Friday, 11 November 2016

சோதிடம் என்னும் அற்புத புதையல்

                                  

 சோதிடம் என்னும் அற்புத புதையல்



செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                              மனித வாழ்வினை நிர்ணயிப்பதில் கிரகங்களின் பங்கு அளப்பறியது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்வும் மேலும் சோதிடம் என்பது  அறிவியலின் ஒரு பிரிவு என்பதை புரியவைக்கவும்தொடர்ந்து முகநூலிலும் மற்றும் எனது வலைதளங்களிலும் எழுதி வருகிறேன்.எனது முகநூல் பக்கத்தில் சோதிடர்ரவிச்சந்திரன்,ஜோதிட குறுந்தகவல்கள் மற்றும் ஜோதிடகவியரங்கம் என்ற வெவ்வெறு facebook page பகுதியில் எழுதி வருகிறேன்.சோதிட ஆர்வலர்கள் அனைவரும் படித்து தொடர்ந்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

                          நமது வானவீதியில் 360 பாகையில் அதாவது முழு நீள வட்டத்தில் கிரகங்கள் சுற்றி வருகிறது.இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை கிரகங்கள் அனைத்தும் பூமியை மையமாக கொண்டு சுற்றி வருவதாக கருதப்பட்டது.இதனை "புவி மையக்கோட்பாடு " என அழைத்தனர்.

                      கோபர் நிக்கஸ் காலங்களுக்கு பிறகு கிரகங்கள் அனைத்தும் சூரியனை மையமாக சுற்றி வருவதாக கருதப்பட்டது.இயேசுவுக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க விஞ்ஞானி அரிஸ்டார்ச்சஸ் பிரபஞ்சம் மையம் கதிரவனே தவிர பூமியல்ல என்பதை கண்டுபிடித்தார்.

\                   இந்த கோட்பாட்டினை "அரிஸ்டார்ச்சஸ் கோட்பாடு அல்லது கதிர் மையக்கோட்பாடு (ஹீலியோ சென்டிரிக் பிரின்சிபில் ) என்று புகழ்பெற்றது.
                                                        


                பிறகு "தாலமி " அதை மாற்றி பூமியே மையம் என மறுப்பு தெரிவித்தார்.
மறுபடியும் "பிரபஞ்ச மையம் கதிரவனே "என்ற உண்மையை நிலைநிறுத்த ஆயிரம் ஆண்டுகள் பிடித்ததன.கெப்ளரும்,கோபர்நிக்ஸ் வந்துதான் பிற்காலத்தில் அதை நிலை நாட்ட போராட வேண்டியிருந்தது.எனவே கிரேக்க விஞ்ஞானி அரிஸ்டாரச்சஸ் கண்டு பிடித்த உண்மை நீண்ட காலம் மறைந்து கிடந்து கோபர் நிகஸ் பழைய கருத்தை திறந்து பார்த்து "பிரபஞ்ச மையம் சூரியனே "என பிரகனபடுத்தினர்.
இவர் காலத்திற்கு பிறகுதான் சூரியகுடும்பம் எனும் கருத்து நிலை நாட்டப்பட்டது.

                   எனவே சூரியனை மையமாக கொண்டு நவகோள்களும் நீள்வட்ட பாதையில்   சுற்றி வருகிறது.
வானவீதியில் 360 பாகையில் சுற்றி வரும் கிரகங்கள்  ஜெனன காலத்தில் அவை பெற்றிருக்கும் பாகை அடிப்படையில் பணிரெண்டு ராசிகளில் கிரகங்கள் வைக்கப்படுகிறது.ஒரு ராசிக்கு முப்பது பாகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

              இருபத்தெழு நட்சத்திரங்களில் ஒரு ராசிக்கு இரண்டெகால் பாதம் அடிப்படையில் பணிரெண்டு ராசிகளுக்கும் நட்சத்திரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது.ஒரு ராசிக்கு முப்பது பாகை என்பதால் ஒரு கிரகம் ஒரு ராசியில் ஒரு பாதம் கடக்க 3 பாகை மற்றும் 20 கலைகள் வீதம் ஒரு நட்சத்திரத்தை கடக்க 13 பாகை மற்றும் 20 கலைகள் நகரப்பட வேண்டும்.ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதம் வீதம் பணிரெண்டு ராசிகளுக்கு 108 பாதங்கள் ஆகும்.

                         


             கிரகங்களில் புதன் பகவானும் மற்றும் சுக்கிரபகவானும் சூரியனிற்கு மிக அருகில் இருப்பதால் உள்வட்ட கிரகங்கள் ஆகும்.இதில் புதன் பகவான் முப்பது பாகைக்குள் சூரியன் இருக்கும் வீட்டிற்கு முன் மற்றும் பின் என இருக்கும்.இதேபோல சுக்கிரபகவான் அறுபது பாகை வித்தியாசத்தில் சூரியன் இருக்கும் வீட்டிற்கு முன் ,பின் என இருக்கும்.

                 எனவே ஒருவருக்கு கணிக்கப்பட்ட சாதகம் சரியா ? என்பதை எளிதாக கண்டறிய வழிமுறையானது ஒருவருக்கு கணிக்கப்பட்ட சாதகத்தில் புதன்பகவான் ஆனவர் சூரியனோடு அல்லது சூரியனுக்கு முன் மற்றும் பின் ஒரு வீட்டிற்குள்தான் இருக்கும்.

                சுக்கிரபகவான் ஆனவர் சூரியனோடோ அல்லது சூரியனுக்கு முன் மற்றும் இரண்டு வீடுகள் வித்தியாசத்திற்குள்தான் இருக்கும்.ஆதலால் சுக்கிரன் மற்றும் புதனின் இடத்தை எளிமையாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

                 இதேபோல சாதக கட்டத்தில் சூரியனின் இடத்தையும் எளிதாக கண்டறியலாம்.சூரியன் ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் பணிரெண்டு ராசிகளையும் பணிரெண்டு மாதம் சுற்றி வருகிறது .இவையே ஒரு ஆண்டு ஆகும்.
                                                              


                 சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் பிரவேசிக்கிறது.இவ்வாறாக ஒரு ராசிக்கு ஒரு மாதம் சுற்றி வருவதால் சாதகரின் பிறந்த மாதத்தை கொண்டு சூரியன் இடம்பெறும் ராசியையும் எளிதாக கண்டறியலாம்.

                 இதில் உள்ள அறிவியல் உண்மையை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குகிறேன் வாருங்கள்.சித்திரை மாதத்தில் வெயில் அதிகமாக தனது முழு உஷ்ணத்தையும் காண்பிப்பதைதான் சிம்பாலிக்காக உணர்த்தவே சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் ஆகும்.அதே நேரத்தில் அதன் ஏழாம் ராசியில் ஐப்பசி மாதம் மழைகாலம் என்பதால் சூரியனின் உஷ்ணத்தன்மை குறையும் என்பதால் இங்கு சூரியன் நீசமாகி விடுகிறது.

                 ஒருவர் ஜெனித்த சாதகத்தில் அமாவாசை காலங்களில் அல்லது இரண்டேகால் நாளில் முன் மற்றும் பின் சூரியனும் மற்றும் சந்திரனும் ஒருவரது சாதகத்தில் ஒரு ராசியில் இணைந்திருக்கும்.

              பொளர்ணமி காலத்தில் சூரியனும் மற்றும் சந்திரபகவானும் ஒன்றுக்கொன்று 180 பாகையில் அதாவது ஒரு வீட்டிற்கு ஏழாவது வீட்டில் சூரியனும் மற்றும் சந்திரபகவானும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளூம்.

                       


              இதேபோல ராகு மற்றும் கேதுக்களுக்கு இடமானது ஒரு சாதகத்தில் ராகு இடம்பெறும் ராசிக்கு ஏழாமிடத்தில் அதாவது 180 பாகை நேர்கோட்டில்  இருக்கும்.
மனதுக்காரன் எனப்படும் சந்திரபகவான் ஒரு ராசிக்கு 21/4 நாள் வீதம் இருபத்தெழு நாட்கள் பணிரெண்டு ராசிகளையும் சுற்றி வருகிறார்.

              சூரியனும் ,சந்திரனும் இணைந்து ஒரு ராசியில் இருப்பதை அமாவாசை ஆகும்.சூரியனை விட்டு பிரிந்து சமசப்தமாக சூரியனுக்கு ஏழாவது ராசிக்கு சந்திரன் வருவதையே பொளர்ணமி என்கிறோம்.இவ்வாறாக அமாவாசை காலத்திலிருந்து பொளர்ணமி காலம் வரை இடைப்பட்ட காலங்களிலினை பதினைந்து திதிகளும் வளர்பிறை அல்லது பூர்வபட்ச அல்லது சுக்கில பட்ச திதி என்கிறோம்.இதுவே வளர்பிறை காலம் ஆகும்

.             இதேபோல பொளர்ணமி காலத்திலிருந்து அமாவசை காலம் வரை உள்ள காலத்தை தேய்பிறை அல்லது கிருஷ்ணபட்சம் அல்லது அமரபட்சம் என்கிறோம்.

                  வளர்பிறை சந்திரன் சுபராகவும்,தேய்பிறை சந்திரனை பாவியாகவும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.எனவேதான் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு வளர்பிறை உகந்தது என்பதால் வளர்பிறை காலங்களில் வரும் திதிகளை எடுத்து( அஷ்டமி,நவமி தவிர ) சுபகாரியங்கள் வீடுகளில் நிகழ்த்தப்படுகிறது.
                                                   


                     சந்திரனின் இடத்தை கண்டறிய சாதகர் ஜெனித்த நேரத்தில் பால் வீதியில் என்ன நட்சத்திரம் தெரிகிறதே அந்த நட்சத்திரமே சாதகரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.அந்த நட்சத்திரம் இடம் பெறும் வீடே சாதகரின்  ஜென்ம ராசி ஆகும்.

              அந்த நட்சத்திர அதிபதியே சாதகரின் ஜென்ம திசை ஆகும்.
அந்த நட்சத்திரம் ஜெனன காலத்தில் எவ்வளவு தூரம் அந்த நட்சத்திர பாதத்தில் கடந்துள்ளதே அவரின் நட்சத்திர பாதம் ஆகும்.பாத அளவிற்கு ஏற்ப திசையில் சென்றது போக சாதகரின் ஜெனன கால திசை இருப்பு இருக்கும்.இதனை அடிப்படையாக வைத்து கால வயதிற்கு ஏற்ப சாதகரின் நடப்பு திசை,புத்தி மற்றும் அந்தாரம் கணக்கிடப்படுகிறது.

நன்றி! தொடரும்...

(தங்களது குடும்ப அங்கத்தினரின் சாதக பலன் ,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை   போனின் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.நீங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )


எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647


எனது அலைபேசி
  740 257 08 99
97 151 89 647


  My Email id
masterastroravi@gmail.com


My facebook id. Search it below the address
m.facebook.com/ravichandran3538039
எனது முகநூல் பக்கபகுதி
m.facebook.com/சோதிடர்ரவிச்சந்திரன்-1596147833982373
அன்புடன்


சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.

Saturday, 9 July 2016

ஆன்மீகவாதியாகும் யோகம் உங்களுக்கு உண்டா ?

                                

ஆன்மீகவாதியாகும் யோகம் உங்களுக்கு உண்டா ?


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

            « » வாலிப வயதில் மனம்போன போக்கில் தனது இஷ்டப்படி ஆடிவிட்டு ஒரு குறிப்பிட்ட நாற்பது வயதை கடந்த பிறகு தான் ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என ஆசை பலருக்கு வந்து அதனால் சோதிடர்களை நாடி நான் ஆன்மீகவாதியாக மாறும் யோகம் ? எனது சாதகத்தில் உண்டா ? என வினவும் பலருக்கு பயன்படட்டும் எனும் நோக்கில் இப்பதிவை கொண்டு செல்கிறேன்.

           ஆன்மீகம் எனும் வார்த்தையை பயன்படுத்தி பிரச்சினைகளிலிருந்து சமூகத்தின் பார்வையில் தப்பித்துக்கொள்ளவே அதை பலர் நாடுகிறார்கள்.
காவி உடை அணிவதாலோ அல்லது மொட்டை அடிப்பதாலோ அல்லது உடல் முழுவதும் திருநீறு பூசுவதனாலேயே ஒருவர் ஆன்மீகவாதியாகிவிட முடியாது.இதனைத்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவர்கூட
"மழித்தலும் நீட்டலும் வேண்டாது உலகம் பழித்து தொழித்து விடும் "என்கிறார்.

           ஆன்மீகம் என்பது தன்னையறிதல் ஆகும்.தன்னையறிந்தவனே மெய்ஞானி.ஒருவன் தன்னையறிந்த பின் அவனுக்கு என எந்த அடையாளத்தையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டான்.இதனால்தான் "கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர்" என்றனர்.
ஆன்மீகத்தின் உச்சநிலையை அடைந்தவன் தன்னை பெரிதாக காட்டிக்கொள்வதில்லை.ஆன்மீகத்தின் உச்சநிலையை அடைந்ததாக தன்னை பீற்றிக்கொள்பவர்கள் நிச்சயமாக அந்த மெய்ப்பொருளை அடைந்ததில்லை.

         ஆன்மீக சாதனையில் ஈடுபட்டு அனைவரும் வென்றதில்லை.எனவேதான்
      "ஓடி ஓடி  ஓடி ஓடி
உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி
நாட்களும் கடந்துபோய்
வாடி வாடி வாடி வாடி
மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி
எண்ணிறந்த கோடியே"
என அழகாக பாடுகிறார்.



           ஆன்மீக சாதனையில் ஈடுபட வயது,கல்வி,திறமை மற்றும் பொருளாதர நிலை என எதையும் சார்ந்திருக்கவில்லை.ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன்கூட ஞான நிலையை அடையமுடியும்.அதேநேரத்தில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அந்த பேருண்மையை அடையமுடியாது.அது ஒரு விநாடிநேர மின்னல் ஆகும்.


          ஆன்மீக சாதனையில் ஈடுபட விரும்புவரது சாதக கட்டத்தில் ஓன்பதாம் பாவமும் ,ஒனபதாம் அதிபதியும் ஒருவருக்கு துணைபுரிய வேண்டும்.அதேபோல லக்கனாதிபதியை வைத்தே ஒருவரது குணாதிசியமும்,இயல்பும் அமையும் என்பதால் அமையும் என்பதால் லக்கனாதிபதியும் பலம்பெற்றிருக்கவேண்டும்.

         ஒருவர் ஆன்மீக சாதனையில் சிறக்க ஆன்மீக செம்மல் எனப்படும் குருபகவானும்,ஞானக்காரகர் கேதுபகவானும்,கர்மக்காரகன் சனிபகவானும் மற்றும் மனோகாரகன் சந்திரபகவானும் பலமடைந்து இருக்கவேண்டும்.
                                                        


           ஒருவரது சாதக கட்டத்தில் ஒன்பதாம் பாவம் குறிக்கும் சில பாவக காரங்களைப் பார்ப்போம்.அவையாவன
தந்தையின் நிலை,தெய்வபக்தி,ஆத்மசாதனை,ஆலயத்திருப்பணி,சத்சங்கம்,மடம் நிறுவுதல்,ஆசிரமம் நடத்துதல்,தானதர்மம் வழங்குதல்,ஆன்றோர் தரிசனம்,குருஉபதேசம் பெறல்,குருவாக இருத்தல்,யாத்திரை அழைத்துபோதல் மற்றும் பாக்கியவனாக திகழ்தல் முதலியன ஆகும்.

         ஒருவர் ஆன்மீகவாதியாக தேவையான அனைத்து அம்சங்களையும் ஒன்பதாம் பாவக காரகங்கள் பெற்றிருப்பதால்தான் ஒன்பதாம் பாவமே மிகவும் இன்றியமையாத பாவம் ஆகும்.எனவேதான் ஒன்பதாம் அதிபதியை தர்மாதிபதி என்கிறோம்.
எனவே ஒருவரது சாதகத்தில் ஒன்பதாம் இடமும் மற்றும் ஒன்பதாம் அதிபதியும் சுப கிரகங்களின் (பாவிகளில் கேதுபகவான் தவிர) தொடர்பும் மற்றும் பார்வையும் பெற்று ஒன்பதாம் அதிபதி பலமடைந்திருக்கவேண்டும்.

           ஒருவரது குணநலன்களையும்,இயல்பையும் குறிக்கும் லக்கனாதிபதி எங்கு அமர்கிறதோ அதன் தன்மையை ஒருவன் பெறுவான் எனும் வகையில் லக்கனாதிபதி ஒன்பதாம் இடத்தில் அமர்வதும் அல்லது ஒன்பதாம் இட அதிபதி லக்கனத்தில் அமர்வதும் அல்லது லக்கனம் மற்றும் ஒன்பதாம் இடத்து அதிபதிகள் ஒருவரையோருவர் சுபராகி பார்த்துக்கொள்வதும் அல்லது இருவரும் பரிமாறிக்கொள்வதும் அல்லது இருவரும் இணைந்து லக்கனத்திலோ அல்லது ஒன்பதாம் இடத்தில் அமர்வதும் மேற்கண்ட எல்லா அமைப்புக்கும் ஞான செம்மல் குருபார்வை பெறுவதும் ஆன்மீக சாதனையில் ஒருவரை ஜொலிக்க வைக்கும் அமைப்பாகும்.
                                                     


           லக்கனத்தில் அல்லது ஐந்தில் அல்லது ஒன்பதில் அமர்ந்த குருபகவானும் ,குருவின் பார்வை பெற்றுள்ள ஞானக்காரகன் கேதுபகவானும் அல்லது மனோகாரகன் சந்திரபகவானும் ஒருவரை ஆன்மீக சாதனையில் ஈடுபடவைக்கும்.
ஞானகாரகன் கேதுபகவான் லக்கனம்,வாக்குஸ்தானம்,பூர்வபுண்ணியஸ்தானம்,தர்மஸ்தானம் மற்றும் வியஸ்தானம் போன்ற இடங்களில் அமர்ந்து குருபகவானின் பார்வையைப்பெற்று ஒன்பதாம் அதிபதியும் பலம் பெற்றவர்கள் தெய்வ அருளை நிரம்பபெற்றவர்கள்.இவர்களது வாக்கு பலிக்கும்.பின்னால் நடக்க இருப்பதை முன்னால் யூகிக்கும் சக்தி படைத்த சித்தர்களாவர்.

          கர்மக்காரகன் சனியும்,ஆன்மீக செம்மல் குருபகவானும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளமால் இருத்தல் நலம்.ஏனெனில் ஏழாம் பார்வை எல்லாகிரகங்களுக்கும் முழுப்பார்வை என்பதால் சனிபகவான் குருவை சமசப்தமாக பார்க்கும்போது குருவிற்க்கே உரித்தான குணத்தை சனிபகவான் மாற்றிவிடுவார்.எனவே சனியை குருபகவான் தனது ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையால் பார்க்கப்பட்டூ லக்கனமும் ,ஒன்பதாம் பாவமும் பலப்பட ஆன்மீக சாதனையில் வெற்றிப்பெறமுடியும்.

நன்றி! நன்றி!
(தங்களது சாதக பலன் மற்றும் விவாக பொருத்தம் போன்ற பலன்களை எந்த நாட்டில் இருந்தாலும் போன் வழியாகவே பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.நீங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது அலைபேசிக்கு அல்லது எனது வாட்ஸ்அப் (97 151 89 647 ) க்கு மெஸ்ஸேஸ் செய்தால் போதும் .ஜெனன சாதகம் எழுதி போஸ்டலிலும் அனுப்பிவைக்கப்படும் )




அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ ரிசர்ச் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு.

எனது அலைபேசி
97 151 89 647
740 257 08 99

My Email
masterastroravi@gmail.com

Do you want to read more information in Astro field search my Facebook address
m.facebook.com/ravichandran3538039

Wednesday, 27 April 2016

சன்னியாச யோகம்

                                  சன்னியாச யோகம்

ஸ்ரீபத்ரகாளியம்மன் அருளுடன்

                   ஒருவர் பிறக்கும் போது சாதரன நிலையில் பிறந்து பிறகு சந்நியாச நிலைக்கு உயர்ந்தவர்கள் பலருண்டு.
               கொளதம புத்தர் அரச குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அவன் பிறந்த உடனே அவர் பிற்காலத்தில் சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்வார் என அவர்களது அரச சோதிடர் புத்தருடைய தந்தையிடம் கூறியவுடன் அவர் தன் மகன் சித்தார்த்தான் சந்நியாச வாழ்வு மேற்கொள்ளக்கூடாது என அவரை அறையில் அடைத்தே வைத்திருந்தார்.

             அங்கு அவருக்கு சகல வசதிகளையும் கிடைக்கும்படி செய்தார்.   வாடாத மங்கைகளை வைத்து பணிவிடை செய்ய வைத்தார்.அங்கு உள்ள பூச்செடியில் உள்ள பூ கூட உதிர்ந்து விழுவது  மகனுக்கு தெரியக்கூடாது என பூ வாடி விடுவதற்கு முன்னே பறிக்கும்படியான ஆட்களை நிரப்பி வைத்திருந்தார்.ஏனெனில் பூ உதிர்ந்து விழுவதை பார்த்துக்கூட ஏன் ?எதற்கு ? வினா எழுப்பி ஞானம் பெறக்கூடும் என எண்ணினார்.


            திருமணமும் நடத்திவிட்டார்.ராகுல் என்ற மகனும் பிறந்துவிட்டான்.இனி தன் மகன் மாற மாட்டான் என வீதியை சுற்றி பார்க்க அனுமதி அளித்தான்.அங்கு பிணியுற்றோர்,இறந்தோர் போன்றவர்களை பார்த்த பிறகு மனித துன்பத்திற்கு காரணம் என்ன ? என்னும் வினா அவர் உள்ளத்தில் எழுந்து அதன் விளைவாக ஒருநாள் மனைவி மக்களையே விட்டு பிரிந்தார்.கயா எனும் மரத்தடியில் இருந்து தவமிருந்து "ஆசையே துன்பத்திற்கு காரணம்,ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம் " என விடை கண்டு ஞானம்பெற்றார்.

            நான் இக்கதையை(சோதிட சம்பந்தப்பட்ட கருத்துக்களை அதிகம் பதிவிட விரும்பியதால் புத்தர் கதையை சுருக்கிவிட்டேன்)
சோதிடம் அறியாத காலத்தில்
இளம்வயதில் அவனது சாதகத்தை பார்த்த சோதிடர் என்ன கூறியிருப்பார் ? என வினா எழும்பியதுண்டு.

                       அதற்கான விடையை சோதிடராகிய பிறகுதான் அதற்கான விடையை பெற்றேன்.ஒருவரது சாதகத்தில் கர்மாதிபதி என அழைக்கப்படும் பத்தாம் அதிபதியுடன் இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் கூடி 2,4,7,8,10 மற்றும் 12 ஆம் இடங்களில் நிற்கும் சாதக அமைப்பை பெற்றவர் சந்நியாசி ஆவான் என்பது சோதிட விதியாகும்.

      மேலும் புலிப்பாணி சித்தரும் தனது புலிப்பாணி சோதிடத்தில்

                "கேளப்பா ஈரைந்தில் முக்கோள் நிற்கில் கெதியுள்ள சந்நியாச யோகம் யோகம்" என்கிறார்.

                                                    


கொளதம புத்தரின் சாதக விபரம்


               கடக லக்கனம்,துலாம் ராசி


       6-ல் கேது

     10-ல் சூரியன்,செவ்வாய்,குரு,சுக்கிரன் மற்றும் சனி (ஐந்து கிரகங்கள்.
       11-ல்  புதன்
       12-ல் ராகு

             எனவே கொளதம புத்தருடைய சாதகத்தில் பத்தாம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று ருசகயோகமும் பெற்று இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து இருந்ததால்தான் இளம்வயதிலே சோதிடர் இவரை சந்நியாசி ஆவார் என கூறியதும் அதேபோல பிற்காலத்தில் மாறியதும்தான் சோதிடத்திற்கு வரலாற்று ரீதியான சான்றுகளாகும்.

               இவை மட்டுமல்லாயமல்  சூரியன் உச்சம் பெற்று குரு உடன் சேர்ந்து இருப்பது ஆன்மீகத்தில் சிறந்த தலைவராகலாம்.எனவேதான் புத்தமதத்தை நிறுவசெய்து அதன் தலைவராக மாற்றியது.மேஷத்தில் கர்மக்காரகன் என சனி பகவான் நீசம் பெற்று சூரியன் உச்சம் பெற்று நீசபங்க யோகத்தையும் உண்டாக்கியது.

             ஒரு மனிதனை ஐந்தாமிடத்தில் கேது பகவான் அமர்வதும் அதுவே கடக வீடாக இருந்து கடக கேதுவும் ,மகர ராகுவும் சந்நியாச வாழ்வு மேற்கொள்ள வைக்கும்.

               எனவேதான் ஜோதி ராமலிங்க சுவாமி (வள்ளலார்) அவர்களது சாதகத்தில் கடக கேதுவும்,மகர ராகுவும் இடம் பெற்ற காரணத்தால் சுவாமி அவர்களுக்கு இயற்கையிலே தெய்வ தன்மை ஏற்பட்டது.
இவருக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் ,கேது சேர்க்கை சந்நியாச வாழ்க்கையை தந்தது.இவர் இளமைக்காலத்தில் மழைக்கூட பளளிக்கூடம் ஒதுங்கியதில்லை .ஆனால் இவர் எழுதிய திருவருட்பா முதலான பல  நூல்களுக்கு தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களால் கூட தொகுக்க முடியாத அளவிற்கு புலமை வாய்ந்ததாக திகழ்ந்தது.

வள்ளலார் சாதக விபரம்

        மீனம் லக்கனம்,துலாம் ராசி,சித்திரை நட்சத்திரம்-4-ம் பாதம்


        3-ல் சனி

         4-ல் குரு
         5-ல் செவ்வாய்,கேது
         7-ல் சூரியன்,சுக்கிரன்
          8-ல் புதன்,சந்திரன்
        11-ல் ராகு.

            ஒருவரது சாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று ஞானகாரகன் கேது பகவானையும் மற்றும் கர்மக்காரகன் சனி பகவானை சமசப்தமாக பார்காமல் பார்த்து அவரது குடும்ப மற்றும் களஸ்திரஸ்தானம் பலவீனப்படும்போது சம்சார வாழ்வை விட்டு விலகி சந்நியாச வாழ்வை மேற்கொள்வான்.

              "கட்டிய மனையாள் ஏறுக்குமாறானால் சற்றேனும் கூசாமல் சந்நியாசம் கொள்"எனும் கூற்றுப்படி லொளகீக வாழ்வை வெறுத்து சந்தர்ப்ப வசத்தால் சந்நியாசி ஆவாருண்டு.


சாதக அலங்கார பாடலில் கூறியுள்ளபடி
"வேண்டிடும் செவ்வாய் ரவி மதி மூவர் கூடி விரும்பு பத்தாமிடத்திலிருக்க மின்னார் பொன்தனக்கும் ஈண்டிய தேர் விரிவில்லாச் சன்னியாசி ஆவான்"

    சூரியன்,சந்திரன்,செவ்வாய் கூடி பத்தாமிடத்தில் இருந்தாலும் இவர்களை குரு பார்த்தாலும் இவன் எப்பொழுதும் சன்னியாசியாக இருப்பான்.

                                                                             


அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம் சக்தி ஜோதிட ஆய்வு மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு.

எனது வாட்ஸ்அப் மற்றும் செல் எண் இரண்டும் ஒரே எண்
அவை 97 151 89 647
மற்றொரு செல்
740 257 08 99

(தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு சோதிட பலனை நன்கு ஆராய்ந்து ஒவ்வொறு பாவத்திற்கு உண்டான பலனை விரிவாக போன் வழியாக பெற தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு)

Thursday, 21 April 2016

செவ்வாய் தோஷமும் ,திருமண வாழ்வும்


                                   


செவ்வாய் தோஷமும்,திருமணவாழ்வும்




ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                இன்றைய காலகட்டத்தில் சிலரது திருமண வாழ்வு  என்பது செவ்வாய் தோஷத்தால் காலதாமதமாகி கொண்டே செல்வதும் அதனால் அப்பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் வேதனையடைவதையும் சோதிட துறைக்கு வந்த பிறகு நான் கண்கூடாக கண்டதன் விளைவாக அவர்களுக்காக ஒரு சோதிட பதிவு இட வேண்டும் என எண்ணியதன் விளைவாக இப்பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

             இந்த செவ்வாய் தோஷம் என்பது வெறும் தோஷமே ஆகும்.இதற்காக பயப்பட தேவையில்லை.இது ஆயுளை கெடுப்பது கிடையாது.

              சில சோதிடர்கள் செவ்வாய் களத்திரத்தின் ஆயுளை கெடுக்கும் என பயமுறுத்தியதன் விளைவாக பல பெண்களுக்கும்/ஆண்களுக்கும் திருமணம் என்பது நடைபெறுவது கால தாமதமாகி பலர் முதிர்கன்னிகளாகவே இருக்கிறார்கள்.

                செவ்வாய் தோஷம் என்பது ஒருவரது சாதகத்தில் லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ அல்லது சுக்கிரனுக்கோ 2,4,7,8,மற்றும் 12 ம் இடங்களில் செவ்வாய் இருப்பின் செவ்வாய் தோஷமே ஆகும்.

               இதில் என்னைப்பொறுத்தவரை இரண்டாமிடம் ,ஏழாமிடம் மற்றும் எட்டாமிடம் இந்த ஸ்தானங்களில் செவ்வாய் அமர்வது நல்லதல்ல ஏனெனில் இவை யாவும் திருமணவாழ்வு சிறக்க உகந்த இடமாதலால் இதுபோன்ற இடங்களில் பாவியாய செவ்வாய் பகவான் அமர்தல் கடுமையான செவ்வாய் தோஷத்தை உண்டுபண்ணும்  என்பது என் அனுபவ உண்மையாகும்.

                இதுபோன்ற செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரைதான் ஜோடியாக இணைக்கவேண்டும் .இதற்கான காரணத்தை அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
                                               


                செவ்வாய் தோஷத்தை பொறுத்தவரை மூன்று வகையாக அவை தரும் பாதிப்பின் அடிப்படையில்  பிரிக்கலாம்.அவையாவன:-

1)உடல் நலத்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்.

2)தாம்பத்ய உறவை பாதிக்கும் செவ்வாய் தோஷம்

3)உயிரைக்கெடுக்கும் செவ்வாய் தோஷம்
    என பிரித்து பார்க்கலாம்
                                         

1)உடல் நலத்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்:

-
                     செவ்வாய் என்பது நமது உடலில் உள்ள இரத்தத்தை குறிப்பதாகும்.நமது இரத்தத்தில் ஆண்டிஜென் ,ஆண்டிபாடி எனும் இரு பகுதிகளின் கலவையாகும்.இங்கு ஆண்டிஜென் நுண்கிருமி ஆகும்.இது உடலுக்கு நல்லதல்ல. உலகிலே ஆண்டிஜென் இல்லாத ஒரே பொருள் தாயின் பால் ஆகும்.எனவே தாய் பாலை அருந்திய குழந்தைகள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியுடையவர்களாக உள்ளார்கள்.மற்றொன்று ஆண்டிபாடி ஆகும்.ஆண்டிபாடி என்றாலே "எதிர்ப்பு சக்தி" என்று பொருள்.இது இரத்தத்தில் மிகுதியாக இருப்பது நல்லது.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

                    இதை ஏன் இவ்வளவு தூரம் ஒரு அறிவியல் ஆசிரியாக விளக்கினேன் ஏன் எனில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களது இரத்தத்தில் இந்த ஆண்டிஜென் எனும் நுண்கிருமி அதிகமாக இருக்கும்.இந்த கிருமிகளை எதிர்க்கும் சக்தியான ஆண்டிபாடியும் அவர்களது இரத்தத்தில் அதிகப்படியாக இருப்பதால் அது அவர்களை பாதிக்காது.ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை மணக்கும்போது இந்த நுண்கிருமிகள் செவ்வாய் தோஷமில்லாதவர் உடலில் நுழைந்து நாளுக்குநாள் உடல் மெலிந்து நோயாளியாவர்.

                    ஆண் ஜாதகத்தில் இரண்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் செவ்வாய்பகவான்  இருந்து அவருடன்  ராகு அல்லது கேது பகவான் இணைந்திருந்தால் (இது மனைவி ஸ்தானத்திற்கு ஆறாமிடம் மற்றும் எட்டாமிடம் ஆக வரும்) இதனால் அவனுக்கு வரும் மனைவிக்கு செவ்வாய் தோஷம் இல்லாமிருந்தால் அவளுக்கு திருமணத்திற்கு பிறகு மாதாவிலக்கு கோளாறுகள்,கர்ப்பபையில் கட்டிகள்,அதிகமான உதிரப்போக்கு,அடிக்கடி கருச்சிதைவு மற்றும் இரத்தசோகை போன்ற நோய் உண்டாகலாம்.இதனால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.இது செவ்வாய் திசையினிலோ அல்லது செவ்வாயுடன் சேர்ந்த ராகு,கேது திசைகளில் மேற்படியான பலன்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.

              இதேபோல பெண் ஜாதகத்தில் இரண்டாமிடத்திலோல்லது பணிரெண்டாமிடத்திலோ செவ்வாய் இருந்து அவருடன் ராகு மற்றும் கேதுபகவான் இணைந்திருந்தால் அவளுக்கு வரும் கணவனுக்கு செவ்வாய் தோஷம் இல்லையென்றால் இரத்தத்தில் கிருமிகளின் தாக்குதல்,விரை வீக்கம் ஏற்படுதல் மற்றும் அறுவை சிகிச்சை பாதிப்புகள் செவ்வாய் திசையிலோ அல்லது ராகு/கேது திசைகளில் தரலாம்.
                                                     


2)தாம்பத்ய சுக்த்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்;-


                பொதுவாக செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு உடல் வெப்பம் அதிகமா இருக்கும்.காம உணர்வு மிகுதியாக இருக்கும்.இரத்தத்தின் தன்மை அதிக வீரியத்துடன் இருக்கும்.உயிர் திரவம்(விந்து/அண்ட அணுக்கள்) கெட்டித்து இருக்கும்.தாம்பத்ய உறுப்புகள் வலிமை மிக்கதாக இருக்கும்.தாம்பத்ய உறவில் தீவிரமான ஈடுபாட்டில் இருப்பார்கள்.பாலுணர்வு தொடர்பான உரையாடலை அதிகமாக விரும்புவுவார்கள்..இவர்கள் இரத்தத்தில் ஆண்டிஜென் மிகுந்திருக்கும்.
செவ்வாய் தோஷம் இல்லாதவர்கள் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.காம உணர்வு சராசரியாக இருக்கும்.இவர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவார்கள்.தங்களின் எதிர்பாலினத்தாரை அனுசரித்து நடந்து கொள்வார்கள்.தாம்பத்ய உறவுக்கு அதிகம் முக்கியத்துவம் தரமாட்டார்கள்.பாலுணர்வு தொடர்பான உரையாடலை விரும்பி பேசமாட்டார்கள்.இவர்களது இரத்தத்தில் ஆண்டிஜென் அதிகம் இருக்காது.

           எனவேதான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ள மற்ற நபரை இணைக்கவேண்டும்.இவ்வாறு செவ்வாய் தோஷம் உள்ளவரை இத்தோஷம் இல்லாதவரோடு இணைக்கும்போது அவர்களது காம உணர்வுக்கு இத்தோஷமில்லாதவர்கள் ஈடுகொடுக்க இயலாததால் அவர்கள் வேலி தாண்டிய வெள்ளாடு ஆக மாறும் நிலைக்கு வந்து விடுகிறார்கள்.

                 ஆண்/பெண் ஜாதகத்தில்  செவ்வாய் நான்கு,ஏழு,எட்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் இருந்து அவருடன் பாதிக்கப்பட்ட சுக்கிரன் (நீசம்,அஸ்தங்க மற்றும் வக்கிர) இணைந்து சுபர் பார்வை பெறாவிடில்
இவர்களை செவ்வாய் தோஷமில்லாதவரோடு இணைக்கும்போது அவனோ /அவளோ காம மிகுதியால் அதாவது உடல் உறவில் திருப்தியில்லாமல் பல மலரில் தேன் எடுக்கும் வண்டாவாள் அல்லது தனியாக பிரிந்து வாழும் சூழ்நிலையை உருவாக்கும்.இது செவ்வாய் அல்லது சுக்கிரதிசையில் நடக்கலாம்.
                                                                    


3)உயிரை கெடுக்கும் செவ்வாய் தோஷம்:-


         கால புருஷ லக்கனத்திற்கு பாதகாதிபதியான சனி பகவான் தனக்கு சத்ருவான செவ்வாய் பகவனோடு இரண்டு,நான்கு,ஏழு ,எட்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் அமர்ந்து  அவனுக்கோ/அவளுக்கோ வரும் ஜோடிக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்து விவாகம் செய்தால் செவ்வாய் திசை சனிபுத்தியிலோ அல்லது சனி திசை செவ்வாய் புத்தியிலோ தன் துணையை இழக்கும் வாய்ப்பு உருவாகும்.

           செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு லக்கனத்திற்கு இரண்டு மற்றும் ஏழாம் அதிபதி வலுக்குறைந்த நிலையில் செவ்வாய் தோஷம் இல்லாதவரோடு இணைக்கும்போது இந்த செவ்வாய்தோஷமே தாரதோஷமாக மாறி தோஷம் இல்லாதவரின் உயிரை பறித்து விடும்.அதேநேரத்தில்( 2,7 ஆம் அதிபதி ) வலுவான நிலையில் தோஷமில்லாதவருக்கு திருமணம் செய்யும்போது உடல் நலக்குறைவும்,தாம்பத்ய குறைபாடும் உருவாகலாம்.



அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம் சக்தி சோதிடநிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.

My Email
masterastroravi@gmail.com

My facebook link
Do you want to know more information search below address
m.facebook.com/ravichandran3538039

எனது வாட்ஸ்அப் மற்றும் செல் எண்ணும் ஒரே எண் ஆகும்.அவை
97 151 89 647

மற்றொரு செல் எண்
740 257  08 99

(தங்களுக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு சோதிட ஆலோசனையை போன் வழியாக பெறலாம்.திருமண பொருத்தம்,புத்திரபாக்கியம் தொடர்பாக,வேலைவாய்ப்பு மற்றும் கடன்பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு தீர்வு அளிக்கப்படும்.எனது செல் அல்லது வாட்ஸ் அப் அல்லது மெஸ்ஸேன்சர் மற்றும் இமெயில் மூலமாக தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் இடத்தை தெரிவித்து பலன்பெறலாம்.கட்டாயம் கட்டணம் எனது வங்கி கணக்கில் ஏறிய பிறகே பலனளிக்கப்படும்.)Do you want to consult your horoscope through mophile ? ,conduct me.Charge is applicapable.

Monday, 28 March 2016

கிரகங்கள் படுத்தும் பாடு-முகநாலில் நான் எழுதி வரும் நீண்ட தொடர்

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

ல்லாம் வல்ல பரம்பொருளின் ஆசியோடு முகநூலில் மனித வாழ்வில் கிரகங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்து துல்லியமாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு நீண்ட தொடராக "கிரகங்கள் படுத்தும் பாடு "-எனும் தலைப்பில் எழுதி வருகிறேன்.சோதிடத்தில் ஆர்வமுடையவர்கள் கீழ்கண்ட முகநூல் லிங்கை கிளிக செய்து எனது முகநூல் டைம்லினிற்கு சென்று படித்து அறிய பல கருத்துக்களை பெற்றிடுங்கள்.

Respected viewers,
  Do you want to know more information about Astrology field ?
Please join my facebook link.


MY FACEBOOK LINK
m.facebook.com/ravichandran3538039

Do you want to consult  your horoscope through your Cell,Conduct my cell and whatsup no:
97 151 89 647


Mail id:
masterastroravi@gmail.com


My Account details:


P.Ravichandran
Acc no : 105201000004608
Ifs code: IOBA0001052
MICR CODE; 622020016.
BANK; IOB
BRANCH; REGUNATHAPURAM


Saturday, 12 March 2016

ராஜயோகங்கள்-ஒரு சிறப்பு பார்வை


                       ராஜயோகங்கள் - ஒரு சிறப்பு பார்வை

                                

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                                 ஒரு மனிதன் எவ்வளவுதான் அறிவுநிரம்பப பெற்று இருந்தாலும்,கெட்டிகாரனாக இருந்தாலும் அவனுக்கு குறைந்த அளவாவது  யோகம் என்பது இருக்க வேண்டும்.இதனைதான் நமது முன்னோர்கள் அழகாக ஒற்றைவரியில் எடுத்துகூறியிருப்பார்கள்.
அதாவது "மலையளவு உழைத்தாலும் கடுகளவு யோகமாவாது இருக்கவேண்டும் " என்பர்.நமது சோதிட சாத்திரத்தில் எண்ணற்ற ராஜயோகங்கள் உள்ளது.இதில் அன்றாட வாழ்வில் நடைமுறையில் அனுபவித்து பார்க்கின்ற அனுபவிக்கின்ற யோகங்களில் ஒன்றான "பஞ்சமகா யோகங்களை "பார்ப்போம்.

           செவ்வாய் பகவான் உச்சம்,ஆட்சம் போன்ற பலம்பெற்றால் #ருசக யோகம் ஆகும்.

         புதன் பகவான் பலம்பெறுமெனில் பத்ரயோகமும்,


        சுக்கிரன். பலம்பெற்றால் #மாளவீகாயோகம் தருகிறது.

         குரு பகவான் பலம்பெற்றால் ஹம்சயோகம் ஆகும்.

      சனி பகவான் பலம்பெறும்போது #சசயோகமும் கொடுக்கிறது.

         இந்த ஐந்தும் சிறந்த இராஜயோகங்களாகும்.இவை நற்பலனை அதன் தசைகளில் தரவேண்டுமெனில் அக்கிரகங்கள் பாதகாதிபதியாகவோ அல்லது ஆறு அல்லது எட்டாமாதிபதி போன்ற கெட்ட ஸ்தானங்கள் பெறக்கூடாது.மேலும் வக்ரம் மற்றும் அஸ்தமனம் பெறக்கூடாது.

                                   இவைமட்டுமல்லாமல் குருசந்திரயோகம்,கெஜகேசரியோகம்,குருமங்களயோகம்,பிருகுமங்கள யோகம்,சசிமங்கள யோகம்,தர்ம-கர்மாதிபதி யோகம்,கேந்திரகோணாதிபதியோகம்,நீசபங்க யோகம்,அஷ்டலெட்சுமி யோகம்,சந்திர அதியோகம்,இலக்கன அதியோகம், வஸூமத் யோகம்,புஷ்கலாயோகம்,கேஸரியோகம்,நரபதியோகம்,அமலயோகம்,சக்கரவர்த்தியோகம்,கர்மயோகம்,மிருகயோகம்,தூபயோகம்,வீணையோகம்,மனவிஷ்ணுயோகம்,மந்தாகினியோகம்,பூபயோகம்,பாசகயோகம்,சுக்கிரயோகம் மற்றும் கிரகமாறி யோகம் இதுபோன்ற எண்ணற்றயோகங்கள் உள்ளது.

          இந்த பதிவிலும் அடுத்து தொடர்ந்து வரும் பதிவுகளிலும் ஒவ்வொறு ராஜ யோகங்களையும் விரிவாக அலசி ஆராய்ந்து பார்ப்போம்.
இதில் முதலில் சாதாரன மனிதனையும் சாதனையாளன் ஆக்கும் முக்கியமான யோகங்களில் ஒன்றான " பரிவர்தனை யோகம் "-பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.
                                                                 


பரிவர்தனை யோகம் அல்லது கிரகமாறி யோகம்:-


              ஒரு வீட்டின் கிரகம் மற்றொரு வீட்டிலும்,மற்றொரு வீட்டின் கிரகம் முதல் வீட்டிலும் இடம் விட்டு இடம் மாறி உட்கார்ந்து கொள்வது இவ்விதயோகமாகும்.

            பழனிமலை முருகனின் அருள்பெற்ற சித்தர் போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் மருத்துவம் பற்றி புலிப்பாணி -500,என்ற நூலும்,சோதிடம் பற்றி புலிப்பாணி -300 எனும் நூலும் எழுதியுள்ளார்.
அவர் தனது புலிப்பாணி -300 என்ற நூலில் கிரகங்கள் தமக்குள் பரிமாறிக்கொள்வதாடல் உண்டாகும் யோகத்தை அழகாக கவிவடிவில் தந்து இருப்பார்.படித்து ருசியுங்கள்.

      "தானேன்ற கோள்களது மாறி நிற்க தரணிதனில் போர்விளங்கும் தனமுள்ளோன் ஊனேன்ற உடல்நாதன் பாம்புகூடில் உத்தமனாம் யோக்கியனாம் புனிதன் சேயன்  கோனென்ற குமரியுட பூசை செய்து கொற்றவனே குவலயத்தில் வாழ்ந்திருப்பான்  மானென்ற மறலி பயம் இல்லையில்லை மைந்தனே இடமறிந்து வழுத்துவாயே"

பாடலின் விளக்கம்:-

   நல்ல பரிவர்தனை யோகம் பெற்றவன் நற்புகழுடன்,செல்வத்துடனும் இருப்பான்.ஒழுக்கசீலனாகவும்,பெண்தெய்வ வழிபாடு உடையவனாக இருப்பான்..எமனுக்கே பயப்படாத ஆத்ம ஞானம் நிறைந்தவனாக இருப்பான்.இவை யாவும் கிரகங்கள் அமரும் இடத்தை உணர்ந்து பலன் உரைப்பாயாக.

பரிவர்தனை யோகத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1)ராஜயோக பரிவர்தனை

2)அவயோக
பரிவ

ர்தனை

3)விபரீத யோக பரிவர்தனை


மேற்கண்ட மூன்று வகையான பரிவர்தனை யோகத்திற்கான விளக்கங்களை பெறுவோம்.


இராஜயோக பரிவர்தனை:-


    திரிகோணதிபதிகள் (1,5,9) தங்களுக்குள் பரிவர்தனை பெறுவதும்,கேந்திராதிபதிகள்(1,4,7,10) ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும்,கேந்திர கோணாதிபதிகள் தங்களுக்குள் இடம் மாறிக்கொள்வதும் ஆகும்.

.இப்படி அமர்ந்த இவர்களுக்குள் தனலாபாதிபதி பரிமாறிக்கொண்டால் முதல் தரமான ராஜயோகமாகும்.

இதேபோல தன-பாக்கியாதிபதி பரிமாறிக்கொள்ளுதலும் மிகுந்த தனயோகத்தை அத்திசை காலங்களில் கொடுக்கும்.

பாக்கியாதிபதி எனப்படும் தர்மாதிபதியும்,ஜீவனத்தான் எனப்படும் கர்மாதிபதியும் பரிமாறிக்கொள்வது இதனை "தர்ம-கர்மாதிபதி யோகம்"என்பர்.

பாக்கியலாபாதிபதி பரிமாறிக்கொள்வது பாக்கியயோகம் நிரம்ப பெற்றவனாவான்.

லக்கனாதிபதியும்,புத்திரஸ்தானதிபதிகள்  பரிமாறிக்கொள்வதும்,நான்கு மற்றும் ஐந்தாமாதிபதி பரிமாறிட்கொள்வதும் நல்லது.இது ஒரு சிறந்த யோகமாகும்.நல்ல அறிவாற்றலையும்,கல்விநிலையையும் அளிக்கும்.


இதனை தொடர்ந்து அடுத்து நாம் பார்க்க இருப்பது
அவயோக பரிவர்தனை:-

    திரிகோணாதிபதிகளுடனும்,கேந்திராதிபதிகளுடனும் துர்ஸ்தானாதிபதிகளான ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாம் அதிபதிகள் பரிவர்தனை பெறுவது ஆகும்.

Thursday, 24 December 2015

கிரக பார்வைகளும் அதனால் மனிதனுக்கு ஏற்படும் மாற்றங்களும்

கிரக பார்வைகளும் -மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும்

                                                        

பத்ரகாளியம்மன் துணை !

         "சாதக கட்டத்தில் கிரகங்களின் பார்வையால் மானிட வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

                              ஒருவருடைய சாதக கட்டத்தில் பணிரெண்டு ராசிகளில் தந்தைக்காரகன் எனப்படும் சூரியனும் ,சூரிய பகவானின் மைந்தனான சனி பகவானும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.அவ்வாறு பார்த்துக்கொள்ளும் சாதக அமைப்பை பெற்றவர்களின் தந்தை, மகன் உறவுநிலை சரியாக அமையாது.அவர்களுக்கிடைய சிறிய வெறுப்புணர்வு இருக்கும்.சில நேரங்களில் சுபரின் பார்வை மற்றும் ஓன்பதாமிட அதிபதியின் வலு ஆகியவற்றைப்பொறுத்து மேற்கண்ட பலன் மாறுபடலாம்.

                             இதேபோல சனி பகவானை குரு பகவான் பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் சனியின் ஆதிக்க பண்பு குறைந்து  குருவின் ஆதிக்கப்பண்பை  பெற்றுவிடுவார்கள்.நல்ல குணங்களே மேலோங்கி இருக்கும்.

                                                                                 மாறாக சனி பகவான் ,                                    குரு பகவானை பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் குரு ஆதிக்கப்பண்பு குறைந்து சனி பகவானின் ஆதிக்கப்பண்பே மேலோங்கி நிற்கும்.இதேபோல குருவும் ,சனியும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளாமலே இருத்தல் நலம்.

                        அடுத்து "சனி பகவானும் ,செவ்வாய் பகவானும் சேர்ந்து ஒரு ஸ்தானத்தை பார்க்கும்போது அந்த ஸ்தானத்திற்குரிய ஆதிபத்திய பலனை மாற்றி பாதிக்கவைத்துவிடும்.
உதாரணமாக "சனியும் செவ்வாயும் சேர்ந்து நான்காமிடத்தை பார்க்கும்போது அவனை காம எண்ணம் மிகுந்தவனாக மாற்றிவிடும்.
இதேபோல இரண்டாமிடத்தில் பார்த்தால் அவனது பேச்சில் சுத்தம் இருக்காது.ஏழாமிட பார்வை மனைவி அமைவது கால தாமதமாக்கிவிடுவதோடு மனைவியின் குணநலத்தையே(காம எண்ணம் மிகுந்தவளாக) மாற்றிவிடும்.இப்படியாக பார்க்கப்படும் ஸ்தான மற்றும் பார்க்கப்படும் கிரக குணநலன்களையே மாற்றிவிடும்.

.                       இதேபோல சனியும் செவ்வாயும் சமசப்தமாகவும் பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.இவ்வாறு பார்த்துக்கொள்ளும்போது வாகன விபத்துக்களை தந்து இரத்தம் கசிந்து எலும்பு முறிவு போன்றவற்றை செவ்வாய் திசை சனி புத்தியிலோ அல்லது சனி திசை செவ்வாய் புத்தியிலோ நிகழ வாய்ப்புண்டு.எத்சரிக்கையாக இருத்தல் நலம்.

                            அடுத்து சனி பகவானும் ,புதன் பகவானும் பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.அவ்வாறு பார்த்துக்கொள்ளும் புதன் பகவான் தரக்கூடிய கணிதம்,எழுத்து ,கவிதை ,ஜோதிடம் போன்ற நுணுக்க விஷயங்களை தரவிடாமல் செய்துவிடுகிறது.
அதிலும் புதன் மற்றும் சனி பகவான் இருவரும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும்போது சாதகரை அலித்தன்மை உடையவராக ஆக்கிவிடுகிறது.

                                  குரு பகவானும்,சந்திர பகவானும் பார்த்துக்கொள்ளும்போது "குரு-சந்திர யோகத்தை தருகிறது.இந்த யோகம் தர இரு கிரகங்கள் சேர்ந்து இருக்கும் வீட்டின் அதிபதி மறைவு,நீசம் ,அஸ்தனம் போன்ற பலவீனமான அமைப்பை பெறக்கூடாது.மேலும் ராசியை பொறுத்து இரண்டில் ஒன்று பாதாகாதிபதியாகவோ ,மாரகாதிபதியாக இருக்ககூடாது.

                             அடுத்தபடியாக " காம கிரகம் மற்றும் ஆண்,பெண் இருபாலருக்கும் களஸ்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இருவரும் பார்த்துக்கொள்ளும்போது காம எண்ணம் மிகுதியாக்கிவிடுகிறது.

                             மனதுக்காரகன் எனப்படும் சந்திர பகவானை  ,சுக்கிர பகவான் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும்போது காமம் சம்பந்தப்பட்ட கற்பனை மிகுதியாக இருக்கும்.ஒரு சிலர் காம கதை ,கவிதை ,சினிமா மற்றும் பாடல்கள் அமைப்பதற்கும் இவையே காரணம்.சுக்கிரன் உச்சம் ஆட்சி போன்ற பலம் பெற்றிருக்க வேண்டும்.

                         ஒருவரது சாதகத்தில் சூரியனும்,சந்திரனும் சமசப்தமாக 180  பாகையில் சந்தித்துக்கொள்ளும்போது  "பொளர்ணமி யோகத்தை "வழங்குகிறது.இவர்கள் பொளர்ணமி நாளில் பிறந்திருப்பார்கள்.சில நேரங்களில் இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காம எண்ணம் குறைவாகவே பெற்றிருப்பார்கள்.

                            குரு பகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கே அதிக பலன்களை தருவார்.பொதுவாக இருக்கும் இடத்திற்கு அதிக அளவு நன்மைகளை செய்யமாட்டார்.அதிலும் குறிப்பாக குரு தனித்து நின்றால் அந்த இடத்தை பாதிப்பார் என்பதால்தான் "அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசம் என்பார்கள்".
சனி பகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கப்படும் இடத்தை அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்.

                                ராகு பகவான் ,கேது பகவான்  மற்றும் செவ்வாய் பகவான்,சனி பகவான், தேய்பிறைச்சந்திரன் மற்றும் பாவியோடு சேர்ந்த  புதன்  பகவான் போன்ற இயற்கை பாவிகளால் பார்க்கப்படும் அந்த ஸ்தானமும்  அதில் உள்ள கிரகங்களின் தன்மையை எதிர்மறையாக மாற்றி  கெடுதல் செய்ய வைத்துவிடுகிறார்கள்.

                      அதே நேரத்தில் இயற்கை சுபரான குரு பகவான்,சுக்கிர பகவான்,வளர்பிறைச்சந்திரன்,பாவியோடு சேராத புதன் பகவான் ஆகிய கிரகங்கள் பார்க்கப்படும் ஸ்தானமும் ,கிரகங்களும் பாவ கிரகங்களாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் பாதிப்பை இல்லாமலோ அல்லது குறைத்தோ அதன் பலனை மாற்றி நேர்மறையாக மாற்றிவிடுகிறார்கள்.

                         எனவேதான் மேலோட்டமாக ஒரு சோதிட பதிவை படித்துவிட்டு ஆகா எனது சாதகத்திலும் இதுபோன்ற அமைப்பு இருக்கிறதே என வருத்தப்படுவதோ அல்லது அவ்வாறு நடக்காமல் போகும்போது நீங்கள் கூறியது போல எனக்கு அந்த அமைப்பிருந்தும் கெடுதலான பலனை தரவில்லை ? என கேள்வி கேட்டு எதிர்வாதம் செய்வது தவறு.
சோதிடர்களாகிய நாங்கள் பதிவுகளை பதிவிடும்போது ஒரு சாதக பலன்கள் கூறுவதற்கான எல்லா கோணங்களையும் ஒரே பதிவில் விளக்கிவிட முடியாது.

                       ஒரு உதாரணத்தின் மூலமாக இவற்றை விளக்கிவிடுகிறேன்.சற்று பொறுமையாக மனதை இங்கு செலுத்தி படியுங்கள்.

                               ஒரு பெண்ணிற்கு கற்பு ஸ்தானமான நான்காமிடத்தில் "சனி பகவானும்,செவ்வாய் பகவானும் சேர்ந்திருக்கும்போது அந்த பெண் காம எண்ணம் மிகுந்தவளாக ,தவறு செய்யும் ஆசையுடையவளாக இருப்பாள் என நான்  எனது பதிவில் பதிந்திருப்பது "பெது பலன்".நான் கூறிய இந்த பொதுப்பலனை மட்டும் வைத்துக்கொண்டு பெண் பார்க்கும் படலத்தில் அப்ளை செய்து (பதிலீடு ) பார்த்தீர்கள் என்றால் ஒரு பெண்ணின் சாதகத்தில் நான்காமிடத்தில் சனி,செவ்வாய் சேர்ந்திருந்த பெண்ணை தேர்ந்தெடுக்காமல்  விட்டுவிடுவீர்கள்.

                               ஆனால் அந்த பெண்ணை விசாரித்து பார்க்கும்போது நல்ல குணநலவாதியாகவும்,நன்கு கல்வி புலமை பெற்றவளாகவும் இருப்பாள்.நான் கூறிய பொதுப்பலனை மட்டும் தேடியதால் ஒரு நல்ல பெண்ணை சந்தேகம் கொண்டு தவிர்த்துவிடும் துரதிஷ்ட நிலைக்கு ஆளாகிவிடுவாய்.

                                  ஏன் நாலில் "சனி ,செவ்வாய் சேர்ந்திருந்தும் அந்த மாதிரியான பலனை தராமல் போவதற்கு சோதிட சூட்சுமம் அறிந்த சோதிடர்களுக்கு மட்டுமே புரிந்த சில
"சிறப்பு காரணங்களும்" உள்ளது.


                              அது என்னவெனில் சேர்ந்திருக்கும் இரு கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் நீசம் போன்ற பலவீனம் அடைந்திருருக்கலாம் அல்லது இரு கிரகங்களும் சுப நட்சத்திர காலில் நின்றிருக்கலாம் அல்லது குரு பகவான் போன்ற சுப கிரகங்களின் பார்வையை பெற்றிருக்கலாம் அல்லது நான்காமாதிபதி ஆட்சி உச்சம் போன்ற பலமான அமைப்பை பெற்றிருக்கலாம்.இதுபோன்ற அமைப்புகளில் ஏதேனும் ஒரு அமைப்பை பெற்றிருந்தாலும்  அந்த பெண் நாலில் சனி செவ்வாய் சேர்ந்திருந்தாலும் நல்ல குணநலவாதியாக இருப்பாள்.

                       எனவே "அன்பார்ந்த சோதிட ஆர்வலர்களே மேலோட்டமாக நாங்கள் பதியும் பதிவுகளை படித்துவிட்டு தவறான முடிவுகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.தவறான முடிவினை தாங்களே எடுத்துக்கொண்டு பிறகு சோதிடமே தவறு என இன்றைய கற்ற இளைஞர்கள் எதிர்விவாதம் செய்யாதீர்கள்.தங்களைப்போன்றே  கல்லூரியில் படிக்கும் காலங்களில் சோதிடம் என வாதம் புரிந்தவன்.

                        எனது தாய் மாமவும்,சோதிடரும் ஆன மரியாதைக்குரிய கலியுகம்பிள்ளை அவர்கள் எனது சாதகத்தில் புதனும் ,குருவும்
உச்சம் ,ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் பிற்காலத்தில் பார் போற்றும் சோதிடராக வருவாய் எனவும் ,வாக்கு ஸ்தானத்தோடு ஞானக்காரகன் கேது பகவானின் தொடர்பு இருப்பதால் சோதிட சூட்சுமமும் பெறுவாய்.உனது வாக்கு பலிக்கும் என்பதை படிக்கும் காலம்வரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. சோதிடம் கற்று தருகிறேன் என அழைத்த போதெல்லாம் மறுத்து வந்தேன்.


                  எனக்கு திருமணமாகி ஒரு மாதம் கழித்து அவரே நோட்டு வாங்கிவந்து அதில் பிள்ளையார் சுழி போட வைத்து விநாயகர் சுலோகம் மனப்பாடம் செய்யவைத்து குரு தட்சனையாக பத்து ரூபாய் வாங்கி சென்றார்.அன்று மறுத்தவன் இன்று எனது முகநூலின் பக்கம்(Page) பகுதியில் மூன்று பக்கங்களை திறந்து உள்ளேன்.

         அதில் 1) சோதிடர் ரவிச்சந்திரன் -இந்த பக்கத்தில்(Page) எனது சோதிடம் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பதிவுகள் இருக்கும்.இதில் "கிரகங்கள் படுத்தும் பாடு " எனும் தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.விருப்பமுடையவர்கள் முகநூல் பக்கம் பகுதியில் தேடி லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.

           2) கவிதை நான் சொல்லவா -எனும் முகநூலில் பக்கம்(Page) பகுதியில் கவிதைகள் பல பதிந்து வருகிறேன்.விருப்பமுடையவர்கள் லைக் செய்து இணைந்திடுவீர்.

          3) "வாழ்வியல் சிந்தனைகள்"-என்ற பக்கம்(Page)  சோதிடம் அல்லாத வாழ்க்கைக்கு பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்.விருப்பமுடையவர்கள் லைக் செய்து இணைந்திடுங்கள்
இதுமட்டுமல்லாமல் முகநூல் குரூப்(Group) பகுதியில் "சோதிடர் ரவிச்சந்திரனின் சோதிடபாமாலை " என்ற குரூப்(group) ஆரம்பித்து "கற்றதையும்,பெற்றதையும் மற்றவர்களுக்கு பகிர்வோம்" எனும் கருத்தின் அடிப்படையில் சோதிட கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்.

                  இது மட்டுமல்லாமல் சோதிட ஆலோசனையை வீட்டிலிருந்தபடியே தங்களது சாதகங்களுக்கு போனின் மூலம் பலன்பெற விரும்புகிறவர்களுக்கு சோதிட பலன்களை கட்டண அடிப்படையில் பலன் கூறி வருகிறேன்.பலர் எனது வாட்ஸ்அப்  மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ அல்லது போனின் மூலமாகவோ தொடர்புகொண்டு பலன்பெற்று வருகிறார்கள்.ஆசிரிய பணியோடு இப்பணியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது."

                 படிக்கும் காலத்தில் சோதிட துறையை மறுத்தவன் என்னையறியாமலே இதில் என்னை நுழைய வைத்து இன்று முழுநேரம் சோதிடத்திற்கு செலவிட வைத்துவிட்டது.சோதிடம்  எவ்வளவு உண்மை  என்பதை எனது அனுபவத்திலிருந்து விளக்கவே மேற்கண்ட இன்றைய எனது நிலையை விளக்கினேன். படிக்க படிக்கவும் ,பலன் கூற கூறவும் அதன் சூட்சும விஷயங்கள் பரம்பொருளின் அருளால் எனக்கு புரிந்துவருகிறது.

                                 எனது ஒரே ஆசை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அறிவியல் அடிப்படையில் விளக்கி இது ஒரு அறிவியலின் ஒரு பிரிவு என புரிய வைக்கவேண்டும் என்பதே ஆகும்.
வாழ்க நிறைவான ஆனந்தத்துடன்.நன்றி.

                                                



                                                        அன்புடன்,
               சோதிடர்  
சோப..ரவிச்சந்திரன்
         M.SC,M.A,BEd
            ஆசிரியர்  &சோதிட ஆய்வாளர்,
  ஓம் சக்தி  ஆன்லைன்ஜோதிட ஆலோசனை மையம், 
        கறம்பக்குடி,
 புதுக்கோட்டை மாவட்டம்
           தமிழ்நாடு.



  செல் : 

    97 151 89 647                                        740 257 08 99
                                                          whatsup no                                                                  97 151 89 647


Email ; masterastroravi@gmail.com

My facebook  link
m.facebook.com/ravichandran3538039


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

.....,.   ......    .......     .......   ........  ......