Monday, 30 November 2015

அரசியலில் ஈடுபட்டு சிறந்த அரசியல்வாதியாகும் யோகம்

                           

அரசியலில் ஈடுபட்டு மக்கள் போற்றும் மகத்தான தலைவராகும் யோகம் உங்கள் சாதகத்தில் உண்டா ?

                                            

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !


                 ஒரு மனிதன் அரசியலில்  ஈடுபட்டு மக்கள் போற்றும் மகத்தான அரசியல்வாதியாகும் யோகம் உண்டா ? என தெரிந்து கொண்டு அதற்கு பிறகு அரசியலில் தன்னை அர்பணித்துக்கொள்ளல் நலம் பயக்கும் .

.                 இதற்கு சிறந்த ஜோதிட புலமை பெற்ற ஜோதிடர்களை நாடி தமது சாதகத்தை நன்கு கோளாராய்சி செய்து அத்தகைய அமைப்பு தமக்கு உண்டு என உறுதி செய்து கொள்வது அவசியமாகும் .ஏனெனில் அரசியலும்,திரைப்பட துறையும் பேரும்,புகழும் சம்பாத்தியத்தோடு கிடைக்கும் பெரிய கனவு உலகம் ஆகும்.இந்த துறையில் நுழைந்து கொடி கட்டி பறந்தவர்களும் உண்டு,எல்லா சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தவர்களும் உண்டு.


              அரசியலில் தம்மை அர்பணிக்க விரும்புவர்கள் அரசியலில் எந்த விதமான யோகம் உள்ளது என தெளிவாக தெரிந்துகொள்ளல் அவசியம்.வெறும் கட்சி வேஷ்டி மட்டும் கட்டிக்கொண்டு தொண்டன் என தன்னை காட்டிக்கொண்டு தனக்கும் பயன்படாமல் ,வீட்டிற்கும் பயன்படாமல் வாழும் நிலையா ?

         இல்லை அரசியலில் கீழ் மட்ட கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு தான் சார்ந்த கட்சி என்பதற்காக அவர்கள் செய்யும் நன்மை தீமைகளை டீக்கடையில் உட்காந்து கொண்டு வெட்டி பேச்சு பேசி வினயத்தை உண்டாக்கும் நிலையா?

       இல்லை பஞ்சாயத்து,ஊராட்சி,மாவட்ட அளவில் தலைவராகி மக்கள் சேவை செய்யும் நிலையா ?


        இல்லை ஒரு கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக இருந்து தேர்தலில் சட்டமன்ற ,நாடளமன்ற உறுப்பினராகி அமைச்சராகும் நிலையா ? 

இல்லை ஒரு கட்சியை உருவாக்கி அதன் தலைவராகி பிறகு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர்,பிரதமராகி மக்கள் போற்றும் மகத்தான தலைவராகும் யோகம் உண்டா ? என நன்கு ஆராய்ந்து தெரிந்து கொள்ளல் நலம்.

      எனவே அரசாளும் யோகம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு பல ஆண்டு நான் முயன்று பரம்பொருள் ஆசியுடன் பெற்ற சோதிட ஞானத்தை பல மணி நேரம் செலவழித்து உங்களுக்காக பதிவிடுகிறேன் படித்து பயன்பெறுங்கள்.
     
      அரசியல் யோகம் தரும் கிரகங்களில் முக்கியமான மூன்று கிரகங்கள் சூரிய பகவான்,சனி பகவான் மற்றும் ராகு பகவான் ஆகும்.இவை ஒருவருடைய ஜாதகங்களில் கேந்திர ,திரிகோணமேறி பலம் பெற்றிருக்க வேண்டும்.

                                                    


       இதற்கு அடுத்த நிலை பெறும் அரசியல் யோகம் தந்து நிர்வாகிக்கும் திறனை அளிக்கக்கூடிய கிரகங்கள் புதன் பகவான்,சுக்கிர பகவான்,துணிச்சலான முடிவெடுக்க கூடிய செவ்வாய் பகவான் மற்றும் அரசியல் தந்திரத்தை அளிக்கக்கூடிய கேது பகவானின் நிலைகளையும் கவனிக்கப்பட வேண்டும்.

       தொழில் ஸ்தானம் என சொல்லப்படும் பத்தாமிடத்தில் ராகு பகவான் இருந்து உச்சம் பெற்று குரு பகவானின்  பார்வையைப்  பெறும் அமைப்பை பெற்றவர்களுக்கு அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெறும்
யோகம் உண்டு.இவர்களுக்கு தமது வாழ்வில் சந்திக்கும் ராகு பகவானின் திசையில் இத்தகைய அமைப்பை பெறுவார்கள் என்பது திண்ணம் ஆகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் அதிபதியை லக்கனமாக கொண்டு தர்ம-கர்மாதிபதி யோகத்தைப் பெற்றவர்கள்.அவர்கள் தாங்கள் சந்திக்கும் ஒன்பது அல்லது பத்தாமாதிபதியின் திசை காலத்தில் அரசியலில் பிரபலமாகும் யோகத்தை அளிக்கும்.

         சனி பகவான் லக்கனத்தில் இருந்து வர்க்கோத்தம பலன் பெற்றது தங்களது தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தை பார்த்தால் மக்கள் போற்றும் தலைசிறந்த அரசியல்வாதியாக வலம்வருவார்கள்.
ஒருவரின் சாதகத்தில் ஒன்பது மற்றும் பத்தாமாதிபதி சேர்க்கை ,சமசப்தம பார்வை மற்றும் பரிவர்தனை பெற்று "தர்ம-கர்மாதிபதி யோகம் "பெற்றவர்களுக்கும் தம்மை சுற்றி இட்ட வேலையைச் செய்யும் ஏவலாளிகளும்,தெய்வமாக மதிக்கும் தொண்டர்கள் புடைசூழ புகழ் பெற்ற அரசியல் தலைவராக வலம் வருவார்.

                இதே போல சூரியனும்,சந்திரனும் 180 பாகையில் நின்று  சமசப்தமாக சந்திக்கும் பொளர்ணமி யோகத்தினை பெற்றவர்களும் அரசியல் புகழ் பெற்றவர்கள்.

                                                                    


                        இரண்டு,ஐந்து ஆம் அதிபதிகள் உச்சம் பெற்று அல்லது ஆட்சி பெற்று வக்கிரம் பெற்ற கிரகங்கள் ஒன்பதாம் பாவம்,பதினொன்றாம் பாவம் மற்றும் லக்கனம் இவற்றை பார்ப்பது.அம்சத்தில் உச்சம் பெறுவது .இவர் நேர்மை மாறாத அரசியல்வாதி ஆவார்.

                             பத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று அதனுடன் செவ்வாய்,ராகு,கேது தொடர்பு மற்றும் அரசாளும் கிரகம் சூரிய பகவானும் வலுப்பெற வேண்டும்.

                           குரு பகவான் உச்சம் பெறுவதும்,சுக்கிர பகவான் ,புதன் பகவான் ஆட்சி பெறுவதும் நாடாளும் யோகத்தை உண்டாக்கும்.
வக்கிரம் பெற்ற கிரகம் குரு,சூரியன் பகவான் பத்தில் இருந்தாலும் ,அம்சத்தில் சூரியன் பகவான் உடன் சம்பந்தப்பட்டாலும் யோகம் உண்டு.

                               சந்திரனுக்கு பத்தில் ராகுபகவான் சம்பந்தப்பட்டாலும்,சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் ஒரே ராசியில் இருந்து அமாவாசை யோகம் பெற்று இருவரில் ஒருவர் ஆட்சி பெற்றவர்கள் அரசியல் யோகம் உண்டு.

                                   யாருக்கு அதிகாரம் செய்யும் தலைமை பதவி கிடைக்கும் என்றால் ஒருவருடைய ராசிக்கட்டத்தில் ஒன்பதாம் அதிபதி இருக்கும் ராசிக்கதிபதி உச்சம் பெற்று பத்தாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டு லக்கனத்தை பார்க்க வேண்டும்.

                       இவை மட்டுமல்ல லக்கனாதிபதி இருந்த ராசிக்கதிபதி செவ்வாய் பகவானுக்கு திரிகோண கேந்திரமேறி ஆட்சி,உச்சம் பெறும் அமைப்பை பெற்றவர்களுக்கு அரசியல் லாபம் ஏற்படும்.

                      ஒரு சிலருக்கு லாபத்தை தரும் ஸ்தனமான  பதினொன்றாம் அதிபதி உச்சம் பெற்று அவர்களுடன் சூரியன்,சந்திரன்  ஆகிய இருவரும் இணைந்து நின்று கேந்திரத்தில் இருக்கும் சுபர் பார்க்கவேண்டும்.
மேற்கண்ட அமைப்பை பெற்றவர்கள்.


                            அதிகாரம் செய்யும் அமைப்பைப் பெற்றவராகள் ஆவார்.
சனி பகவான் ஆட்சி உச்சம் பெற்று பஞ்சமகாயோகங்களில் ஒன்றான சசக யோகம் நிரம்ப பெற்றவர்கள் அரசியல் தலைவராகும் அமைப்பைப்பெற்றவர்கள்.

                                                                


                             "விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டு நான்கு ஒன்றில் வளையக்கூடின் மன்னவனாம்"-ஆம் ஒருவரது ஜாதகத்தில் சூரியனும்,புதனும் ராசிக்கட்டத்தில் ஒன்று,நான்கு மற்றும் எட்டில் இருந்து ஆட்சி ,உச்சம் போன்ற பலம் பெற்றிருந்தால் மன்னனாவன் என இப்பாடல் விளக்குகிறது.இப்பாடல் எழுதப்பட்ட காலத்தில் மன்னராட்சி  நடைபெற்றதால் மன்னர் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.தற்பொழுது காலத்திற்கு ஏற்றார்போல ஒரு நகரை நிர்வாகிகாகும் அரசியல் தலைவராகி அரசாளும் யோகமாக எடூத்துக்கொள்ளலாம்.

                              லக்கினாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி ஆகிய இவர்கள் இணைந்து ஒரே ராசியில் நின்று புதன் பகவான் எங்கு இருக்கிறாரோ அந்த வீட்டு அதிபதி இவர்களை கண்டால் இது போன்ற அமைப்பைப் பெற்றவர்கள் ஒரு துறையை நிர்வாகிக்கும் அமைச்சராகும் யோகம் பெறுவர்.

                                  யாருக்கு அரசியலில் உயர் பதவி வகிக்கும் நிலை அமையும் என ஜெயமினி விதிப்படி ஆராய்ந்து பார்த்தால் "லக்கனாதிபதி ,சந்திரனுக்கு ஐந்தில் குரு,சுக்கிரன் ஆட்சி,ஏழாம் அதிபதிக்கு ஐந்தில் அரசு கிரகமான சூரியன்,புதன்,கேது
பெற்றவர்களாவர்.


                               இதுவரை அரசியலில் ஈடுபட்டு சிறந்த அரசியல் தலைவராகி மக்கள் பணியாற்றுவதற்கு துணை புரியும் பொதுவான கிரக நிலைகளை பார்த்தோம்.


                            இனி பணிரெண்டு ராசிகளுக்கு உரிய அரசியல் யோகம் தரும் அமைப்பை பற்றி விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்.


                                                             


             மேஷ ராசிக்காரார்களுக்கு


                              லக்கனத்திலே அரசியல் கிரகமான ஐந்தாமாதிபதி சூரியன் உச்சம் பெற்று லக்கனாதிபதி செவ்வாய் பகவான் பத்தில் உச்சம் பெற்றும் லக்கனத்தை பார்க்கும் தன்மையைப் பெற்றவர்கள் மூர்க்கதனமான கோபத்தன்மையான குணம் கொண்ட அரசியல் தலைவராவர்.

                                 மேலும் டபுள் டெபாசிட்டர் என்ற முறையில்

 செவ்வாய் பகவான்
இருந்த வீட்டிற்குரிய சனி பகவானும் உச்சம் பெற்று சூரியனைப்பார்க்கும் போது சுப தன்மையற்ற அரசியல் தலைவராக வலம் வருவார்.
மேலும் பாக்கியாதிபதி குரு உச்சம் பெற்று விருட்சக ராசியில் உச்சம் பெற்ற ராகு பகவானை பார்க்கும் அமைப்பை பெற்றவர்களும் அரசியல் யோகத்தை அள்ளி தரும் ராகு பகவானின் திசையில் மாபெறும் அரசாளும் யோகத்தை அள்ளி தருவார்.

ரிஷப ராசிகாரர்களுக்கு,


                                இந்த ராசிக்காரர்களுக்கு லக்கனத்தில் கீர்த்தி புகழைத்தரக்கூடிய மூன்றாம் அதிபதி சந்திர பகவான் லக்கனத்தில் உச்சம் பெற்று பத்தாம் அதிபதி சனி பகவான் ஆட்சி பெற்றும்,சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெற்ற அமைப்பை பெற்றவர்கள் அரசியல் யோகத்தினை வழங்குவார்.

                            மேலும் இரண்டு ,ஐந்தாமிட ஆதிபத்தியம் பெற்ற புதன் பகவான் கன்னியில் ஆட்சி,உச்சம் மற்றும் மூல திரிகோண அமைப்பை பெற்றும் ,சிம்மத்தில் சூரியனை ஆட்சியாக கொண்டு லாபாதிபதி குருவால் புதன் பார்க்கப்படும் அமைப்பை பெற்றவர்களுக்கும் அரசியல் யோகம் உண்டாகும்.

மிதுனம் ராசிகாரர்களுக்கு,


                      புதன் பகவானை லக்கனாதிபதியாக கொண்ட மிதுன  ராசியைப் பெற்றவர்கள்  பெரும்பாலும் ஆட்சி புரிபவர்களாக இருப்பார்கள்.
இரண்டாம் ஸ்தானத்தில் ஜீவனாதிபதி குரு உச்சம் பெற்று ஐந்தாம் பார்வையாக உச்சம் பெற்ற ராகு பகவானை பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள்.

இதேபோல் பத்தாமிடத்தில் சுக்கிரனை உச்சமாக பெற்று சுப பார்வையை பெற்றவர்கள் அரசியல் யோகமளிக்கும்.


                                                                        


கடக ராசி அன்பர்களுக்கு,


                                             பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கடக ராசியை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஒன்பதாம் அதிபதி குரு பகவானும் ,பத்தாம் அதிபதி செவ்வாய் பகவானும் சம சப்தமாக உச்சம் பெற்று பார்த்து கொள்ளும் தர்ம-கர்மாதிபதியை பெற்றவர்கள்,

                                             லக்கனத்திலே குரு பகவானும்,சந்திர பகவானும் உச்சம்,ஆட்சி அமைப்பை பெற்று குரு-சந்திர யோகம் பெற்றவர்களும்,
இல்லை லக்கனத்திலே சந்திரன் ஆட்சி பெற்று பாக்கிய ஸ்தானமான
ஒன்பதாமிடத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று லக்கனத்தில் உள்ள சந்திர பகவானை பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள்,


கடக ராசிக்கு இரண்டுக்குடைய அரசு கிரகமான சூரிய பகவான் ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் உச்சம் பெறும் அமைப்பை பெற்றவர்கள்.
மேற்கண்ட அமைப்பை பெறும் வாய்ப்பு இருப்பின் அரசியல் யோகம் பெற்றவர்களாவர்.


சிம்ம ராசி அன்பர்களுக்கு ,


                     அரசு கிரகமான சூரியனை லக்கனாதிபதியாக பெற்றிருப்பதால் இந்த ராசியிலும் அதிகமான அரசியல் தலைவர்கள் இருப்பார்கள்.
சந்திரனை வர்க்கோத்தம் பெற்று சூரியனுக்கு ஏழில் இருந்து பொளர்ணமி யோகம் பெற்று லக்கனாதிபதியை யோககாரன்  செவ்வாய் பலம் பெற்று அரசு கிரகமான சூரியனை பார்த்தால் அரசியலில் புகழடையும் யோகம்.
மேலும் சிம்ம ராசிக்கு கீர்த்தி மற்றும் புகழை தரும் சுக்கிர பகவான் பத்தில் ஆட்சியோ அல்லது மீனத்தில் உச்சமோ பெற்றவர்களுக்கும் யோகமுண்டு.

கன்னி ராசி அன்பர்களுக்கு,


                               ஓன்பதாமதிபதி சுக்கிரன்,பத்தாமாதிபதி புதன் இருவரும் பலம் பெற்று சேர்க்கை,பார்வை மற்றும் பரிவர்தனை போன்ற
தர்ம-கர்மாதிபதி யோகம் பெற்றவர்கள்,
கீர்த்தி ஸ்தானமான மூன்றில் ராகு பகவான் இருந்து உச்சம் பெற்று அந்த வீட்டு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று நான்கு ,ஏழுக்குடைய குரு பகவான் கடக வீட்டில் உச்சம் பெற்று உச்சம் பெற்ற ராகு,செவ்வாயை பார்க்கும் வாய்ப்புடைய சாதகத்தினை பெற்றவர்கள் அரசியலில் பிரபலமடையும் யோகம்.

                                                                                


துலாம் ராசி அன்பர்களுக்கு,


                                துலாம் ராசிக்கு இரண்டு ,ஏழுக்குடைய செவ்வாய் உச்சம் பெற்று அந்த வீட்டின் அதிபதி லக்கனத்தில் உச்சமாக பெற்றவர்கள் அரசியல் யோகம் ஏற்படும்.

விருட்சக ராசி அன்பர்களுக்கு,


                              பத்தில் சூரியன் ஆட்சி பெற்ற அமைப்புடையவர்கள்,
இரண்டு ,ஐந்துக்குடைய குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று உச்சம் பெற்ற லக்கனாதிபதியை பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் இவ்வித யோகமுண்டு.
தனுசு ராசி அன்பர்களுக்கு,
ஒன்பதாமாதிபதி அரசு கிரகம் சூரியன் உச்சம் பெற்று ஐந்தாமிடத்தில் பெற்றவர்கள்,
ஐந்து ,பணிரெண்டுக்குடைய செவ்வாய் உச்சம் பெற்று ,உச்சம் பெற்ற குருவால் பார்க்கப்படும் யோகத்தை பெற்றவர்கள் அரசியல் யோகத்தை ஏற்படுத்தும்.

மகர ராசி அன்பர்களுக்கு,


                          லக்கனத்தில் செவ்வாய் உச்சம் பெற்றும்,உச்சம் பெற்ற குருவால் பார்க்கப்படும் அமைப்பு,
ஐந்து,பத்தாம் ஆதிபத்தியம் பெற்ற சுக்கிர பகவான் மூன்றாமிடத்தில் உச்சம் அமைப்பை பெற்றவர்கள்,
பதினொன்றாமிடத்தில் உச்சம் பெற்ற ராகு பகவானை குரு பகவான் உச்சம் பெற்று பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள்.
மேற்கண்ட அமைப்பை பெற்றவர்களுக்கு அரசாளும் யோகத்தை வழங்கும்.

                                                               


கும்ப ராசி அன்பர்களுக்கு,


                           இந்த ராசிக்கு ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் அரசியல் யோகத்தை வழங்கும் ராகு பகவானை உச்சமாக பெற்று உச்சம் பெற்ற குருவால் பார்க்கப்படும் அமைப்பு,
லக்கனத்திற்கு மூன்றில் குரு,புதன்,சூரியன் (உச்சம் பெற்று) சேர்ந்துள்ள அமைப்பை பெற்றவர்கள் அரசியல் யோகமுண்டு.


மீன ராசி அன்பர்களுக்கு,


                       லக்கனத்தில் சந்திரனும்,கடகத்தில் பத்தாம் அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று மகரத்தில் தன ,பாக்கியாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று பார்க்கும் தன-கர்மாதிபதி அமைப்பை பெற்றவர்களுக்கு அரசாளும் யோகம் உண்டு.

குறிப்பு:-
             (   இதுவரை அரசியல் யோகம் பெறும் அமைப்பை தரும் பொதுப்பலன் மற்றும் பணிரெண்டு ராசிகளுக்கும் பார்த்தோம்.இதை படித்தவர்கள் மேற்கண்ட அமைப்பை நான் பெற்றிருந்தும் எனக்கு அரசியல் யோகம் இல்லை என எதிர் வாதம் செய்ய வேண்டாம்.ஏனெனில் அவ்வாறு அப்பலனை தரவில்லையெனில் அதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.மேற்கண்ட அமைப்பை பெற்றிருந்தாலும் பாதகாதிபதியாகவோ அல்லது பாவர் சாரம் மற்றும் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது உச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றிருப்பின் அவை உச்ச பலனை தராமல் நீச பலனைத்தரும் .......இது போன்ற இன்னும் பல சோதிட ஞானம் நிரம்ப பெற்றவர்களுக்கு மட்டும் தெரிந்த சூட்சும விஷயங்களை கலந்துதான் பலன் எடுத்துக்கொள்ள வேண்டும்.எப்படி மருத்துவத்தில் "Self medicine is very dangerous"-We must consult doctor என சொல்வார்கள்.அதைப்போல இது போன்ற சோதிட பதிவுகளை படித்து விட்டு தானே முடிவடுத்துக்கொள்ளமல் சோதிட புலமைப்பெற்றவர்களை கலந்தாலோசித்தல் நலம்.)
                                                                

அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

M.SC,MA,BEd,

வேதியியல் ஆசிரியர் & சோதிட ஆய்வாளர்

ஓம்சக்தி ஜோதிட நிலையம்

கறம்பக்குடி
புதுக்கோட்டை DISTRICT

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



செல் : 97 151 89 647                                 740 257 08 99

whatsup ; 97 151 89 647


Do you want to know  more information join my facebook.My facebook link.click hear
m.face

No comments:

Post a Comment