோகம் உண்டா என தெரிந்து கொள்ள :-


       தங்களது குழந்தைகள் மருத்துவராகும்  யோகம் உள்ளதா என தெரிந்து கொள்ள கீழ்கண்ட அமைப்பை  உங்களது குழந்தைகளின் ஜாதகத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

            1)  உயிர் லக்கனத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாய்  பலம் பெற்று வாசம் செய்யவேண்டும் .


            2) பத்தாம் அதிபதியாக செவ்வாய்  வந்து ஆட்சி,உச்சம்,கேந்திர மற்றும் கோணம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் அக்கிரகம் சுபர் பார்வை,சேர்க்கை மற்றும் சாரம் பெற்றிருக்க வேண்டும்.

            3) பத்தாம் இடத்தை செவ்வாய் பார்வையிட வேண்டும்.அல்லது பத்தாம் இடத்ததிபதியும்,செவ்வாயும் சேர்ந்தோ,பார்வை பெற்றோ  மற்றும் பரிவர்தனையோ பெற்று சுப ஸ்தானத்தில் தங்க வேண்டும்.இத்தகைய நிலையில் செவ்வாய் நீசமடையாது இருக்க வேண்டும்.அனைத்திற்கும் மேலாக செவ்வாயும் ,பத்தாம் இடத்ததிபதியும் தீயோர் தொடர்பற்று இருக்க வேண்டும்.இதுனுடன் சூரியன் ஆட்சி,உச்சம் பெற்று சுப ஸ்தானத்தில் பலம் பெற்றிருக்க வேண்டும்.

           லக்கனத்திற்கு பத்தாமிடத்தை வைத்து  மருத்துவராகும் யோகத்தை பார்ப்பதுபோல ராசிக்கு பத்தாம் இடத்தையும் பார்த்து பலனுரைக்க வேண்டும்.

          இதேபோல் சூரியன்,சனி மற்றும் ராகுவும் மருத்துவ கிரகங்கள்.இவர்கள் இரண்டாம் பாவத்திற்கோ அல்லது இரண்டாம் அதிபதிக்கோ தொடர்பு ஏற்பட்டாலும் மருத்துவராகும் யோகம் ஏற்படும்.

விஞ்ஞானியாகும் யோகம்

சூரியனும்,எட்டாம் அதிபதியும் விஞ்ஞான அறிவாற்றலை தரும் கிரகமும் மற்றும் பாவமும் ஆகும்.இவர்கள் இருவரும் பலம் பெற்று இரண்டு,பத்தாம் இடத்திற்கு தொடர்பு ஏற்பட்டால் ஆராய்சி துறையில் படித்து முனைவர் பட்டம் பெறும் யோகமாகும்.மேலும் புகழ்பெற்ற விஞ்ஞானியாவார்.

எட்டாம் பாவகம் ஆராய்சி துறையையும்,புதிய கண்டுபிடிப்பையும் குறிப்பதாகும்.

சூரியன்,குரு,செவ்வாய் இணைந்து இரண்டு,பத்தாம் பாவத்தோடு தொடர்பு கொள்வது  விஞ்ஞானியாகும் யோகம்.இவற்றோடு புதனும் பலம் பெற்றால் மேலும் பல புகழைத்தரும்.

நீதிபதியாகும் அமைப்பு

     பத்தாம் பாவகம்  குரு,சனியால் பார்க்கப்படுவது.
    லக்கனாதிபதி ஆறில் பலம் பெற்று பத்தாம் பாவம் மற்றும் அதன் அதிபதியுடன் தொடர்பு ஙொள்வது.



     பத்தாம்  அதிபதி புதனாகி இரண்டாம் பாவத்தில் சனியுடன் இருந்து  குருவுடன் தொடர்பு கொள்வது.


       குரு பகவான் ஆறாம் பாவத்தில் பத்தாம் அதிபதியின் சாரம் வாங்கி நிற்பது.


பொறியியலராகும் YOGAM

     பத்தாம் அதிபதி சூரியன்,புதன்,சுக்கிரன் மற்றும் சனி இவர்களில் ஒன்றாக இருந்து  ஆட்சி,உச்சம் மற்றும் சுப சாரம் மற்றும் பார்வை பெற்றிருப்பின் பொறியாளர்.

பத்தாம் அதிபதி மற்றும் அதனோடு தொடர்புடைய கிரகங்களை பொறுத்தோ அவனது துறை அமைகிறது.

கீழ்கண்டவற்றுள் துறைகளும்,அத்துறைக்கு செல்வதற்கு ஆதரவாக அமர்ந்த கிரகங்களாகும்.


1)  கப்பல் துறை ; - சுக்கிரன்,சனி



2) காவல் துறை:- செவ்வாய்,புதன்,
                                     சனி




3) விமான துறை:-ராகு ,சனி



4) ரயில்வே துறை:-சனி,சந்திரன்



5) வேதத்துறை:-குரு,புதன்



6)விவசாய துறை:-செவ்வாய்,
                                    சூரியன்,சந்திரன்




7) மருத்துவதுறை;-ராகு,செவ்வாய்
                                      சனி




8) மின்சாரத்துறை:-செவ்வாய்,ராகு



9) சினிமாத்துறை:-சுக்கிரன்,புதன்
                                    சந்திரன்




10) பத்திரிக்கை துறை:-புதன்,சனி



11)வங்கி துறை:-குரு,சுக்கிரன்,புதன்



12)ஜவுளி துறை:-சுக்கிரன்,புதன்



13)ஹோட்டல் துறை:-சுக்கிரன்



14) அரசியல் துறை:-சூரியன்,சனி
                                         செவ்வாய்




15)இராணுவ துறை:-செவ்வாய்,சனி



16)கல்வி துறை :- குரு,புதன்,கேது



17)கணிப்பொறி;-ராகு,செவ்வாய்



18) இசைத்துறை:- குரு,கேது,
                                     சுக்கிரன்




19) விளையாட்டு துறை:-சூரியன்
                                                   செவ்
20)பல சரக்கு கடை;-
                                        புதன்,சனி




22)கோவில் திருப்பணி:-



             நான்காம் அதிபதியுடன் பத்தாம் அதிபதி கூடினால் கோயில் திருப்பணி

     23) அக்கவுண்ட் தொழில்:-
                    லக்கனம் மற்றும் லக்கனாதிபதியுடன் குரு,புதன் சம்பந்தப்பட்டால் கணக்கெழுதும் வேலை அமையும்.

24) கமிஷன் ஏஜண்ட்;-
                1,4-ஆம் அதிபதிகள் சம்பந்தம் ஏற்பட்டு நான்காம் பாவத்திற்கு  புதன்-சனி சம்பந்தம் ஏற்படுவது.


  24) பால் பண்ணை வியபாரம் :-
                நீர் ராசிக்கிரகம் சந்திரன்,சுக்கிரன்.இதேபோல் சாதக கட்டத்தில் ஏழாம் பாவம் பால்,தயிர் இவற்றை குறிக்கும்.எனவே மேற்கண்ட இரு கிரகங்களும்(சந்திரன்,சுக்கிரன்) ஏழாம் பாவத்திற்கு தொடர்புகொண்டு பலம் பெறுவது பால் பண்ணை வியபாரத்தை ஏற்படுத்தி தரும்.


25) விவசாயி
           விவசாய  கிரகமான  சனி,சந்திரன் மற்றும் செவ்வாய் நான்காம் பாவத்திற்கு சம்பந்தம் ஏற்பட்டு பலமடைந்தால் சிறந்த விவசாயி.
            இதேபோல சனி 1,3 -ம் பாவ தொடர்பு கொண்டாலும் விவசாய பண்ணை அமையும்.


26)வீடு கட்டி வாடகைக்கு விடுதல்:-
             பொதுவாக செவ்வாய் பலமடைந்தால் நிலபுலம் அதிகமாக சேர வாய்ப்புள்ளது.செவ்வாய் பூமிகாரகன்.எனவே செவ்வாய் நீர் கிரகமான சந்திரன்,சுக்கிரன் சாரம் பெற்றால் விவசாய நிலங்கள் வாங்கும் யோகம் அதிகம் உண்டு
,ஆனால்.செவ்வாயானது 4,7 ஆம் அதிபதி சாரம் பெற்று பலம் பெற்று  நான்கு,ஏழாம் அதிபதிகள் தொடர்பு பெற்று  அதனுடன் எத்தனை கிரகம் தொடர்பு ஏற்படுகிறது  அதற்கேற்றார்போல் அவன் இடம் வாங்கி  அத்தனை வீடுகள் கட்டி வாடகைக்கு வீடுவான்.

  27)தங்கநகை வியபாரம்:-
            தங்கத்தை குறிக்கும் கிரகம் சூரியன்,சுக்கிரன் ஆகும்.
              இவை லக்கனம் மற்றும் பத்தாம் அதிபதியுடன் தொடர்பு ஏற்பட்டால் தங்கநகை வியபாரம்(ஜீவல்லரி)  செய்யலாம்.இவற்றுடன் செவ்வாய் தொடர்பும் நல்லது.


28) நவதானிய வியபாரம்:-
                  இரண்டாம் பாவம் உணவு வகைகளையும்,நவ தானியத்தையும் குறிக்கும்.
               புதன்-உணவு தானியங்களையும்
               சந்திரன்-உணவு வகைகளையும்
               சனி-பருப்பு வகை நவ தானியங்களையும் குறிக்கும்.


மேற்கண்ட கிரகங்கள் லக்கன மற்றும் பத்தாம் பாவத்துடன் தொடர்பு ஏற்பட்டால் நவதானிய வியபாரம் மேற்கொள்ளலாம்.

29) சிட்பண்ட்ஸ் ,வட்டிக்கடை,பைனான்ஸ் கம்பெனி முதலாளி:-
      தனகாரகன் குருவானவர் தன,லாப ஸ்தான தொடர்பு ஏற்பட்டால் பைனான்ஸ் கம்பெனி நடத்தலாம்.


    தன,லாப பாவத்தின் திரேக்காணதிபதிகள் நவாம்சத்தில் குரு அல்லது புதன் வீட்டில் இருந்து குரு அல்லது புதன் சம்பந்தப்படுவது.      
     குரு 1,2,11  ஆம் பாவங்களில் ஏதாவதொன்றுக்கு சம்பந்தப்படுவது.


30 )போலிஸ் மற்றும் ராணுவம்:-
        ஒருவருடை சாதகத்தில் பத்தாம் அதிபதி செவ்வாயாக வந்து பலம் பெற்று இருப்பின் போலிஸ்,ராணுவம் போன்ற துறை.இந்த செவ்வாய் வீர தீர காரகமான மூன்றாம் பாவம்,எதிரி ஸ்தானமான ஆறாமிடமா ஆகியவற்றுடன் தொடர்பு அல்லது  பார்வை மற்றும் சேர்க்கை பெற்றிருக்கவேண்டும்.

               




அன்புடன்
சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd (Teacher & Astrologer)
ஓம்சக்தி சோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.தமிழ்நாடு.


வாட்ஸ் அப்
   9715189647

செல் : 9715189647.
செல் : 740 257 08 99


போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சாதக பலன் மற்றும் விவாக பொருத்தம் பார்க்கப்படும்.சாதகம் எழுதி போஸ்டலிலும் அனுப்பி வைக்கப்படும்.உங்களுடைய பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண் 97 151 89 647 க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம். )

(Do you want to consult your Horoscope through cell,contact me,charge is applicaple)

2 comments:

  1. cinema, political Patri kurunkal ayya

    ReplyDelete
  2. சரி தங்களது கோரிக்கையை ஏற்று சினிமா மற்றும் அரசியல் பற்றி பதிவிடுகிறேன்

    ReplyDelete