Thursday, 4 October 2018

சாதகத்தில் உள்ள கிரக நிலைகளை எவ்வாறு ஆய்வு செய்து பார்ப்பது ?-ஓர் விரிவான அலசல்.

                               

" சாதகத்தில் உள்ள கிரக  நிலைகளை எவ்வாறு ஆய்வு செய்து பார்ப்பது.? -ஓர் விரிவான அலசல்.


                             

       கிரகங்கள் படுத்தும் பாடு


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

              ஒரு சாதகத்தில்  உள்ள கிரக நிலைகளை  பின்வருமாறு கவனிக்கப்பட வேண்டும்.

             1) ஒரு கிரகம் உச்சம் பெற்று இருந்தால் அந்த கிரகத்தின் பாகை நிலை அறிந்து உச்ச எல்லைக்குள் அக்கிரகம் உள்ளதா ? என கவனிக்கப்பட வேண்டும்.அக்கிரகம் உச்ச எல்லையை தாண்டி இருக்கும் போது சராசரியான நிலையையே பெற்றிருக்கும்.எனவே உச்சநிலைக்குரிய பலனைத்தருவதில்லை.எனவே உச்சம் பெற்றிருப்பதால் ஆஹா,ஒகோ புகழ்ந்த நிலையில் எதிர்பார்த்த அளவு பலன் தராததற்கு இவை ஒரு காரணம் ஆகும்.

                       2) வக்ரம்


        சில சமயங்களில் கிரகங்கள் பின்னோக்கி சென்றவாறு காணப்படும்.அப்பொழுது அக்கிரகங்களுக்கு பலம் அதிகம்.அவைகளின் தன்மையே மாறிவிடும்.ஒற்றை கிரகங்கள் மகாபலவான்கள்

       சந்திரன்,ராகு,கேது  வக்கிர கதி கிடையாது.குரு,சனி,புதன்,சுக்கிரன்,
செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்களும் வக்கிரம் அடைகின்றன.

         வக்ர கதி என்பது சூரியனால் உண்டாகக்கூடியது.புதன்,சுக்கிரன்,
செவ்வாய்,குரு,சனி ஆகிய ஐந்து கிரகங்கள்  இருந்த வீட்டுக்கு ஐந்தில் சூரியன் வரும்போது வக்ரகதி அடைந்து ஒன்பதாம் இடத்திற்கு  சூரியன் வரும்போது வக்ர நிவர்த்தி அடைகிறது. மேற்கண்ட ஐந்து கிரகங்கள் இருந்த வீட்டிற்கு  எந்த இடத்தில் சூரியன்  இருந்தால் என்ன நிலை என்று கீழ்கண்டவாறு பார்ப்போம்.

                          

        மேற்கண்ட  ஐந்து கிரகங்கள் சூரியனுடன் இணையும்போது அஸ்தங்க நிலை,


         மேற்கண்ட கிரகங்கள் இருந்த வீட்டிற்கு  இரண்டு,பதினொன்றில்  சூரியன் வரும்போது மேற்கண்ட கிரகங்கள்"சீக்கிரகதி"அடைகிறது.

    மூன்றில் சூரியன் வரும்போது  " சமகதி "

           மேற்கண்ட ஐந்து கிரகங்கள் இருந்த வீட்டிற்கு நான்கில் சூரியன் வரும்போது மேற்கண்ட கிரகங்கள்"மந்தகதி"அடைகிறது.

          மேற்கண்ட ஐந்து கிரகங்கள் இருந்த வீட்டிற்கு  5,6 ல் சூரியன் வரும்போது "வக்கிரகதி"அடைகிறது.

  மேற்கண்ட ஐந்து கிரகங்கள் இருந்த வீட்டிற்கு  7,8 ல் சூரியன் வரும்போது "அதிவக்கிரகதி"அடைகிறது.

       மேற்கண்ட ஐந்து கிரகங்கள் இருந்த வீட்டிற்கு 8,9 ல் சூரியன்"வக்கிரநிவர்த்தி"
அடைகிறது.

      9,10 ல் சூரியன்  இருப்பது "குடிலகதி

    குரு, சனி, செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன்  ஆகிய கிரகங்கள் இருந்த வீட்டிற்கு 12-ல் சூரியன் வரும்போது "சீக்கிரகதி"அடைகிறது.

 புதன்-மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மூன்று வார காலம் வக்ரகதி அடையும்.

  சுக்கிரன் -பதினெட்டு மாதத்திற்கு ஒருமுறை ஒன்றரை மாதகாலம் வக்ரகதி அடையும்.

செவ்வாய் இரண்டு வருடங்களுக்கு மூன்று மாதகாலம் வக்ரகதி அடையும்.

சனி ஒரு ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து மாதகாலம் வக்ரகதி அடையும்.

குரு ஒரு ஆண்டுக்கு மூன்று மாதத்திற்கு அதிகமாகவும் வக்கிரம் அடைகிறது.

 மேற்கண்டவற்றில்  செவ்வாய் கிரகத்திற்கு மட்டும் "ஸ்தம்பன்கதி" என்ற சிறப்பு பெயருண்டு.செவ்வாய் சிலநேரங்களில் 4,5 மாதகாலம் ஆனாலும் ஒரே இடத்தில் அசைவற்று நிற்பது போல தோற்றமளிக்கும்.எந்த ஒரு கிரகமும் ஒரே இடத்தில் நிலையாக நிற்பதில்லை. ஆனால் செவ்வாய் மட்டுமே ஒரே இடத்தில் நிற்பதுபோல தோற்றமளிக்கும்.

          கிரகங்கள் அனைத்தும் தத்தம் பாதையில் முன்னோக்கிதான் சென்று கொண்டிருக்கும் அவை பின்னோக்கி நகர்வதில்லை.ஆனால் பின்னோக்கி வருவதுபோல தோற்றம் அளிப்பதைதான் நாம் "வக்ரகதி" என்கிறோம்.

                        

               3)  வக்கிரம் நீங்குதல்


           ஒரு கிரகம் உச்சம் பெற்றிருந்தும் வக்கிரம் பெற்றிருந்தால் அக்கிரகம் நீசத்திற்கு சமமான பலனையையே கொடுக்கும். மாறாக
 நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் பெறின் உச்ச.நிலையை தரும்.

           ஆட்சி பெற்று வக்கிரம் பெற்ற கிரகம் நற்பலன் தந்துவிடுகிறது.

          வக்கிரம் பெற்ற கிரகம் உச்சம் வர்க்கோத்தமம் பெறுமானால் அவர் இருக்கும் வீட்டின் இடத்தினை பாதிப்பதில்லை.

          பாவிகள் உச்சம் பெற்று வக்கிரம் பெறுமானால் அவர்களின் திசையில் யோக பலன்களைகளையே தரும்.

          வக்கிரம் பெற்ற கிரகத்தினை உச்சம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்படும்போது வக்ரபலன் நீங்கி நற்பலன் தந்துவிடுகிறது.

          வக்கிரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றாலும் வக்ரபலன் நீங்கி நற்பலன் தந்துவிடுகிறது.

          வக்ரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெறுவதும்,பிறகு அந்த வீட்டின் அதிபதி உச்சம் பெறுவதும் (டபுள் டெபாசிட்டர் முறை )வக்ர பலன் நீங்கி நற்பலன் தந்துவிடுகிறது.

                         

           3)நீச-பங்க ராஜயோகம்


           ராசியில் ஒரு கிரகம் நீசம் பெற்று அம்சத்தில் உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது நீசம் பெற்ற வீட்டின் அதிபதி உச்சம் பெற்றாலோ அல்லது அவ்வீட்டின் அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீச பங்க ராஜ யோகம் பெற்று நன்மையைத்தரும்.ஒரு கிரகம் நீச பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் அல்லது நீசமடைந்த கிரகம் வர்க்கோத்தமம் பலம் அடைந்து இருந்தாலும்  அக்கிரகம் நீச பங்கம் பெறும்.

            4) வர்க்கோத்தமம்


          ராசியிலும் ,அம்சத்திலும் ஒரு கிரகம் ஒரே ராசியில் இருப்பின் வரக்கோத்தம பலன் பெற்று நன்மையைச் செய்யும்.

           5)  "விபரீத ராஜயோகம்


            கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதற்கிணங்க கெட்ட ஸ்தானங்களான (3,6,8,12) மூன்றுக்கு உடையவன் ஆறிலும்,ஆறுக்குடையவன் எட்டிலும் மற்றும் எட்டுக்குடையவன் பணிரெண்டிலும் இதுபோல் இருப்பின் நன்மையைச் செய்யும்.இந்த மறைவிட ஸ்தான அதிபதிகள் (3,6,8,12 ) தங்களுக்குள் பரிவர்த்தனை அடைந்து இருப்பின் அதன் திசை காலங்களில் விபரீத ராஜயோகத்தினை தருகிறது.

        6) ஒரு சாதகத்தில் 1, 2,7,8 ம் இடங்கள் சுத்தமாக இருந்தால் திருமண வாழ்க்கைக்கு நல்லது.

                           

       7 )அஸ்தங்கம்:-


         சூரியனுடன் பத்து பாகைக்குள் இணைந்த கிரகங்கள் சூரியனால் எரிக்கப்படும் கிரகங்கள் அவை  அஸ்தமனம் அடைந்த கிரகங்கள்

சூரியனுடன் இணைந்த நிலையில்(பத்து பாகைக்குள்) உள்ள கிரகங்களை பார்க்கும்போது அஸ்தமனம் அடையாமல் உள்ளதா ? என கவனிக்கவேண்டும்.அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் நன்மையைச்செய்யாது.

                        

 8 )  அஸ்தங்கம் பாகை அளவு



   செவ்வாய்-சூரியனிடமிருந்து முன்பின்னாக 17 பாகைக்குள்ளும்,
  இதேபோல
புதன்- 11 பாகைக்குள்,
குரு - 15 பாகைக்குள்,
சுக்கிரன் -9 பாகைக்குள்
சனி -17 பாகைக்குள்
   சூரியனிடம் நிற்கும்போது அஸ்தங்கம் அடைகிறது.சந்திரனுக்கு அஸ்தங்கம் தோஷம் இல்லை.

        கிரகங்களில் புதன்,சுக்கிரன்  மட்டும் அஸ்தங்கம் அடையும் போது சொந்த காரக பலன்களை இழப்பதில்லை.

        புதன்,சுக்கிரன் மட்டும் சூரியனுக்கு முன்,பின் என இருந்தபடி இரு வகையான அஸ்தங்கம் அடைகிறது.முன்புறமாக அஸ்தங்கம் அடையும்போது தனது சுய காரகத்துவ பலனை இழக்காது.அதேநேரத்தில் ஸ்தானதிபத்திய பலனை இழக்கிறது.

        சூரியனுக்கு பின்புறம் அஸ்தங்கம் அடையும் போது முற்றிலும் காரக மற்றும் ஸ்தான பலனை இழந்து விடுகிறது.

        புதன்,சுக்கிரன் ஆகிய இரு கிரகங்கள் மட்டுமே அஸ்தங்கம் அடையும் போது வக்கிரம் அடைகிறது. மற்ற கிரகங்கள் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் அடையாது.

         புதன், சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்கள் மட்டுமே அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டினையும் தனித்தனியாகவும்,இரண்டினையும் இணைந்தும் அடைகிறது.

      கிரகங்களில் சூரியன்,புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் உள வட்ட பாதையில் சுற்றி வருகின்றது.எனவேதான் ராசி கட்டத்தில் புதன் சூரியனுடனோ அல்லது ஒரு ராசிக்குள்  முன்,பின் சுற்றி வருகின்றன.இதேபோல சுக்கிரன் சூரியன் உடன் அல்லது இரண்டு ராசிக்குள் முன் பின் சுற்றி வருகின்றன.

          செவ்வாய், குரு மற்றும் சனி ஆகிய கிரகங்கள் சூரியனை மையப்பொருளாக கொண்டு பூமியின் வட்ட பாதைக்கு அடுத்தாற்போல வெளிவட்டபாதை அமைத்துக்கொண்டு சுற்றி வருகின்றன. இவை பூமிக்கும்,சூரியனுக்கும் இடையில் வருவதில்லை.ஆனால் புதன்,சுக்கிரன் சூரியனுக்கும்,பூமிக்கும் இடையில் வருகின்றன.

       செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கம் அடைகிறது. புதன் அஸ்தங்கமும்,வக்கிரமும் ஒரே நேரத்தில் இருப்பதீல் சூரியனுக்கு முன் நிற்கிறது.

        எல்லா கிரகங்களும் மேற்கில் அஸ்தங்கம் கிழக்கில் உதயமாகிறது.புதன், சுக்கிரன் மட்டும் கிழக்கில் அஸ்தங்கம் அடைந்து மேற்கில் உதயமாகிறது.

                             

                   9 ). உதயகதி


             அஸ்தங்கத்தில் இருக்கும் கிரகம் அஸ்தங்கம் எல்லையை விட்டு விலகுவதை "உதயகதி " என்கிறோம்.

          இதன் பலன் இதுவரை சாதகர் இழந்திருந்த ஸ்தான பலன் மற்றும் காரக பலன் ஆகிய இரண்டினையும் மீண்டும் பெறுவார்.

10 ) கேந்திராதிபத்திய தோஷம்


      கேந்திரம் என்பது 1,4,7,10 ஆகும்.
              ஒரு சுபர் இந்த கேந்திரத்திற்கு அதிபதியாகி கேந்திர ஸ்தானங்களில் நின்றால் அது "கேந்திராதிபத்திய தோஷத்தினை " கொடுக்கும்.

         சுபர்கள் கோணங்களிலோ அல்லது மறைவு ஸ்தானங்களிலும் இடம்பெறும்போது அவை கேந்திராதிபத்திய தோஷத்தினை தந்துவிடுவதில்லை.பொதுவாக சுபர்கள் திரிகோணங்களிலோ அல்லது மறைவிடங்களிலோ அமர்தல் நல்லது .அதேபோல பாவர்கள் கேந்திரத்தில் இடம்பெறுதல் நல்லது ஆகும்.

 11) ஒவ்வொறு கிரகங்களின் நட்சத்திர சாரம் மற்றும் பார்வை,சேர்க்கைகளை கவனிக்க வேண்டும்.

                           

           12 ) பரிவர்த்தனை;


            இரண்டு கிரகங்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு  தங்களது வீடு மாறி நிற்பது ஆகும்..இதுவும் கிரகத்திற்கு வலிமை தரும்.

  பரிவர்த்தனையில் இரண்டு வகைப்படும்
அவையாவன:-

     1) சுபயோக பரிவர்த்தனை

     2) அவயோக பரிவர்த்தனை

 சுபயோக பரிவர்த்தனை


       கேந்திர மற்றும் கோண அதிபதிகள் கேந்திரங்களுக்குள்ளேயே அல்லது கோணங்களுக்கு இடையையே அல்லது இரண்டுக்குள்ளேயும் பரிமாறி நிற்பது ஆகும்.

           இதேபோல மறைவிட அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறி கொள்வது ஆகும்.இது "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் "என்ற வகையில் சுப பரிவர்த்தனை ஆகிறது.

           இந்த சுபயோக பரிவர்த்தனை நற்பலன்களை தனது திசையினில் தரவல்லது.

 அவயோக பரிவர்த்தனை


         மறைவிட அதிபதிகள் (3,6,8,12) கேந்திர கோண அதிபதிகள் உடன் பரிமாறி நிற்பது ஆகும்.

 இதன் பலன் அதன் திசை காலங்களில் அவயோகத்தினை தரும்.

                        

           13 ) கிரக யுத்தம்;-


          ஒரு ராசியில் செவ்வாய்க்கு பின் கூடியிருக்கும் கிரகங்கள் யுத்தத்தில் தோற்ற கிரகங்கள் .இவைகள் நல்ல பலனை தராது.

           14 ) பாதகாதிபதி


           சர ராசி -11-ம் அதிபதி

           ஸ்திர ராசி-9-ம் அதிபதி

          உபய ராசி-7-ம் அதிபதி

                மேற்கண்ட அதிபதிகளின் தசை நன்மையைச்செய்யாது

         15 ) ஷஷ்டாஷ்டம்


        ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு 6 அல்லது 8 இடத்தில் இருப்பது இக்கிரகங்களின் தசா புத்தி நன்மையை செய்யாது(தோஷம்)

        மேஷம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,
தனுசு
கும்பமாகில் ஷஷ்டாஷ்டக தோஷமும் மற்ற ராசிகளில் 2,12 ம் இடத்தோஷமில்லை என்பது சிலர் கருத்து.

            16 ) திவிர்த்வாதசம்


      ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு -2 லோ 12 -லோ நிற்பது.இந்த தசா புத்திகள் நன்மையைச் செய்யாது.

                           

          17 ) ஆத்மாக்காரகன்


       ஒரு ராசியில் எந்த கிரகம் அதிகமாக சென்றுள்ளதோ அந்த கிரகம் ஆத்மாக்காரகம அந்த கிரகம் பலமுடைய கிரகம அதன் தசா புத்தி நன்மயைச் செய்யும்

           18 )  மாரகாதிபதி


        சர ராசி -2,7-  ன் அதிபதி

        ஸ்திர ராசி -3,8-ன் அதிபதி

         உபய ராசி -7,11 ன் அதிபதி

           மேற்கண்ட அதபதி தசைகள் மாரகத்தை தரக்கூடியவை.

              19 ) திக் பலம்


      லக்கனத்தில் குரு மற்றும் புதன் 

        ஏழாம் இடத்தில்- சனி

    நான்காம் இடத்தில்-சந்திரன்,சுக்கிரன்

பத்தாம் இடத்தில் -சூரியன்,செவ்வாய்

  திக்பலம் பெற்ற கிரகங்கள் தனது திசையில் உச்ச கிரக பலனிற்கு நிகரான பலன்களை சாதகருக்கு தருகிறது.தனது திக் பலத்திற்கு ஏழாம் வீட்டில் தனது பலனை இழக்கிறது.

     எனவே சோதிடர்களாகிய நாம் இதுபோல் பல விஷயங்களை கவனித்து ஆராய்ந்து  பரம்பொருளின் துணைகொண்டு பலன் உரைக்கவேண்டும்.ஏனெனில் சோதிடம் என்பது தெய்வீக கலையாகும்.எனவே நம்மை நம்பி வந்து பலன் கேட்பவர்களுக்கு மேலோட்டமாக பதில் அளித்துவிடாமல் நன்கு ஆய்வு செய்து பலனுரைப்போம்.

  நன்றி!

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற, தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                          

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
ஆசிரியர் & சோதிடர்
சோதிட ஆராய்சியாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்பு கொள்ள

செல் : 97 151 89 647
செல்; 740 257 08 99

வாட்ஸ்அப்; 97 151 89 647

 My email
 masterastroravi@gmail.com

My blogspot. Google search

 AstroRavichandran. blogspot. com

   AstroRavichandransevvai. blogspot. com

............

Saturday, 28 January 2017

காமம் உணர்வினில் கிரகங்களின் பங்கு

காமம் உணர்வினில் கிரகங்களின் பங்கு



செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் 
துணை !

                  உண்ணுதல் ,உறங்குதல் போல காமமும் மானிட வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத உணர்வு ஆகும்.உலக உயிர்களின் சுழற்சிக்கு இந்த காம உணர்வு அத்தியாவசமான ஒன்றாகும்.

                காமம்  என்பது ஹார்மோன்களின் ஆட்டம் ஆகும்.ஒரு குழந்தையானது பிறப்பெடுக்கும்போதே இனப்பெருக்க ஹார்மோன்களை தவிர இதர எல்லா ஹார்மோன்களும் உற்பத்தியாகிறது.ஆனால் இந்த இனப்பெருக்க ஹார்மோன்கள் மட்டும் ஒரு குழந்தையானது குமரப்பருவத்தை (adolecence period ) தொட்டவுடனே உற்பத்தியாகிறது.

              ஆடவரின் இனப்பெருக்க ஹார்மோன்கள் ஆண்ட்ரோஜன்(புரஜெஸ்டீரான் ) மற்றும் மகளிரின் இனப்பெருக்க ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஷன்,ரிலாக்ஸின் போன்ற ஹார்மோன்களும் சுரக்க ஆரம்பிக்கிறது
                                                   
                   ஒரு மனிதனின் காமம் உணர்வினில்  வழிநடத்தி செல்லக்கூடிய கிரகங்கள் காமகாரகன் செவ்வாய்பகவான் ,கற்பனைகாரகன் சுக்கிரபகவான் மற்றும் மனோகாரகன் சந்திரபகவான் இந்த மூன்று கிரகங்களுக்கும் அளப்பறிய பங்கு உண்டு.

          இதேபோல சாதகட்டத்தில் உள்ள பணிரெண்டு கட்டங்களில் காமம் வாழ்விற்குரிய பங்கினை அளிக்கக்கூடிய ஸ்தானங்கள் மூன்று,நான்கு ,ஐந்து ,ஏழு ,எட்டு மற்றும் பணிரெண்டாமிடம் ஆகும்.
இந்த ஆறு கட்டங்களும் மனித வாழ்வின் செக்ஸ் நிலையை அறிந்து கொள்ள பேருதவி புரிகிறது.காம வாழ்வில் இக்கட்டங்களின் பங்கு எவ்விதமாக அமைகிறது என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள் என்பது தெளிவாக புரிகிறது.இதோ விரிவாக இப்பொழுது பார்ப்போம்.
                                                                   


மூன்றாமிடம்


          ஒரு சாதகரின் காம வீரியத்தை பற்றி அறிந்து கொள்ளவும் மற்றும் அவரது காமம் வலிமையினை பற்றி புரிந்து கொள்ள இந்த ஸ்தானம் பேருதவி புரிகிறது.

நான்காமிடம்


         காம இன்பத்தை அனுபவிக்க கூடிய சுகத்தினையும் ,அந்தரங்க வாழ்வினையுய் அறிந்துகொள்ள இப்பாவகம் உதவிபுரிகிறது.


ஐந்தாமிடம்


       ஒருவரது சிற்றின்பநிலை,காமம் வயப்படும் நிலை,உடல் கவர்ச்சி ,அங்க அவயங்கள் காம உணர்வினை பிறருக்கு தூண்டும் வகையில் தன்னை அழகுபடுத்திக்கொள்ளுதல் மற்றும் மனைவி மீது மோகம் கொள்ளுதல்.

ஏழாமிடம்


                      கணவன் -மனைவி உறவுநிலையையும்,தொட்டு தழுவிக்கொள்ளுவதால் உண்டாகும் சுகநிலையையும் குறிக்கும்.ஆணோ அல்லது பெண்ணோ தனக்கு இணையானவர்களை உறவாக்கி கொண்டு காமசுகம் பெறல்.

எட்டாமிடம்


          இவை பாலின உறுப்புகளை பற்றியும் மற்றும் பாலினநோய்கள் பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது.

பணிரெண்டாமிடம்

                                                                     

            ஒருவரது படுக்கை சுகத்தை பற்றி இப்பாவகத்தின உதவியால் அறிந்துகொள்ள முடிகிறது.

              ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர்களின் உன்னத பண்பாடு ஆகும்.தனது காம உணர்வினை முறையாக வெளிப்படுத்தி கொள்ள திருமணம் என்ற பந்தம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பலரது முன்னிலையில் முழுமையான ஆசிர்வாதத்தோடு தனது காமத்தினை நெறிபடுத்தப்பட்ட முறையில் வெளிப்படுத்தி அதன் மூலம் இன்னொரு பிறப்புக்கு மூலதாரமாக நீர்இருக்கவேண்டும்.

              திருமணமான ஆணும் பெண்ணும் சந்திக்கும் முதலிரவினை சாந்திமுகூர்த்தம் என அழைத்தனர்.ஆம் அலைபாய்ந்த காம எண்ணத்தை முறையாக வெளிப்படுத்தி மனதினை சாந்தி செய்வதால்தான் அவ்வாறு அழைத்தனர்.

              இவ்வாறு முறையான காம உணர்வினை வெளிப்படுத்திக்கொள்ளாமல் தறிகெட்டு திரிவதற்கும் ,பல மலரை நாடி செல்லும் வண்டினைப்போல வேலி தாண்டுவதற்கும் அவரது சாதக கட்டங்களில் கிரக அமைப்புகளே காரணமாக அமைகிறது.
பொதுவாக ஆணோ /பெண்ணோ இருவருடைய சாதக கட்டத்திலும் சுக்கிரன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது இருந்து சுபரின் பார்வைபடாமல் மூன்று ,நான்கு ,ஐந்து,ஏழு,எட்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் கூடியிருப்பின் அச்சாதகர் காம மிகுதியால் பலரது சுகம் பெற முயல்வர்.இவர்கள் வயதான நிலையிலும் காம இன்பம் பெறும் மனநிலையும் ,வலிமையும் உடையவராக இருப்பர்.

                இதேபோல மனதுக்காரகன் சந்திரபகவானோடு சுக்கிரபகவான் இணைந்திருப்பினும் தன்னைவிட வயதில் முதிர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு தனது காமபசியை போக்க மற்றவரது மஞ்சத்தில் மயங்கி கிடப்பாள்.இந்த அமைப்பினை சுபர் பார்க்க அல்லது சேர்ந்திருக்கும் வீட்டின் அதிபதி பலப்பட பலனில் மாறுபடலாம்.இந்த இணைவும் 3,4,5,7,8,12 ல் ஏற்பட்டால் கட்டாயம் மேற்கூரியவாறே நடக்கும்.

            ஒருவரது சாதகத்தில் சுக்கிரன் ,சனி ,செவ்வாய் மற்றும் ராகுபகவான் இணைந்து சுபர் பார்வை பெறாமல் 3,4,7,8,12 மிடத்தில் இருப்பின் தன்னிலும் தரம் கெட்டவனிடம் செக்ஸ் தொடர்பும் ,ஏற்றுக்கொள்ள முடியாத உறவுகளிடம் செக்ஸ் உறவும் வைத்துக்கொள்வார்.காமபிசாசாக இருப்பாள்.இவளின் உணர்விற்கு மற்றவர்களால் தீனிபோட இயலாது.

                ஒருவரது சாதகத்தில் சுபர் பார்வைபடாத சுக்கிரன் -சனி சேர்க்கை மற்றும் சுக்கிரன்-சனி-ராகு சேர்க்கையும் மேற்கண்ட ஸ்தானங்களில் ஏற்பட்டால் வெட்கம் கெட்ட காம உணர்வினை ஒருவருக்கு தர வாய்ப்பு உண்டு.

               ஒருவரது சாதகத்தில் மூன்றாமிடம் மற்றும் ஏழாமிட தொடர்பும் காமம் உணர்வு மேலோங்கி நிற்கும்.
இதேபோலவே மூன்று ,ஐந்து மற்றும் ஏழாமிட தொடர்பு அதாவது சேர்க்கை,பார்வை மற்றும பரிவர்தனை போன்ற சம்பந்தமானது ஒருவரது காம உணர்வினை மிகுதிபடுத்தி தடம் புரள வைக்கலாம்.

               ஒருவரது சாதகத்தில் சுக்கிரன்,ராகு ,செவ்வாய் மற்றும் சந்திரன் போன்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு அற்று இயற்கை சுபரின் சேர்க்கையையோ அல்லது பார்வையையோ பெற்றவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய கொள்கையோடு வாழ்வார்கள்.இவர்களது சாதக கட்டத்தில் 3,4,5,7,8,12 ஆகிய ஆறு ஸ்தானங்களும் மேற்கண்ட கிரகங்களின் தொடர்பற்ற நிலையில் காணப்படும்.

நன்றி !.


(தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கான சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை நீங்கள் எந்த நாட்டில் இருப்பினும் போன்வழியாகவே பெறலாம்.கட்டணம் உண்டு. தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையினை பெறலாம்.இமெயிலிலும் அனுப்பலாம் .)


தொடர்புக்கு
                                                       செல்                                                      97 151 89 647                                                                  740 257 08 99
                                                         வாட்ஸ்அப் எண்                                                                          97 151 89 647


My Email id
masterastroravi@ail.com

               
                                       


                                                         By
                                         Astro Ravichandran.
                                                       M.SC ,MA ,BEd,
                                                      Astro Researcher ,
                                  Omsakthi online astro consulting centre,
                                                 Karambakkudi,
                                                       Pudukkottai -District
                                                        Tamil nadu,India.

Sunday, 22 January 2017

சாதகரை வழி நடத்தி செல்லும் கேப்டனாக திகழ்பவர் யார் ?

சாதகரை வழி நடத்தி செல்லும் கேப்டனாக திகழ்பவர் யார் ?-ஒரு நீண்ட அலசல்.


செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்...

             "அச்சாணி இல்லாத தேர் ஊர் போய் சேராது " என்பார்கள்.

                      ஒரு தேருக்கு அச்சாணியைப்போலவும் ,நீண்ட நெடிய கடல் பயணத்தை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டனாகவும் இருந்து ஒரு சாதகருக்கு செயல்படக்கூடியவர் "லக்கனாதிபதியே "ஆகும்.

                          இதைப்போல ஒரு சாதகத்தின் பணிரெண்டு பாவங்களில் "லக்கனமே "முக்கியமான பாவமாகும்.லக்கினமும் ,லக்கினாதிபதியும் பலம் பெற்ற அமைப்பை பெற்றவர்கள் ஏனைய பிற அமைப்புகளோ அல்லது அவருக்கு நடைபெறக்கூடிய திசையோ உகந்ததாக இல்லாத சூழலிலும் மண்டியிட்டு இழுத்து போராடி வெற்றியடைந்துவிடுவார்.

                           ஒரு ஜாதகனின் அறிவு,அழகு,அந்தஸ்து,ஆரோக்கியம்,சாதனை புரிய தூண்டுவது ,கடின உழைப்பு ,நுண்ணறிவு மற்றும் தலைமையேற்று நடத்துதல் போன்ற தன்மைகளை லக்கின பாவகத்தினை கொண்டே அறியப்படுகிறது.
.
                 ஒருவரது சாதகத்தில் மிக முக்கியமானது  லக்கினமா ? லக்கினாதிபதியா ?
என விவாதம் நடத்தினால் என்னைப்பொருத்தவரையில் லக்கினாதிபதியே முக்கியமானவர் என்பேன்.

                                                             
              ஒருவன் குப்பையில் பிறந்திருந்தாலும் கோபுரகலசமாக உயர்ந்து நிற்க பேருதவி புரிபவர் இலக்கினாதிபதியே ஆவார்.ஒருவருக்கு லக்கினம் எதுவாக இருந்தாலும் இலக்கினாதிபதி வலிமை பெற்ற சாதகர் "தரித்திரத்தில் பிறந்திருந்தாலும் நிச்சயம் சரித்திரத்தில் இடம்பெறுவார் ".இலக்கினாதிபதி வலிமை பெற்ற சாதகர் எந்த வகையிலும் வெற்றி பெற்றே தீருவார்.

             ஒருவரது சாதகத்தில் இலக்கினாதிபதியானவர் உச்சம் ,மூலதிரிகோணம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து கேந்திரகோணங்களில் நின்று பலமடைந்து இயற்கை சுபரின் பார்வையை பெற்று , இலக்கினாதிபதிக்கு சாரம் கொடுத்தவர் இலக்கின சுபராகி வலிமையடைந்திருந்தால் இலக்கினாதிபதியின் திசையில் சாதகர் யோகம் உள்ளவனாகவும் ,தீர்க்க ஆயுள் உடையவனாகவும் திகழ்வான்.

               ஒரு சாதகத்தில் இலக்கினாதிபதி பலமடைந்து லக்கினத்திற்கு மறைந்திருந்தாலும் , அவர் நின்ற வீட்டோன் இலக்கினத்திற்கு கேந்திரகோணங்களில் நின்று பலமடைந்து ,இலக்கினத்தையோ அல்லது இலக்கினாதிபதியையோ இயற்கை சுப கிரகமான குருபகவான் பார்க்க அந்த இலக்கினாதிபதி மறைந்திருந்தாலும் எப்படியும் முன்னேறிவிடுவான் .

           .இதுபோன்ற விதிவிலக்குகளும் உண்டு.எனவே இலக்கினாதிபதி மறைவு ஸ்தானமேறியிருக்கும்போது இதுபோன்ற விஷயங்களை கவனித்து பலனளிக்க வேண்டியது அவசியமாகும்.
                                                            
             சாதகரானவர் ஒரு கிரகத்தின் ஆதிபத்தியத்திற்குரிய பலனை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுமாயின் அந்த கிரகத்திற்கும் மற்றும் இலக்கினாதிபதிக்கும் உள்ள தொடர்பை வைத்தே தீர்மாணிக்கப்பட வேண்டும்.இலக்கினாதிபதிக்கு தொடர்பு இல்லாத திசையில் அந்த திசைநாதனின் ஆதிபத்திய பலன்கள் சாதகருக்கு கிட்டாது.இதனை விரிவாக தொடர்ந்து பார்க்கலாம்.

              இலக்கினத்திற்கு சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் கேந்திரகோணங்களில் இருந்து இவர்களுடன் இலக்கினாதிபதியின் பார்வை மற்றும் சேர்க்கை மற்றும் நட்சத்திர தொடர்பு இருந்தால் அந்த கிரகங்களின் திசை காலங்களில் அந்த கிரக ஆதிபத்தியத்திற்குரிய பலனை சாதகர் முழுமையாக அனுபவிக்க கூடிய யோகத்தினை சாதகர் பெறுவார்.

             அதே நேரத்தில் யோகம் தரக்கூடிய கிரகம் மேற்கூறிய வகையில் பலமடைந்திருந்தாலும் அக்கிரகமானது இலக்கினாதிபதிக்கு ஆறு ,எட்டு போன்ற இடங்களில் மறைவார் எனில் அக்காலங்களில் சாதகர் அக்கிரக ஆதிபத்திய பலனை முழுவதுமாக அனுபவிக்கும் யோகம் அற்றவராக இருப்பார்.

            இலக்கினத்திற்கு சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் இலக்கினத்திற்கு மறைந்தாலும் அவர்கள் இலக்கினாதிபதி நின்ற வீட்டுக்கு மறையாமல் இருப்பின் அக்கிரக திசைகாலங்களில் ஆதிபத்திய பலனை அனுபவிக்கும் யோகம் பெறுவார்கள்.

                 இலக்கினத்திற்கு சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் இலக்கினத்திற்கும் மற்றும் இலக்கினாதிபதிக்கும் மறைவுஸ்தானமேறில் அவை முழு மறைவு.அக்கிர திசை காலங்களில் முழுமையாக ஆதிபத்திய பலனை அனுபவிக்கவே இயலாமல் போய்விடும்.

                    இலக்கினத்திற்கு துர்ஸ்தானதிபதிகள் (6,8,12 ) அவரவர் வீட்டில் ஆட்சி பெற்று அவர்களுடன் இலக்கினாதிபதியும் சம்பந்தப்பட்டால் அக்கிரக திசை காலங்களில் அந்த ஆதிபத்தியத்திற்குரிய தீய பலனை சாதகர் அனுபவிப்பார்.
                                                      
                    ஒருவருடைய சாதகத்தில் ஒரு கிரகம் அசுப ஆதிபத்தியம் பெற்று இலக்கினாதிபதி நின்ற வீட்டிற்கு மறைவு ஸ்தானங்களில் நின்று திசையை நடத்தினால் சாதகர் அக்கிர ஆதிபத்தியத்திற்குரிய தீய பலனையையே அனுபவிப்பார்.

                 இலக்கினாதிபதி நின்ற வீட்டோன் உச்ச ஆட்சியோ பெற்றிருந்தாலும் அவர் இலக்கினத்திற்கும் ,இலக்கினாதிபதிக்கும் மறைவுஸ்தானமேறியிருந்தால் சாதகனின் வாழ்க்கையில் பிரச்சினைகளையும்,போராட்டங்களையுமே சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்.

                ஒருவருடைய சாதக பலனை பார்க்கும்போது
"விதி கெட்டால் மதியை பார்க்க வேண்டும் என்பார்கள்.
மதியும் கெட்டால் கதியை பார்க்கவேண்டும் என்பார்கள்.
இந்த விதி,மதி மற்றும் கதி ஆகிய மூன்றும் கெட்டுவிட்டால் சாதகர் வாழ்வில் முன்னேற்ற பாதையில் அடி எடுத்தே வைக்க இயலாது.இதுபோன்ற அமைப்பை பெற்றவர்கள் துர்பாக்கியசாலிகள் ஆவார்.அவர்கள் இப்பிறப்பில் அவர்களது கர்மபலனை அனுபவித்தே தீரவேண்டும்.

                  இது என்ன ? விதி,மதி மற்றும் கதி என கூறி குழப்புகிறேன் என நீங்கள் நினைத்தால் தொடர்ந்து படித்து அதற்குரிய விளக்கத்தினை பெற முயலுங்கள்.

                 முதலில் இந்த "விதி "எனப்படுவது ஜாதகன் பிறந்த நேரத்தை கொண்டு கணிக்கப்படுவது .இதனை நாம் லக்கனம் என்போம்.ஒரு நாளைக்கு ஒரு இலக்கினம்  இரண்டு மணிநேர வீதமாக பணிரெண்டு ராசிகளுக்கு மொத்தமாக இருபத்துநான்கு மணிநேரம் ஆகும்.அதாவது ஒரு நாள் ஆகும்.சாதகர் பிறந்தநேரத்தினை அந்த நாட்டின் சூரிய உதயத்தோடு ஒப்பிட்டு பார்த்து கணிக்கப்படுகிறது.
                                                                  


              அடுத்து இரண்டாவதாக" மதி" எனப்படுவது சாதகர் பிறந் நேரத்தில் வானவீதியில் தொடுவானத்தில் உள்ள நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டு அதன் அடிப்படையில் சந்திரபகவான் பிரவேசிக்கும் ராசி கண்டறியப்படுகிறது.இதனையே மதி என்போம்.

                 இறுதியாக" கதி " எனப்படுவது சூரிய பகவான் இடம்பெறும் ராசி ஆகும்.சூரியபகவான் ஒரு மாதத்திற்கு ஒரு ராசி வீதமாக சித்திரை மாதத்தில் தொடங்கி பங்குனி மாதத்தில் மீனத்தில் சென்றடைகிறது.சாதகர் பிறந்த மாதத்தின் அடிப்படையில் சூரியன் இருக்கும் இடமறிந்து அதனையே கதி என்கிறோம்.

                எனவே ஒருவருக்கு பலனளிக்க முற்படும்போது மேற்கண்ட வழிமுறைகளை இலக்கினமாக கொண்டு பலனறியப்படுகிறது.ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் பலன்களை சொல்வதற்கு விதி லக்கினம் மற்றும் மதி லக்கினம் இரண்டையும் அடிப்படையாக கொண்டே நாம் பலனளிக்கிறோம்.ஆனால் மேலை நாடுகளில் மட்டுமே சூரியலக்கினத்தை பயன்படுத்தியும் பலனளிக்கின்றனர்.

               பொதுவாக இலக்கினமும் ,இராசியும் ஒன்றாக கொண்டவர்களுக்கு யோகபலன்கள் வந்தாலும் இரட்டிப்பு மடங்கு நன்மையை தரும்.தீயபலன்கள் தந்தாலும் இரட்டிப்பு மடங்கு தீமையை தரும்.பொதுவாக இவர்களுக்கு ஜோதிடர்களால் தரப்படும் பலன்கள்  மாறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது.
                                                     
             ஆனால் இலக்கினமும் ,இராசியும் வெவ்வேறாக கொண்டவர்களுக்கு பலனளிப்பதில் ஜோதிடர்கள் தெளிவாக இருக்கவேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது.

               இவர்களுக்கு பலனளிக்க முற்படும்போது  இலக்கினம் மற்றும் இலக்கினாதிபதி இவர்கள் இருவரின் பலத்தையும் ,இதேபோல இராசி மற்றும் இராசிநாதன் இவர்களின் பலத்தையும் ஆராய்ந்து பார்த்து இவர்களில் யாருடைய பலம் மிகுந்திருக்கிறது என பார்த்து ஒரு சமயம் இலக்கினம் சார்ந்தவை வலுப்பெறும் போது அதிலிருந்நு எண்ணக்கூடிய ஸ்தான பலன்களை மிகுதியாக தரும்.

            ராசிநாதனிலிருந்து எண்ணக்கூடிய ஸ்தான பலத்தை குறைவாக தரும்.
அதேநேரத்தில் ராசி வலுப்பெறும்போது அவைகளில் இருந்து எண்ணக்கூடிய ஸ்தான பலத்தையே மிகுதியாக கொடுக்கும்.

           இலக்கினத்திற்கு அக்கிரகம் சுப ஸ்தானமாக இருந்தாலும் ராசிக்கு அக்கிரகம் பாவஸ்தானமாக இருந்தால் இரண்டில் யார் (லக்கினமா /ராசியா ) வலிமையுடையவர்களோ அவர்களது ஸ்தானபலம் அத்திசைகளில் மிகுதியாக இருக்கும்.

           எனவேதான் இலக்கினமும் ,இராசியும் வெவ்வேறாக கொண்டவர்களுக்கு நல்ல ஆராய்ச்சி திறன் கொண்ட சோதிடர்களாலே துல்லியமாக பலனளிக்க இயலும்.

               இதேபோல வேறு சில கருத்துக்களை ஆய்வு செய்து பார்க்க முற்படும்போது இலக்கினத்தில் இலக்கினாதிபதி நின்றாலும் மற்றும் பார்த்தாலும் இலக்கினமானது வலிமை பெறும் .மேலும் இயற்கை சுபகிரகங்களான குரு,பாவியோடு சேராத புதன் ,வளர்பிறை சந்திரன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் நின்றாலும் ,பார்த்தாலும் இலக்கினமானது பலப்படும்.இலக்கினத்திற்கு பொதுவாக இயற்கைபாவர்கள் தொடர்பு இல்லாமல் இருப்பது சாதகரை வளர்ச்சி பாதையில் இட்டுச்செல்லும்.

                  நிறைவாக இலக்கினாதிபதி ஆட்சி ,உச்சம் பெறுதல் ,இலக்கினாதிபதி கேந்திரகோணமேறுதல் ,சுபர்,யோகர் உடன் கூட்டு சேருதல் மற்றும் நவாம்சத்திலும் பலம் பெறுதல்.இலக்கினாதிபதியும் பலமடைந்து அவரோடு கூடியவரும் பலமடைந்து இவர்களின் சேர்க்கையானது பஞ்சமஹாயோகங்களில் அமைந்துவிட்டால் அந்த சாதகனை வழிநடத்தி செல்லும் கேப்டன் நன்முறையில் வழிநடத்தி வாழ்வில் சகலசொளபாக்கியங்களையும் அடையவைப்பார்.
                                                  
நன்றி.

(தங்களுடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன் ,திருமணபொருத்தம் ,பரிகாரபூஜைகள் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன்வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.அல்லது எனது இமெயிலுக்கும் அனுப்பி வைக்கலாம். )


தொடர்பு கொள்ள
                                     செல்
                                  740 257 08 99
                                    97 151 89 647


                                வாட்ஸ்அப் எண்                                   

                                                     97 151 89 647


                                                    


                                                                        அன்புடன் ,
                                                                   சோதிடர்ரவிச்சந்திரன்                                                                                          M.SC ,MA,BEd,                                                                          சோதிட ஆராய்ச்சியாளர்,
                                                                         வாழ்வியல் ஆலோசகர்,                                                ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன்                                                                                                                   ஆலோசனை                                                                                                                                           மையம்,                                                                                                                                                                                                கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்,                                                                               தமிழ்நாடு,இந்தியா.


My email idmasterastroravi@gmail.com

Thursday, 8 December 2016

கோள்களும் அவற்றின் தன்மைகளும்

                         

கோள்களும் அவற்றின் தன்மைகளும்



செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன்
 துணை !

                  " இந்திய சோதிடவியல் வரலாற்றில் முதலில் ஏழு கோள்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.இராமாயணத்தில் இராமன் பிறந்ததை குறிப்பிடும்போது கூறுமிடத்தில் வால்மீகி முனிவர் இராமர் பிறந்த நேரத்தில் ஐந்து கோள்கள் உச்சமாகவும்,குருபகவான் சந்திரனுடன் சேர்ந்திருந்தாகவும் தெரிவிக்கின்றனர்.

                 இதைக் கருத்தில் கொண்டு ,சித்திரை மாதத்தில் ராமன் பிறந்ததை வைத்து பார்க்கும்போது சூரியன் மேஷத்தில் உச்சமாக இருப்பதை அறியலாம்.சூரியனுக்கு அருகிலேயே புதனும்,சுக்கிரனும் காணப்படும் என்பது பொதுவான விதியாகும்.அதாவது சூரியன் இருக்கும் ராசிக்கு முன் மற்றும் பின் ஒரு ராசியில் புதன் இருக்கும் .சுக்கிரன் பகவான் சூரியனுக்கு முன் மற்றும் பின் இரு ராசி விட்டு சுக்கிரபகவான் இருக்கும் என்பதால் மேஷ ராசிக்கு அருகில் மீன ராசியில் உச்சமாக இருக்ககூடிய கோள் சுக்கிரன் ஆகும்.ஆனால் சூரியனுக்கு முன் பின் ராசிகளில் புதன் உச்சமாக வாய்ப்பு இல்லை.
                                                 


                 எனவே சூரியன்,சுக்கிரன் இரண்டு கிரகங்கள் உச்சமாக இருத்தலை அறியலாம்.இராமன் பிறந்த நட்சத்திரம் புணர்பூசம் என்பதால் சந்திரபகவான் ரிஷபத்திலே உச்சம் என்பதால்  மிதுனத்திலோ அல்லது கடகத்திலோ சந்திரபகவான் உச்சமடைய வாய்ப்பில்லை.

                ஆதலால் புதன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களை தவிர சூரியன் ,செவ்வாய்,குரு,சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்களே இராமன் பிறந்தநேரத்தில் உச்சமாக இருந்திருக்க முடியும் என்பதை அறியலாம்.

                ஆகையால் இராமாயணக் காலத்தில் சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன் மற்றும் சனியாகிய ஏழு கோள்களே வழக்கில் இருந்திருக்ககூடும்.ஆனால் சுந்தரகாண்டத்தில் பலவிடங்களில் "இராகுவின் வாயினின்று வெளிப்பட்ட சந்திரன்போல "என்ற உவமைக் காணப்படுவதால் நிழல்கிரகங்களான இராகுவும்,கேதுவும் இருந்திருத்தல் வேண்டும்.
                                                                



கோள் (Planet ) என்பதன் பொருள் :-


              கோள் எனும் சொல்லுக்கு வடமொழியில் "க்ரஹம்" என்று பெயர்.க்ரஹணம் என்றால் பிடித்தல் என்று பொருளாகும்.எடுத்துக்காட்டாக சூரிய கிரஹணம் என்பதற்கு "சூரியன் பிடிபடுதல் " என்று பொருள் ஆகும்.

         இவ்வாறே பாணிக்ரஹணம் என்று திருமணத்திற்கு பெயர்.பாணிக்ரஹணம் என்பதற்கு "கையை பிடித்தல் "என்று பொருளாகும்.

            ஒவ்வொருவரின் முன்வினைக்கேற்ப நற்பலன்களை அல்லது தீயபலன்களை துய்க்க செய்வதற்காக இவைகள் அவர்களை பிடிக்கின்றன எனும் பொருள்படும்படி க்ரஹணம் என்று பெயரிட்டனர்.மேற்கூறப்பட்ட ஏழு கோள்களுடளுடன் பிற்காலத்தில் நிழற்கிரகங்களான இராகுவையும்,கேதுவையும் சேர்த்து ஒன்பது கோள்களாக கொண்டு பலன்கள் கூற தலைப்பட்டன. இதையே வடமொழியில் "நவகிரஹம் " என்று போற்றுகின்றனர்.

            கோள்களின் அமைப்புகளும்,தன்மைகளும் ; -

                                                       
                   வான்மண்டலத்தில் சூரியனை மையமாக கொண்டு ஏனைய பிற கோள்கள் சுழன்று வருகின்றன்.புதன் முதல் சுற்று வட்டபாதையிலும்,சுக்கிரன் இரண்டாவது சுற்று பாதையிலும் , நாம் வசிக்கும் பூமி மூன்றாவது சுற்றுவட்ட பாதையிலும் சுழன்று வருகின்றன்.

                  சந்திரன் பூமியை சுற்றும் துணைகோளாகும்.செவ்வாய் நான்காவது சுற்று வட்ட பாதையிலும் ,குரு ஐந்தாவது ஐந்தாவது சுற்று வட்ட பாதையிலும் ,சனி ஆறாவது சுற்று வட்ட பாதையிலும் சூரியனை சுற்றி வருகின்றன.

                சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் புதன் மற்றும் சுக்கிரனின் சுற்று வட்டபாதை அமைந்துள்ளதால் இவற்றை "உள்வட்ட கோள்கள்  என்றும் , செவ்வாய்,குரு,சனி ஆகியவை பூமியின் சுற்று வட்டபாதைக்கு பின் சுற்றுவதானல் இவற்றை "வெளிவட்ட கோள்கள் " என்று கூறப்படுகிறது.இராகு ,கேது ஆகியவை நிழற்கோள்களாகும்.இவற்றிற்கு உருவம் கிடையாது.சோதிடவியலில் பூமியை மையமாக பூமியில் வசிக்கும உயிரினங்களுக்கு ஏற்படும் சுப- அசுப பலன்களை பற்றி ஆராய்ந்து கூறுவதால் ஒன்பது கோள்களும்,பன்னிரு இராசிகளில் சுற்றி வருவதாக கருதப்பட்டது.
                                                        


       சூரியன்


                ஒன்பது கோள்களில் முதன்மையானவர் சூரியன் ஆவார்.அனைத்து கோள்களும் சூரியனிடமிருந்தே ஒளியை பெற்று பிரதிபலிக்கின்றன்.சூரியன் ஆத்மாக்காரகன் ,ஆண்கிரகம்,நெருப்புகிரகம்,தன்னம்பிக்கை ,புகழ் மற்றும் கொளரவத்துக்கு காரகர்,தந்தைக்கு காரகர் ,அரசாங்க காரகன் ஆவார்.

              சூரியன் பூமியிலிருந்து சுமார் 9,30,00,000 மைல்கள் ஆகும்.இதன் கண அளவு பூமியைப்போல 13,00,000 மடங்குகளாகும்.சூரியன் ஒரு ராசியை கடக்க சுமார் ஒரு மாத காலமாகிறது.பணிரெண்டு ராசிகளையும் 365 நாள்,15 நாழிகை 32 விநாடிகளில் சுற்றி வருகிறது.

             சூரியன் சிம்ம ராசியை ஆட்சி வீடாகவும் ,மேஷராசியை உச்ச வீடாகவும் அதற்கு ஏழாம் வீடான துலாம் ராசியை நீச வீடாகவும் கொண்டுள்ளது.


             சூரியபகவான் ஆனவர் சுக்கிரன்,சனி ,இராகு மற்றும் கேதுபகவானோடு பகைமையும் ,குரு,சந்திரன் மற்றும் செவ்வாய் பகவான்களோடு நல்ல நட்பு நிலையையும் மற்றும் புதனோடு சம நிலையை பெற்றுள்ளார்.

           சூரியன் மாத ஒரு ராசி வீதமாக சித்திரை மாதத்தில் மேஷ வீட்டிலிருந்து  ஒரு வருடத்திற்கு பணிரெண்டு ராசிகளையும் சுற்றி வருகிறது.

              சூரியபகவானின் நட்சத்திரங்களாவன : கார்த்திகை,உத்திரம் ,உத்திராடம் ஆகும்.இதன் திசை ஆறு ஆண்டுகளாகும்.இதன் தேவதை சிவன் ஆகும்.சூரியபகவான் செந்தாமரை மலரையும்,கோதுமை தானியத்தையும் ,மாணிக்க இரத்தினத்தையும்,தாமிரம் உலோகத்தினையும்,நிறங்களில் சிவப்பையும்,வாஸ்திரங்களில் சிவப்பையும்,தாமஸ குணத்தையும்,குரூரசுபாவத்தையும்,கார சுவையையும்,எருக்கு சமித்தையும் கொண்டுள்ளது.

           தேர் மற்றும் மயிலையும் வாகனத்தையும்,நடு திக்கையும்,மார்பு அங்கத்தையும்,எலும்பு தாதுவினையும்,பித்தநாடியையும்,ஆண்கிரகமாகவும்,வட்ட ஆசனத்தையும்,கலிங்க தேசத்தையும்,காலனை உபகிரகமாகவும் ,ஏழாம் பார்வையையும் கொண்டது.

சூரியனின் வேறுபெயர்களாவன் :

              ரவி,ஆதித்தன்,பரிதி,பானு,தினகரன்,கதிரவன்,மார்த்தான்டன்.
                    சூரியன் பகவான் ஒருவருடைய சாதகத்தில் பலப்படும்போது அரசாங்க யோகத்தையும்,அரசாளும் யோகத்தையும் மற்றும் தந்தையால் லாபத்தை பெறக்கூடிய வாய்ப்பையும் தருகிறது.
தொடரும்.....

              (தங்களது சாதக பலனை நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் போன் வழியாக சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பலன் பெறலாம்.தாங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை இமெயிலிலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ அல்லது போன்வழியாகவோ தந்து கட்டணம் செலுத்தும் விபரங்களையும் பெறலாம் )



                                          


  அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
   M.SC,MA,BEd,
  சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.


தொடர்புக்கு

                     செல்


                     740 257 08 99
                        97 151 89 647


        வாட்ஸ்அப்
          97 151 89 647


Mail id

masterastroravi@gmai.com
********************************************************************************