Sunday 1 November 2015

( 6 ) வெளி நாடு செல்லும் யோகம் யாருக்கு ?

                                
               

வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு ?

                              

ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

                                                 "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.

                                                   மனித வாழ்வுக்கு பொருள் தேடல் என்பது அவசியமான ஒன்றாகும்.சமூகம் பொருளுடையவரையே போற்றி புகழ்கிறது.வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட
"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருளில்லார்க்கு
அவ்வுலக மில்லை". என்கிறார்.


                                         பொருள் உள்ளவர்களைத்தான் மனித உலகம் மதிக்கிறது.அதே போல் புண்ணியம் செய்து நேர்மையாக வாழும் அருள் உள்ளவர்களைத்தான் தேவ உலகம் மதிக்கிறது என பகர்கிறார்.

                                      எனவே பணம் சம்பாதிக்கும் பொருட்டு அவர்களது ஜாதகத்தில் வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா ?  அவ்வாறு செல்வதற்கு உகந்த திசை புத்திகள் உள்ளதா ? அல்லது இல்லையா?.
அவ்வாறு வெளிநாடே சென்றாலும் அங்கு நிறைய பொருளீட்டும் யோகம் இருக்கிறதா ?

                                          எந்த மாதிரியான வேலையை தேடி செல்லலாம் ? அங்கு குடியுரிமை பெறும் யோகம் உண்டா?

                                  இது போன்ற பல வினாக்களுக்கு சாதக அடிப்படையில் விடை தேடி அதற்கு பிறகு வெளிநாடு செல்லல் நலம் பயக்கும்.இவ்வாறு எதுவும் பார்க்காமல் வட்டிக்கு பணம் வாங்கி பல லட்சங்களை கட்டி போய் சில வாரங்களிலே "போன மச்சான் திரும்பி வந்தான்?" என்ற கதையாக திரும்ப வந்து அந்த கடனை அடைக்க முடியாமல் அந்த குடும்பம் நொறுங்கிப்போய் ஏன் சில நேரங்களில் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள்.எனவே வெளிநாடு செல்ல விரும்புவோர் பயன்பெறும் வகையில் இப்பதிவு இங்கு பதியப்படுகிறது.

                                                             


                                       சாதகத்தில் உள்ளப ணிரெண்டு ராசிகளை பின்வருமாறு  பிரிக்கிறோம்.

காற்று ராசி : மிதுனம்,துலாம்,கும்பம்


அக்னி ராசி : மேஷம்,சிம்மம்,தனுசு



நிலம் ராசி  : ரிஷபம்,கன்னி,மகரம்



ஜல ராசி  :கடகம்,விருட்சகம்,மீனம்

                                 வெளிநாடு விரும்புவோர்களுக்கு லக்கினம்,லக்கினாதிபதி,சந்திரா லக்கனம் இவைகள் ஜல அல்லது காற்று ராசிகளில் அமைய வேண்டும்.
2,11.12  ஆகிய சாதக கட்டங்கள் ஒருவருக்கு காற்று அல்லது ஜல ராசியாக அமைய வேண்டும்.

                              11- ம் வீட்டு அதிபதி ,12 -ஆம் வீட்டு அதிபதி காற்று அல்லது ஐல ராசியாக இருந்து இவை ஆட்சி,உச்சம்,கேந்திரம் ,திரிகோணம்,லாபஸ்தானம் பெற்று இருக்க வேண்டும்.இவை அம்சத்திலும் இதே போன்ற அமைப்பை அடைந்திருக்க வேண்டும்.

                                         11 மற்றும் 12 -ஆம் வீட்டு அதிபதிகள் காற்று அல்லது ஜல ராசிக்குரிய நட்சத்திர சாரம் பெற்றிருக்க வேண்டும்.

                                  காற்று அல்லது ஜென்ம ராசி ஜென்ம லக்கனத்திற்கு சுப ராசிகளாக இருக்கவேண்டும்.

                                                   


வெளிநாடு செல்வதை ஆதரிக்கும் கிரகங்கள்

   சூரியன்,சந்திரன்,குரு,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி,ராகு

சுவாதி,பூராடம்,அஸ்வினி ,சித்திரை நட்சத்திர காலில் சனி நின்றால் ஜாதகர் அந்நிய தேசம் செல்லலாம்.

வியாபாரம் மூலம் வெளிநாடு செல்ல :-

               புதன் கீழ்கண்ட நட்சத்திர காலில் நின்றால்
மகம்,மற்றும்  சனி  சாரத்தில் நின்றால் ஜாதகர் கிராம வாசம் புரிவார்.மாறாக
பூரட்டாதி,ஆயில்யம்  மற்றும் ராகு நட்சத்திர காலில் நிற்பின் பல தேசம் செல்வார்.


ஆயில்யம், கேட்டை,ரேவதி நட்சத்திரகாலில் நின்றால் வியபாரம் மூலம் வெளிநாடு செல்லலாம்.




தந்தை வெளிநாடு செல்லும் யோகம்;-

                            சூரியனுடனுடைய நட்சத்திர சாரத்தில் சனி நின்றால் அவனது அந்நிய தேசம் சென்றிருப்பார்.தந்தை மகன் ஓர் இடத்தில் இருக்க முடியாத நிலை.
பிதுர்காரனாகிய சூரியனுடன் சந்திரன்,சுக்கிரன்,புதன் இவர்கள் கூடி நின்றால் அவனது தந்தை வெளிநாடு செல்லும் பாக்கியம் பெற்றிருப்பார்.
ஒருவரது சாதகத்தில் 10,6 ராசியில் ஏழு கிரகஙாகள் கூடியிருந்தாலும்,12- ஆம் ராசிநாதன் சர ராசியில் இருந்தாலும்,
அச்சாதகர் பொருள் ஈட்டும் விஷயமாக வெளிநாடு சென்றிருப்பார்.


                      4, 10 ஐ லக்கினமாகவும்,பணிரெண்டாம் ராசியில் ராகு அல்லது சுக்கிரன்,சந்திரன் இவர்கள் இருவரும் 10 ,12 ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருப்பினும் வெளிநாட்டு யோகம்.

                           பத்தாம்  வீட்டாம் அதிபதி ராகு,கேதுக்களின் வர்க்கம் பெற்று அல்லது சனி,குரு இவர்களின் வர்க்கம் பெற்று இருப்பினும் அதாவது சில நேரங்களில் நீசம்,அஸ்தமம் பெற்று இருந்தால் அந்த சாதகர் சுய தொழிலை விட்டு அந்நிய தேசங்களில் சேவக விருத்தி செய்வான்.
ராசிக்கு பத்தில் சனி,குஸன்,சுக்கிரன் இவர்களிருந்தால் அந்நிய தேசம் சென்று பற்பல வியபாரம் செய்வான்.

                              மகர லக்கினம் சர ராசியாக இருந்து சனி,சந்திரன்,குரு சம்பந்தம் பெற்றோ அல்லது பார்வை பெற்றோ இருந்தால் கடல் கடந்து அயல்நாடு செல்லாம்.

                                                               


பல முறை அயல்நாடு செல்லும் யோகம்

                                                            ஒருவரது சாதகத்தில் ஜல கிரகங்களான சனி,சந்திரன்,குரு ஆகிய மூன்று கிரகங்களும் கடகம்,மகரம்,மீனம் ஆகிய ராசிகளில் ஒன்றில் இருப்பின் இவ்வகை யோகம் உண்டு.

                                                   லக்கினம் சரமாகவும்,லக்கினாதிபதி வேறு சர ராசியில் இருப்பின் வெளிநாட்டு யோகம்.

                                              குரு,சனி,பாம்பு சரம் உபயம் அமர்ந்திருப்பின் கடல் கடக்கும் யோகம்.
                                           12-ம் வீட்டோன், 8-ஆம்  வீட்டோன் மற்றும் செவ்வாய் இம்மூவர் சேர்ந்து எவ்விடத்திலிருந்தாலும் பர தேசம் செல்வான்.

                                       ஒரே வீட்டில் சூரியன்,சந்திரன்,புதன்,சுக்கிரன் சேர்ந்து நிற்பது
.குரு 4,6,12  ம் வீட்டில் இருப்பது.


                                              ராகு அல்லது கேது ஜீவ ராசியான கடகம்,மகரம்,மீனம் ஆகிய ஒன்றுடன்  இருப்பது.

                                                   செவ்வாய்,சுக்கிரன்,சந்திரன் அல்லது ராகு சர ராசியாக இருப்பது.
                                        பத்தாம் அதிபதி ராகு,கேது நட்சத்திர காலிலோ அல்லது ஜல ராசியின் நட்சத்திர காலில் நிற்பது.

                           கடகம்,மகரம்,மீனம் போன்ற ராசிகளில் சனி,குரு,சந்திரன் அல்லது பத்தாம் வீட்டதிபதி வெளிநாடு செல்லும் யோகம்.

பத்தாம் வீட்டதிபதி ராகு,கேது நட்சத்திர காலில் நிற்பது.
மேஷம்,கடகம்,துலாம்,மகரம் போன்ற சர ராசிகளில் நான்கு பக்கங்களில் கிரகங்கள் அமர்ந்து ஒருவரையோருவர் பார்த்துக்கொள்ளல் யோகம்.

இதுவரை பொதுவான விதிகளை பார்த்தோம் .இனி பணிரெண்டு ராசிகளுக்கு அதிக வெளிநாட்டு யோகம் தரும் கிரகநிலைகளை பார்ப்போம்.

  சுருக்கமாகச் சொன்னால் ஒரு ஜாதகத்தில் எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்கள் சுபத்துவம் ஆகி இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட அதன் தசை காலங்களில் கட்டாயம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்

   ஒரு ஜாதகத்தில் வெளிநாடு செல்லும் யோகத்தினை அதிகமாகத் தருவதில் நவக்கிரகங்களில் கரும்பாம்பு என்று அழைக்கப்படும் ராகு பகவானுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.

ஒருவரது  ஜாதகத்தில்  நட்பு நிலையில் சுபத்துவமான அமைப்பை பெற்று ராகு பகவான் எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் இடம் பெற்று அதன் தசை நடக்கும் காலங்களில் சாதகரை வெளிதேசங்களுக்கு செல்ல வைப்பார்.

முதலில்

மேஷ லக்கனத்திற்கு


            பத்தாம் வீட்டு அதிபதி சனி தன் சொந்த வீடான மகரத்தில் அமர்ந்து பணிரெண்டாம் வீட்டதிபதி குரு கடகத்தில் உச்ச வீட்டிலிருந்து சம சப்தமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் நிலை பிரபலமான வெளிநாட்டு யோகம்.இந்த அமைப்புடையவர்கள் அதிக பொருளீட்டும் யோகத்தை பெற்றவர்கள்.சனி பாதகாதியாகவும் வருவதால் ஒரு சில பாதகங்களை செய்ய நினைத்தாலும் லக்கன யோகரான குரு பார்வை பாதகத்தை குறைத்துவிட வாய்ப்புண்டு.


ரிஷப லக்கனத்திற்கு 


         பணிரெண்டாம் வீட்டிற்குரிய செவ்வாய் ஓன்பதாம் வீடான மகரத்தில் உச்சம் பெற்று லாப, அட்டமாதிபதியான குருவால் பார்க்கப்பட்டால் வெளிநாடு செல்லும் யோகம்.


மிதுன லக்கன காரருக்கு

              5,12 க்குரிய சுக்கிரன் பத்தில் ஜல ராசியான மீன ராசியில் உச்சம் பெறுவது வெளிநாட்டுயோகம்.

கடக லக்கனகாரர்களுக்கு 


            4,11  க்குரிய சுக்கிரன் பதினொன்றில் ஆட்சி பெறுவதும் புதன் பணிரெண்டில் ஆட்சி பெறுவதும்,
இதேபோல் 9- ஆம் வீட்டதிபதி குரு 12 -ல் மிதுனத்தில்  அமர்வதும்,பணிரெண்டாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீடான  ஜல ராசி மீனத்தில் இருப்பதும் யோகம்.

( குறிப்பு ; 9,12 க்குடையவர்கள் பரிவர்தனை, பார்வை மற்றும் சேர்க்கை எல்லா லக்கன காரர்களுக்கும் வெளிநாட்டு யோகம்)
சிம்ம லக்கனகாரர்களுக்கு பணிரெண்டாம் அதிபதி சந்திரன் பத்தாம் இடமான ரிஷபத்தில் பெற்று, 5, 8 க்குரிய குரு ஜல ராசி கடகத்தில் உச்சம் பெறுவதும் வெளிநாட்டு யோகம்.

கன்னி லக்கனத்திற்கு 


          4,7  க்குரிய குரு பதினொன்றாம் இடமான ஜல மற்றும் சர ராசியான கடகத்தில் உச்சம் பெறுவது யோகம்.குரு பாதகாதிபதியாகவும் வருவதால் குருவை வழிபட்டாலோ அல்லது வருமானத்தின் ஒரு பகுதியை தான தர்மங்களோ அவை செய்யும் பாதகங்களிலிருந்து விடுபடலாம்.


துலாம் லக்கனத்தாருக்கு


          பணிரெண்டாம் அதிபதி புதன் ஆட்சி உச்சம் பெற்று குருவால் பார்கப்படாமல் இருத்தல் நலம்.


விருட்சக அன்பர்களுக்கு


         7,12 க்குரிய சுக்கிரன் பணிரெண்டில் ஆட்சியோ அல்லது ஐந்தில் உச்சமோ பெறல் நலம் அல்லது பணிரெண்டில் 4,5 -க்குடைய சனி உச்சம் பெறுவதும் பிரபல யோகம்.


தனுசு லக்கனத்திற்கு 

          5,12 க்குரிய செவ்வாய் உச்சம் பெற்று லக்கன மற்றும் நான்காம் ஆதிபத்திய குரு உச்சம் பெற்று ஜல சர ராசியான கடகத்திலிருந்து பார்த்தல் நலம்.


மகர லக்கனத்திற்கு 


        3,12 க்குரிய குரு ஏழில் உச்சம் பெற்று லக்கனத்தில் சனியையோ அல்லது  லக்கனத்தில் உள்ள 4,11- க்குரிய செவ்வாயை பார்த்தால் கடல் கடந்து செல்லும் யோகம்.


கும்ப லக்கனத்திற்கு 


             2,11 க்குரிய குரு பதினொன்றில் ஆட்சிபெற்று பணிரெண்டில் சனி இருப்பின்.யோகம்.


மீன லக்கனத்தாருக்கு

         11,12 க்குடைய சனி ஜந்தில் அமர்ந்து ஆட்சி பெற்ற குருவால் பார்க்கப்படுவது அல்லது  லக்கன, ஜீவன குரு சர மற்றும் ஜல ராசியான கடகத்தில் உச்சம் பெற்று மீனத்தில் சந்திரன் குரு,சந்திர பரிவர்தனை பெற்றிருந்தாலோ அல்லது சனி மகர வீட்டில் ஆட்சி பெற்று ,கடகத்திலா உள்ள குருவால் பார்க்கப்பட்டாலோ கடல் கடந்து செல்லும் யோகம்.

                                      

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                    

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
(எம்.எஸ்.ஸி,எம்.ஏ,பி.எட்)
ஆசிரியர் & ஜோதிட ஆய்வாளர்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு.


               செல் : 97 151 89 647
               செல் : 740 257 08 99


         வாட்ஸ்அப் எண்
              97 151 89 647

No comments:

Post a Comment