Saturday, 22 August 2015

( 5 ) குழந்தைபாக்கியம் காலதாமதம் ஆவதற்கு சோதிட ரீதியான விரிவான விளக்கம்....

குழந்தை பாக்கியம் காலதாமதம் ஆவதற்கு சோதிட ரீதியான விளக்கம்,

                                                     

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

அனைவருக்கும் வணக்கம்,

                ஒரு தம்பதியர்களிடம் திருமணம் முடிந்தவுடன் உறவினர்களும்,நண்பர்களும் மற்றும் சமூகமும்  கேட்கும் அடுத்த கேள்வி வீட்டிலே ஏதாவது விசேஷமா? என சூசகமாக கேட்கும் கேள்வியிலே  அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதுதான் .

இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆனால் நேரடியாக கேட்டுவிடுவார்.என்னப்பா ஏதாவது டாக்டர்களிடம் காட்டினாயா இல்லை ஜாதகம் ஏதாவது பார்த்தீர்களா?என கேள்வி மேல் கேள்வி கேட்டு மனம் நோக செய்துவிடுவார்கள்.

குழந்தை பாக்கியம் சிலருக்கு மட்டும் தாமதமாவதற்கும்,ஒரு சிலருக்கு அந்த பாக்கியம் கிடைக்காமல் போவதற்கும் காரணத்தையும்,அதற்குரிய பரிகார பலனையும் அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


                                                      




புத்திர ஸ்தானமும்,அதன் அதிபதியும்

              புத்திர ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடத்தில் பாவிகள் என்றழைக்கப்படும் ராகு,கேது,சனி போன்ற கிரகங்கள் இருந்து சுபர் பார்வையற்று இருப்பினும்,
புத்திர ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்தாமிட அதிபதி நீசம்,அஸ்தமனம்,பகை பெற்று இருந்தாலும்,அல்லது 6,8,12 போன்ற  மறைவிடங்களில் இருந்தாலும்
மேலும் புத்திர ஸ்தானாதிபதி பாவர் ந்ட்சத்திர சாரம் பெற்று பாவர் சேர்க்கை மற்றும் பார்வை பெற்று 6,8,12 போன்ற மறைவிடங்களில் இருப்பின் இருப்பினும் புத்திர தோஷம் ஆகும்.

                                                          

 

புத்திரகாரகர் எனப்படும் ஸ்ரீகுரு பகவான்.

              ஸ்ரீ குரு பகவான் நீசம்,அஸ்தமனம்  மற்றும் பகை பெற்று  6,8,12 போன்ற மறைவிடங்களில் இருந்து பாவர் நட்சத்திர சாரமும்,சுபர் பார்வையற்று இருப்பினும் புத்திர தோஷமாகும்.


ஒன்பதாமிடம்

      புத்திரஸ்தானம் ஐந்திற்கு ஐந்தாமிடமாக ஒன்பதாம் இடம் திகழ்வதால் ஒன்பதாமிடத்தையும் நன்கு கவனிக்க வேண்டும்.


ஜோதிடர்களின் பங்கு

திருமண பொருத்தம் பார்க்கும் போது இருவருடைய ஜாதகப்படி பால் பொருத்தம் மற்றும் யோனி பொருத்தம் இருக்கிறதா? என பார்க்க வேண்டும

தம்பதியர் இருவருக்கும்  பால் உள்ள மரம் வந்து யோனி பொருத்தம் இருந்தாலும் ஜாதக கட்ட ரீதியாக இருவருக்கும் மேற்குறிப்பிட்டப்படி ஐந்தாமிடம் மற்றும் அதன் அதிபதி,புத்திரகாரகன் குரு ஆகியவர்களின் நிலையறிய வேண்டும்.

ஏனைய தோஷம் உள்ளவர்களுக்கு(செவ்வாய் தோஷம்,ராகு தோஷம்,சனி தோஷம்.....) தோஷம் உள்ளவர்களை இணைத்தாலும் ,
ஆனால் புத்திர தோஷம் உள்ள ஒரு ஆணின் ஜாதகத்திற்கு புத்திர தோஷம் இல்லாத பெண்ணின் ஜாதகப்படி குழந்தை இருக்க வாய்ப்பு உண்டு.

இருவருக்கும்  ஜாதக கட்ட ரீதியாக
புத்திர தோஷம் உள்ள தம்பதியர்களை இணைக்காமல் இருத்தலே நலம்.
இது ஜோதிடர்களின் தலையாய கடமையாகும்.இதுவரை புத்திர தோஷம் ஏற்பட அடிப்படையான காரணத்தை பகவானின் அருளாளும்,குருவருளாளும் எனக்கு தெரிந்த விஷயத்தின் அடிப்படையில் விளக்கினேன் .


                                                                               


இனி
புத்திர தோஷம் ஏற்பட

பல்வேறு ஜோதிட நூல்கள் கூறும் காரணங்கள்

மாந்தீரிக சக்கரவர்த்தி ஸ்ரீ குருவாயூரப்ப தாஸன் எழுதியது

                 1) சூரியன்,சுக்கிரன்,புதன் ஒன்று கூடி பெண்களுக்கு ஐந்தாம் இடத்தில் இருப்பின் கருச்சிதைவு.

                2 ) 7,8 க்கு உடையவர்கள் ஐந்தில் கூடினால் புத்திர சேதம் புத்திர தோஷம் ஏற்படுகிறது.இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

               3 ) லக்கினம் மீனமாகி 5-ம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசம் பெற்ற ஜாதகருக்கு முதல் தாரத்திற்கு குழந்தை இல்லை.ஆனால் இளைய தாரம் உண்டெண்றால் புத்திரபேறு ஏற்படலாம்.

           4) 1,5,9 -ல் சனி வலுத்து சுபர் பாராது இருப்பின் புத்திரதோஷம்.

            5) ஐந்தாம் அதிபன் பாவாதிபன் சனி உடன் கூடியிருப்பின் வீர்ய பலன் குறைந்து நீராகி புத்திரபேறு தடைபடும்.

          6) பெண் ஜாதகத்தில் ஜன்ம லக்கனத்திற்கு உரியவனும்,9-க்கு  உடையவனும் பரிவர்தனை பெற்றால் பிரசவத்தின்போது வயிற்றில் மகவுடனேயே தாயும் மரிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

          7)  பெண்ணுக்கு கடகம் லக்கினமாகி விருட்சகத்தில் சந்திரன் நீசனாகி இருந்தால் ஆண்குழந்தை சொற்பம்(அரிது).

         8) 5-ம் அதிபதியுடன் 6-ம் அதிபதி கூடியிருக்க இதில் ஆறாம் அதிபதி மட்டும் வலுத்திருந்தால்(சூரியர்,சந்திரர்களுக்கு மட்டும்தான் பொருந்துவார்) .இந்த மாதிரியாக கூடிய 5,6 அதிபதிகளை சுபர் யாரும் பார்க்காமல் இருந்தால் அவன் பகைவன் இட்ட சாபத்தால் மகப்பேறின்றி துன்புறுவான்.

          9) 4-ம் இடத்திலும்,12-ம் இடத்திலும் பாவிகள் இருக்க 5-ம் அதிபதியுடன் பாவிகள் கூட அல்லது சனி கூட பெற்ற தாய் இட்ட சாபத்தால் மகப்பெறு அற்று போகும்.

          10) ஒன்பதிலே பாவி இருக்க ஐந்தாம் இட அதிபதியுடன் சனி கூட திரிகோன ஸ்தானங்களில் ஒன்றில் குளிகன்(மாந்தி) இருக்க தந்தை செய்த பாவத்தால் மகவுகள் பிறக்காது.பிறநதாலும் அழிந்துவிடும்.

           11 ) தனுசு அல்லது மீன வீட்டில் சந்திரன் இருக்க ஐந்தாம் இடத்தில்  பாவிகள் இருக்க ,சந்திரனையும் அந்த பாவர்களையும் சுபர்கள் பாராது விட்டால் அவனுக்கு ஓளரஸ் மகவு இல்லை. ஓளரஸ் என்றால் தன் இந்திரியத்திற்கு பிறக்கும் குழந்தை என்பது பொருள்.

        மனைவி வழி தவறிச்சோரம் போய் பிறர் இந்திரியத்திற்கு குழந்தை பிறந்து அதை தகப்பன் தனது என்றே எண்ணி உண்மையை அறியாமல் தன் மகவாக எண்ணி உண்மையை அறியாமல் வளர்ப்பான்.அல்லது
இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்றார்போல் மாற்றான் இந்திரியத்தை ஊசி மூலம் செலுத்தி அதன்மூலம் பெற்ற குழந்தையாக இருக்கும்.


         12) லக்கனத்திற்கு ஐந்தாம் வீட்டை சனி,ராகு,கேது இவைகளில் ஒருவர் சந்திரனுக்கு கேந்திரங்களில் நின்று பார்ப்பாராகில் குழந்தை பிறந்து  இறந்து போகும்.

                                                         




கேரள ஜோதிடத்தில் உள்ளபடி புத்திரபாக்கியம்

            1)  ஐந்துக்குடையவர் புதன் வீட்டில் ஏகனாய்(தனித்து) நின்றால் குழந்தை பாக்கியம் இல்லை.கூட்டுகிரகம் இருந்தால் அல்லது பாரத்தால் மறுதாரம் செய்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறக்கும்.

             2)  குருவோடு சூரியன்  அவருக்கு ஏழில் குஸனும் ,சனியும் சேர அவனுக்கு புத்திரவம்சம் நிற்க வாய்ப்பு குறைவு.சந்திரனும் கூடியிருந்தால் தாய்க்கு தோஷம் ஆகும்.

          3 )  திருவாதிரை அல்லது அஸ்த நட்சத்திரலாவது புத்திரஸ்தானாதிபதி புத்திரர் இருக்க வாய்ப்பு குறைவு.

             4 ) மிருகசீரிடம்,புனர்பூச நட்சத்திரத்தில்5-ம் அதிபதி இருப்பின் வெகுகாலம் கழித்து புத்திரபாக்கியம் ஏற்படும்.

              5 ) புத்திஸ்தானாதிபதி புதனாக இருந்து சனி வீடு ஏறினாலும்,சனியாக இருந்து புதன் வீடு ஏறினாலும் புத்திரபாக்கியம் ஏற்பட வாய்ப்பில்லை.

                                                           




சில்லறைக்கோவை -298 -ம் பக்கம்

*************************************
             லக்கனம்,பஞ்சமஸ்தானம்,ஒன்பதிலும் சனி,ராகு,கேது,மாந்தி இருந்தால் முன் ஜன்மத்தில் செய்த பழிபாவத்தினாலும்,கருவழித்தனத்தாலும்,சர்ப்பத்தை கொன்ற பாவத்தினாலும் சந்தநி இல்லாமல் கலங்குவார்கள்.ஆனால் அதற்குரிய கர்ம சாந்தி செய்ய கீர்த்தி பிரகாசம் பொருந்திய பிள்ளை பிறக்க வாய்ப்பு ஏற்படும்.



மேலும் பல அனுபவகருத்துக்கள்

                  1) புத்திஸ்தானாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று அஸ்தங்கம் ஆனாலும் புத்திரதோஷம் ஏற்படும்.

                 2) 5-ல் ராகு,கேது,செவ்வாய்,சூரியன் மற்றும் சனி யாராவது ஒருவர் இருந்தாலும்,ஐந்தாம் வீடு சனி அல்லது புதன் வீடாகி அவ்வீட்டாதிபதி சனியுடன் இணைந்தாலும் புத்திரயோகம் இல்லை.

                  மேற்கண்ட காரணங்களால் புத்திரதோஷம் ஏற்படுகிறது..புத்திரதோஷங்களை பரிகாரங்களால் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
                                                         
(தங்களது சாதக பலன்,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

     அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
           M.Sc,M.A,BEd

                    சோதிட ஆராய்சியாளர்,
          முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
         வாழ்வியல் ஆலோசகர்
      ஓம் சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
       கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.தமிழ்நாடு.



                   அலைபேசி :9715189647

                   அலைபேசி : 
  740 257 08 99



                   எனது வாட்ஸ்அப் எண்

                               97 151 89 64

Email ; masterastroravi@gmail.com
....






Tuesday, 28 July 2015

( 4 ) உங்களது ஜாதகப்படி உங்களுக்கு புத்திரபாக்கியம் உண்டா?!....நீண்ட தொடர்


உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா ?-நீண்ட தொடர்


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

           "செல்வம் எனறு செல்லப்படும் செல்வம் அனைத்தையும் படைத்து பல்லோறுடன் உண்டு மகிழும் செல்வந்தராயினும் சின்னஞ்சிறு கைகளை நீட்டியும் ,குறுகுறுவென நடந்தும் ,தட்டில் இட்ட சோற்றை தரையில் கொட்டியும்,கைகளால் பிசைந்தும், நெய்யிட்ட சோற்றை உடம்பின்கண் படச்செய்தும்,இன்பமயக்கத்தில் ஆழச்செய்யும் புதல்வரை பெறாதவர்க்குப் பயனால் முடிக்கப்படும் பொருள் யாதுமில்லை என்பதால் பிள்ளைப்பேறு எவ்வளவு முதன்மையானது.

ஓருவன் பெறும் செல்வங்களுள் நன்மக்களை பெறுதலே சிறப்பானது.
பிள்ளையில்லாத பாக்கியம் எவ்வளவு பெற்றாலும் பிள்ளை பாக்கியத்திற்கு நிகராகது.


இக்கருத்தை மக்களின் புறவாழ்வுபற்றி கூறும் "புறநானூறு"
அழகாக எடுத்துரைக்கிறது.


""படைப்புப்பல படைத்துப் பலரோடுண்ணும் உடைப்பெருஞ்செல்வராயினும் மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்துத் மயங்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறையில்லைத் தாம் வாழும் நாளே""



                                                            




புத்திர ஸ்தானம் என்பது:

***************************
ஓரு மனிதனுக்கு புத்திர ஸ்தானம் என்பது அவனது ஜாதகத்தில் உள்ள பணிரெண்டு கட்டங்களில் ஐந்தாவது கட்டமாகும்.இதே கட்டம் தான் பூர்வபூண்ணியஸ்தானமுமாகும்.இதிலிருந்து முற்பிறப்பில் நல்ல புண்ணிய காரியங்களில் ஈடுபட்டிருந்தால் இப்பிறப்பில் நல்ல புத்திரம் கிடைக்கும் என்பதனை சூட்சுமமாக தெரிவிக்கும் பொருட்டே வைத்துள்ளார்கள்.

ஐந்தாமிட அதிபதியை புத்திரஸ்தானாதிபதி என்போம்.

பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு
பகாவானை புத்திரகாரகன்  என அழைக்கப்படுகிறது.
பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் இடத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

                                                                   




புத்திரபாக்கியம் பற்றி அறிய நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை:

***********************************
             5 ம் இடம் ,9 ம் இடம் மற்றும் அதன் இரு அதிபதிகள் மேலும் நவகோள்களில் புத்திரகாரகன் என அழைக்கப்படும் குரு பகவான்
மேற்கண்ட இவர்களின் நிலையை கவனிக்கவேண்டும்.



புத்திரபாக்கியம் அமைய எனது அனுபவ ரீதியான  கிரக நிலை விளக்க:-

1)  புத்திர ஸ்தானாதிபதி சுப நட்சத்திர  சாரம் பெற்று  ஆட்சி,உச்சம்,கேந்திரம்(1,4,7,10),கோணம்(1,5,9),மற்றும்  நட்பு பெற்று
சுபர் பார்வை பெற வேண்டும்.மறைவு ஸ்தானங்களில் (6,8,12)  இடம் பெற கூடாது.
இங்கு சுபர் என குறிப்பிடபடுவது  குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன்,பாவியோடு சேராத புதன்.


2)  புத்திரஸ்தானத்தில் அசயர்களான ராகு,கேது,சனி(செவ்வாய் தவிர ஏனெனில் காம காரகன் என்பதால்)  போன்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம்.

3)  புத்திரகாரகன் குரு நீசம் அஸ்தமனம்,பகை பெறாமல்  பலம் பெற்று (ஆட்சி,உச்சம்,கேந்திரகோணம்)  மறைவு ஸ்தனங்களாகிய 6,8,12 இடம்
பெறாமல் சுப சாரமும்,பார்வையும் பெற்றிருக்கவேண்டும்.


4)  ஐந்துக்கு ஜந்தாமிடமாக ஒன்பதாமிடம்  அமைவதால்
பாக்கிய ஸ்தானத்தையும் கவனித்தல் நலம்.


5) ராசிக்கு ஐந்தாமிடத்தையும் மேற்கண்ட அமைப்புபடி உள்ளதா எனவும் கவனிக்க வேண்டும்


மேற்கண்ட அடிப்படையில் கிரகங்கள் இருப்பின் அவர்களுக்கு பார்போற்றும் புத்திரன் அமைவான்.

                                                            




குழந்தை பாக்கியம் அமைய நான் கற்ற பல்வேறு ஜோதிடநூல்களின் கருத்து;-

          1)  கடக லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு  குரு லக்கனத்தில் உச்சம் பெற்று இருந்தால் சத்புத்திர பாக்கியம் ஏற்படும்.

           2)  குரு பகவான் 9 -ல் ஆட்சி பெற்றிருந்தால் சத்புத்திர பாக்கியம் ஏற்படும்.

       3 )  குரு பகவான் 2 அல்லது 11 -ல் இருப்பின் புத்திர பாக்கியம் ஏற்படும்.

       4 )  குருவுடன் சந்திரன் இணைந்து  லக்கினம் 9  அல்லது 11 ல் இருந்தால் ஜாதகருக்கு சுட்டிதனமுள்ள புத்திசாலிதனமான குழந்தை பிறக்கும்.

      5)   குரு பகவான் துலாத்தில்  சுக்கிரனுடன்  இருப்பின் ஆண்,பெண் குழந்தைகள் பிறக்கும்.

   6)  செவ்வாய் 11-ல் சுக்கிரனுடன் இணைந்திருப்பின் ஜாதகருக்கு ஆண் பெண் வாரிசு ஏற்படும்.

7)  செவ்வாய்  4-ல் சுக்கிரனுடன் இணைந்து காணப்படின் தாமத குழந்தை பாக்கியம் ஏற்படும்.

8 ) குருவும், செவ்வாயும் இணைந்து 9  அல்லது  10- ல் இருப்பின் ஆண் குழந்தைபாக்கியம் ஏற்படும்.

9 )  குருவும்,செவ்வாயும் இணைந்து
இரண்டு அல்லது நான்கில் இருந்தாலும புத்திரபாக்கியம் ஏற்படும்..குருவும்,ஜந்தாம் வீட்டிற்குரிய கோளும் சமசப்தமாக பார்த்துக்கொண்டாலும் புத்திர பாக்கியம் உண்டு.


10 ) குரு நின்ற இடத்திலிருந்து  5- மிடத்தில் சுபகோள் நின்றாலும் புத்திரபாக்கியம் உண்டு.

                                                                


அதிக புத்திர பாக்கியம்  ஏற்பட
++++++++++++++++++++++++,+,
1) ஐந்தாமாதிபதியும்,ஒன்பதாமாதிபதியும் சுபஸ்தானம் பெற்று கேந்திர,திரிகோணம் பெற்று சுபகிரகங்களால் பார்க்கப்பட்டால் வெகு புத்திரர்கள் உண்டு.


2 )கன்னி லக்கனமாகி ஐந்தாமிடத்தில் செவ்வாய் உச்சம் பெற்றால்  ஜந்து குழந்தை

Sunday, 12 July 2015

( 3 ) மனைவி அமைவதெல்லாம்.....

மனைவி அமைவதெல்லாம் .........


.ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                                            கிரேக்க தத்துவஞானி சாக்கரடீஸிடம் திருமணம் செய்துகொள்வது நல்லதா?திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லதா? என குசும்புக்கார இளைஞன் கேட்க அவர் "இந்த இரண்டில் எதை செய்தாலும் பின்னால் நீ வருத்தப்படுவாய் தம்பி"
என பதில் கூறினாராம்.


                                         ஆம்  அன்பர்களே திருமணம் செய்தவர்களிடம் கேட்டால் அவர்கள் அந்த வட்டத்திலிருந்து வெளிய வரவே விரும்புகிறார்கள்.திருமணம்
செய்யாதவர்கள் அதை பற்றிய பலவித கற்பனை நிலையோடு அந்த
வட்டத்திற்குள் நுழைய ஆசைபடுகிறார்கள்.


                                       இந்த இளைஞர்களின் உன்னதநிலையை பயன்படுத்தி கவிஞர்களும்,கலைஞர்களும் கற்பனைநிலையில் மிதக்கசெய்துவிடுகிறார்கள்.

                            ""வெறும் காமம் மட்டுமே போதும் என்றால் ஓரு விலைமகளிர் போதும்,
வெறும் அன்புமட்டும் போதுமெனில்
ஓரு நாயை வளர்த்தாலே பெற்றுவிட முடியும்
எங்கே காமமும் காதலும் சரிபாதியாக இணைசேருகிறதோ அங்கேதான் நல்ல தாம்பத்யம் மலரும்"என கவிபேரரசுவின் கவிவரிகளை உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன்.


                                 ஓரு ஜாதகத்தில் வாழ்வின் சமபாதியாக கருதப்படும் மனைவி ஸ்தானத்தை பற்றி தெரிந்துகொள்ள
லக்கனத்திலிருந்து இரண்டாமிடம்,ஏழாமிடம் மற்றும் ஆணாக இருப்பின
களஸ்திரகாரகன் சுக்கிரன் ,பெண்ணாக இருப்பின் செவ்வாய் நிலைகளை பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.


                            

நல்ல மனைவி அமைவது எப்படி;.................................................

                       ஓரு மனிதனின் வாழ்வில் மனைவி என்பவள்"" ஆலோசனை கூறுவதில் மந்திரிபோலவும்,   உணவுபரிமாறுவதில் தாயைபோலவும்,   படுக்கையில் வேசியைப்போலவும்"இருக்கவேண்டும்.எனவே  நல்ல மனைவி அமைவது என்பது அவரவர்ஜாதகத்தில் உள்ளபடியே அமைகிறது.


                             நல்ல மனைவி அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும், ஏழாமிட அதிபதியும் கேந்திரம்(1,4,7,10)  மற்றும் கோணமேறி(1,5,9) ஆட்சி,உச்சம் பெற்று பாவிகள் பார்வையற்று சுப நட்சத்திரசாரம் பெற வேண்டும்.


( இதில் சில விதிவிலக்கு: மீனம்,மிதுனம்,கன்னி மற்றும் தனுசு ராசிகளான உபயராசிகளில் ஏழாம் அதிபதி  ஆட்சி,உச்சம் பெறாமல் வேறு மாதிரியான சூட்சும வலு பெறுதல் சுகம்.ஏனெனில் இந்ராசிகாரர்களுக்கு பாதகாதிபதியாகவும், அதேநேரத்தில்கேந்திராதிபத்திய தோஷமும் பெற்றுவிடுகிறது.உதாரணமாகமீன ராசிக்கு ஏழாமிடத்தில் புதன்
ஆட்சி உச்சம் பெற்றாலும் திருமணவாழ்வில் சில பாதிப்பு இருக்கவே செய்கிறது) )


                             அதேபோல் இரண்டாமிடத்திலும்,ஏழாமிடத்திலும் மற்றும் சுக்கிரனுடனும் பாவிகள் இணைவு,சேர்க்கை அற்று இருக்க வேண்டும்.பெண்ணாக இருப்பின் செவ்வாயும்பாவிகள் சேர்க்கை அற்றும் இருக்கவேண்டும்.



                      


                            அழகுடைய மனைவி  அமைய


                                      ஓருவர்  எவ்வளவுதான் அழகற்றவராகவும் இருந்தாலும்
தனக்கு வரும் மனைவி /கணவன் மட்டும் அழகுடையவராக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.


                               அழகற்றவர்களுக்கு அழகான மனைவி அமைவதும்,அழகானவர்களுக்கு அழகற்ற மனைவி அமைவதும் ஜாதகத்தில்உள்ளபடியே நடக்கிறது.


                                    ஒருவரின் முகதோற்றம், அழகு,நிறம்  இவற்றை நிர்ணயிப்பது லக்கனம்,ராசி மற்றும் இரண்டாம்
பாவம்  அதில்  இருக்கும் கிரகம், அதன் அதிபதி  அந்த இடத்தை பார்க்கும்  கிரகம்.  8-ம் பாவத்தில் ஆட்சி,உச்சம் பெற்றகிரகம் ,8-ம்  அதிபதி ஆட்சி,உச்சம்
பெற்றாலும்,எட்டாமிடத்தை ஆட்சி,உச்சம் பெற்ற கிரகம் பார்த்தாலும்அழகான மனைவி அமைவாள்.


                                      ஏழாம் வீடு சுப கிரகத்தின் வீடாகவும்,1,4,7,10,5,9  வீடுகளில் சுப கிரகமாகிய சுக்கிரன்,புதன்,குரு,வளர்பிறை சந்திரன்  அமர்ந்து காணப்பட்டால் அழகுடைய மனைவிஅமைவாள்.                         

அழகற்ற மனைவி அமையக்காரணம்;


சுக்கிரனுடன் பாவ கிரகம் சேர்ந்தாலும்,அவை நிற்கும் ராசிக்கு
ஏழாமிடத்தில் பாவிகள் நின்றாலும்
அழகற்ற மனைவி அமைவாள்.


அயல்நாட்டு பிரஜையை திருமணம்
செய்யும் யோகம்
+++++++++++++++++++++++++++++


  மூன்றாம் அதிபதி லக்கனத்திற்கு
6 அல்லது 8 அல்லது அதன் அதிபதிகளுடன் இணைந்தாலும்,6,8-ம் பாவங்களை பார்த்தாலும்
அயல்நாட்டு பிரஜையை திருமணம்
செய்துகொள்ளும் யோகமாகும்.
           
                        




திருமணத்திற்கு பிறகு அயல்நாடு

செல்லும் யோகம்:

 

திருமணத்திற்கு பிறகு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்பட காரணம்2-ம் அதிபதி  11- மிடத்திலும், 11 ம் அதிபதி 2-ல் இருந்தாலும்,8-ம் அதிபதி 2-ல் இருந்தாலும் ,பார்த்தாலும்எட்டாம்  அதிபதி  ஏழில் இருந்தாலும்,பார்த்தாலும்  ஏற்படுகிறது.


                   



ஊனமுற்ற மனைவி வாழ்க்கை துணையாக காரணம்


   ஓரு பெண்  அல்லது ஆண் ஜாதகத்தில் 5,7,9  ம் வீடுகளில் சூரியன்,சுக்கிரன் அமர்ந்து காணப்பட்டாலும் அல்லது சுக்கிரன்,செவ்வாய் அமர்ந்து காணப்பட்டாலும் வாழ்க்கை துணை ஊனமாக அமைய வாய்ப்பு அமைகிறது.



செல்வந்தர் வீட்டுப்பெண் அல்லது ஏழை வீட்டுப்பெண் மருமகளாக வரக்காரணம்:

                               ஏழாம் வீட்டு அதிபதி  மிகவும் பலம் பெற்று காணப்பட்டால் தன்னிலும்அதிக செல்வாக்கு பணமுடைய பெண் மனைவியாக அமைவாள்.அதேநேரத்தில் ஏழாம் வீட்டு அதிபதிபலம் குறைந்து காணப்பட்டால்தனக்கு அமையும் மனைவியானவள்தன்னை விட கீழ் நிலையில் உள்ளவளாகவும்,அதேநேரத்தில் ஏழையாகவும் இருப்பாள்.


                



விதவையை திருமணம் செய்யும் யோகம்

ஏழில் செவ்வாய்,சுக்கிரன் அமர்ந்து
காணப்பட்டாலும்,ஏழாம் வீட்டு அதிபதி சனியாகி 6,8,12 ல் அமர்ந்தாலும் விதவையையோ அல்லது பிறரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மனைவியாக
அமைவாள்.



கால தாமத திருமணம் யாருக்கு?

           லக்கனம் ,ராசி ,இரண்டாமிடம் மற்றும் அதன் அதிபதியுடனும்,களஸ்திரகாரகன்
சுக்கிரன் உடனும் அசயர்களான
ராகு,கேது,சனி ,செவ்வாய் கூடியிருப்பின் கால தாமத திருமணம் ஏற்பட வாய்ப்புண்டு.


                        


தார தோஷம்;



     "சட்டமாய் சனி ஏழாம் வீட்டிலிருப்பின் 

தாரம் இரண்டு தப்பாமல் செய்யுவான்""


"சுக்கிரன்தான் கேந்திரத்தில்

இருந்தாலப்பா சொல்லுகிறேன்

ஜாதகருக்கு தாரம் இரண்டு"

சனி இரண்டாம் வீட்டிலும்,ராகு ஏழாம் வீட்டிலும் இருந்தாலும் தார தோஷம் ஏற்படவாய்ப்புண்டு.
ஏழாம் வீட்டு அதிபதி பலமிழந்து
லக்கனாதிபதியும்,லாபாதிபதியும்
பலம் பெற்றால் தார தோஷம் ஏற்பட
வாய்ப்புண்டு.


ஏழாம் வீட்டு அதிபதி தனது வீட்டில் தீயகோளுடன் சேர்ந்து இருந்தாலும்  அல்லது இரண்டாம் வீட்டில் அமர்ந்தாலும் தார தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு.

சுக்கிரன் பதினொன்றாம் வீட்டிலோ அல்லது நீசம் பெற்றோ இருந்து
ஏழாம் வீட்டின் அதிபதி 6,8,12 ஆம் இருந்தாலும் தார தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.


பதினொன்றாம் வீட்டு அதிபதி  ஏழாம் வீட்டிலோ  அல்லது இரண்டாம் வீட்டிலோ இருப்பின் தார தோஷமோ அல்லது இரண்டு குடும்ப வாய்ப்பு ஏற்படும்.

                       



தார தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரம்

தார தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருப்பின்  வாழை மரத்துக்கு தாலி கட்டி வெட்டி போடுவார்கள். இழ்வாறு செய்வதன் மூலம் தார தோஷம் நீங்க வாய்ப்பு இருப்பதாக நமது முன்னோர்களால் அருளப்பட்ட
முறையாகும்.இருப்பினும் இம்முறையால் ஓரு மரத்தை வெட்டும் நிலை ஏற்படுவதால்
இம்முறை தவிர்த்து ஓரு பெண் பதுமைக்கு (பொம்மை) ஐதீக முறைப்படி தாலி கட்டி பிறகு அதனை நீரில் கரைத்து விடலாம்.
பெண்ணிற்கு இவ்விதமான தார தோஷம் இருப்பின் ஓரு சுமங்கலி பெண்ணை தாலி கட்டி பிறகு அவர்கள் கையாலை கழட்டி விடச்செய்வதன் இத்தோஷம் விலக வாய்ப்புண்டு.அல்லது
திருமணத்தன்று கட்டிய தாலியை அம்பாளுக்கு சாத்திவிடல்.



கட்டாய திருமணம்

  சிலருக்கு திருமணத்தின் விருப்பம் இல்லாத நிலையில் இவ்வித திருமணம் ஏற்பட வாய்ம்புண்டு.

  மேஷம்,மகரம்,கும்பம்,விருச்சிகம்
ஏழாம் பாவமாகி,சுக்கிரனுக்கு பாவ கிரகத்தின் பார்வையும்,இரண்டாமிடத்தில் பாவகிரகங்கள் இருப்பின் கட்டாய திருமணம் ஏற்பட
வாய்ப்புண்டு.



திருமணம் அருகிலா அல்லது தொலைவிலா.

லக்கனத்திற்கு ஏழாம்  ராசி  சர ராசியாக இருந்து ஏழாம் அதிபதி  மேற்கண்ட ராசிகளில் ஏதாவது ஓன்றில் இருந்தால் தனக்கு வரும் மனைவி தொலைவிலும்,          ஏழாம்  ராசி ஸ்திர ராசியாக இருந்து
ஏழாம் அதிபதி மேற்கண்ட ராசிகளில்
ஒன்றில் இருந்தால் உள்ளூரிலோ அல்லது வெகு அருகாமையில் திருமணம் ஏற்படும்.


சர ராசி:மேஷம்,கடகம்,துலாம்,மகரம்.
ஸ்திர ராசி,:ரிஷபம்,சிம்மம்,விருட்சகம்,கும்பம்.



                                                        



திருமண யோகம் இல்லாத ஜாதகம்

***********************************
லக்கனத்திற்கும்,ராசிக்கும் ஏழாம் வீடு எந்த கிரகத்தின் பார்வையின்றியும்,லக்கனாதிபதியும்,ஏழாம் பாவாதிபதியும் லக்கனத்திற்கு 6,8,12 ல் அமர்ந்தாலும்,


    சுக்கிரனும்,சந்திரனும் ஒரு ராசியில் அமர்ந்து அதற்கு ஏழாம் ராசியில் சனி,செவ்வாயும் காணப்பட்டாலும் மேற்கண்ட அமைப்புடையோர் திருமணம் செய்துகொள்வதில்லை.



காம சுகம் தரும் காம திரிகோணம்

************************************
3,7.11 ஆகிய மூன்றும் காம திரிகோணமாகும்
மூன்றாம் பாவம் காம ஆசையை தூண்டும் பாவமாகும்.இவை 7-ம் பாவத்திற்கு 9-ம் இடமாகும்.இவை 1,4,7 ம் பாவத்துடன் தொடர்புகொள்ளும் போது காம எண்ணத்தை தூண்டி தவறாக நடக்க வாய்ப்பிருக்கிறது.

ஏழாம் இடம் 


          இவை உடல் உறவு ஆசையை தூண்டுமிடம் ஆகும்.இதில் சந்திரனும்,சுக்கிரனும் 180 டிகிரியில் சம சப்தம பார்வை காம எண்ணத்தை கூட்டும்.இதேபோல் சந்திரன்,சனி,செவ்வாய்  ஏழில் இருப்பினும் தவறான எண்ணம் ஏற்படும் மன ஒருமைப்பாடு அவசியமாகும்.


11 ம் இடம்


     இவை ஏழாமிடத்திற்கு ஐந்தாமிடம் .இவை துணைவரை இழக்கும் நிலை,இரண்டாம் திருமணம்,பிரிவினை ,விவாகரத்து மற்றும் ஒருவரின் எண்ணம் நிறைவேறும் நிலை.இந்த பாவம் பாதிக்கப்பட்டால் திருமண வாழ்வு சிறப்படையாதுஂ


மேலும் சந்திரன் உடல் உறவு எண்ணத்தை உண்டாக்கும் கிரகம்
பணிரெண்டாம் இடம் பெண் இன்பம்,உடல் உறவு சுகம் தரும் பாவம் ஆகும்.


5-ம் பாவம் காதல் ,பிற பெண்களின் தொடர்பு


4-ம் பொதுமகளிர் தொடர்பு,கற்பு நிலை
       4 ம் பாவம் கெட்டு பாவிகள் தொடர்பு கற்புநிலை பாதிக்க வாய்ப்பு.மேலும் சந்திரன்,சுக்கிரன்
பத்து பாகைக்குள் இணைவு தவறான
பெண் தொடர்பு ஆசை.


                             


அன்புடன்

சோதிடர்சோ.ப.ரவிச்சந்திரன்

M.Sc,MA,BEd சோதிட ஆராய்சியாளர்,

வாழ்வியல் ஆலோசகர்,

முதுநிலை வேதியியல் ஆசிரியர்

ஓம் சக்தி சோதிட ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.



தொடர்புக்கு
CELL

97 151 89 647

740 257 08 99

WHATSUP NO
97 151 89 647


(போன் வழியாக தங்களது சாதக பலன், ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் மற்றும் விவாக பொருத்தம் போன்ற விவரங்களை போன் வழியாக எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.
whatsup ; 9715189647 )

Sunday, 5 July 2015

உங்கள் ஜாதகப்படி அரசு வேலை கிடைக்குமா?


உங்கள் சாதகப்படி அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டா ?

                                              
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                               1)     பத்தாம் அதிபதி எந்த கிரகத்தில் சாரத்தின் அமர்ந்துள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்.


                               2)  அரசு கிரகமாகி சூரியன் அல்லது சந்திரனின் நிலையையும்  கவனிக்க வேண்டும்.


                                 3)      பத்தாம் அதிபதி சூரியன் அல்லது சந்திரனின் நட்சத்திர சாரத்தில் இருப்பது.சூரியன் அல்லது சந்திரன் பத்தாம் அதிபதியுடன் சம்பந்தம் பெறுவது.


                               4)  பத்தாம் இடத்தில் சூரியன் அல்லது சந்திரன் ஆட்சி ,உச்சம் பெறுவதுஒன்பது அல்லது பத்தாம் இடத்தில்
ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் இருப்பது.


                             5)   ஒன்பது அல்லது பத்தாம் அதிபதி பரிவர்தனை அல்லது தொடர்புகொண்டு தர்ம-கர்மாதிபதி
யோகம் பெறுவது.
யோகம் பெறுவது.


                             6)    பத்தாம் அதிபதி செவ்வாய் சாரத்தில் இருப்பது.


                             7)   சூரியன்,புதனுடன் சேர்ந்து புத ஆதித்யயோகம் பெற்று சுபர் பார்வை பெறுவது.குரு மற்றும் புதன் வலுப்பெற்று பத்தாம் இடத்தைடன் தொடர்பு கொள்வது.


                          8)    பத்தாம் அதிபதி சனியின் சாரம் பெறுவது -இவை அரசு துறையில்
கடைநிலை ஊழியர் வேலைதான் கிடைக்கும்.


                  9) பொதுவாக  சிம்மமும் அதன் அதிபதியான சூரியன் ஆகிய இரண்டும் பலம் பெற்று வளர்பிறை சந்திரன்,குரு , சுக்கிரன் தொடர்பு பெற்று அதன் திசை  நடைபெறும் காலங்களில் அரசாங்க வேலை பெறும் யோகத்தை அடைவ

                                மேற்கூறிய அமைப்புகளில் ஏதாவதுஒன்று இருந்தால் அரசு துறையில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

னியார் துறையில் வேலை கிடைக்க:


                          1)     ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலையை பொறுத்து சுய தொழில் அமைகிறது. புதன் பலம் பெற்று 2-7-10-11 ஆம் இடங்களில் இருந்தால் சுயதொழில்வெற்றிகரமாக அமையும்.


                           2)    சூரியன் மூலதிரிகோண  ராசிகளாகிய 1,5,9 ல் பலம் பெற்றுஇருந்தால் அரசு கடன் உதவி பெற்று சுயதொழில் துவங்கும் வாய்ப்பு உண்டு அல்லது உறபத்தி பொருட்களை அரசு நிறுவனங்களுக்கு விற்று அதனால் பயன் அடையும் யோகம் உண்டு.


                          3)     சனி  கிரகம் ஆட்சி,உச்சம் ,மூலதிரிகோணம் மற்றும் கேந்திரம் முதலான ஸ்தான பலம் பெற்றால்சனியின் பலத்திற்கு ஏற்ப சிறிய தொழில் முதல் பெரிய தொழிற்சாலை வரை சொந்தத்தில் நடக்கும் வாய்ப்பு உண்டு.


                          4)    ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று  1,4,9,11 ஆம் இடங்களில் இருந்தாலும், வாழ்நாள் முழுவதும்நேர்மையான  நாணயமான தொழில்செய்து பொருள் ஈட்ட முடியும்.       


நன்றி!


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)                                                      


அன்புடன்
     சோதிடர் ரவிச்சந்திரன

M.sc,MA,BEd(Teacher)

ஓம்சக்தி ஜோதிட நிலையம்,

கரம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்


அலைபேசி:      9715189647                                       740 257 08 99

WHATSUP ; 97 151 89 647



Saturday, 4 July 2015

( 2 ) உங்களுடைய ஜாதகத்தில் தனயோகம் உண்டா?

                                                   

உங்களுடைய சாதகத்தில் தனயோகம் உண்டா ?


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!


                            1)      இரண்டாம் அதிபதி ஆட்சி,உச்சம் ,மூலதிரிகோணம் மற்றும் கேந்திரம்
பெற்று ,சுபர் நட்சத்திர சாரம் பெற்று
சுபர் பார்வை பெற வேண்டும்.
பெற்று ,சுபர் நட்சத்திர சாரம் பெற்று சுபர் பார்வை பெற வேண்டும


                          2)       2-க்கு உடைய கோள் 5-ம் வீட்டிலோ,5-க்கு உடைய கோள் 2-ம் வீட்டிலோ பரிவர்தனைபெறுறு இருந்தால்இதேபோல் 2-11 க்குடைய கோள் பரிவர்தனை பெற்றாலும்


                          3)               2-11க்குடைய கோள் 5 அல்லது 9 க்குடைய கோள்களுடன் சேர்க்கை பெற்றால்2- ம் வீட்டுக்கோளுடன் குரு,புதன் சேரில் தனயோகம் உண்டு.


                         4)     2,11 குடைய கோள்கள் லக்கனத்தில் இருப்பது
                            சந்திரன் 7-க்குடைய  கோளாகி 2-ம் வீட்டில இருப்பின்

                  5) ஜாதகத்தில் தனாதிபதியான இரண்டாம் அதிபதியும்,பாக்கியாதிபதியான ஒன்பதாமிட அதிபதியும் மற்றும் லாபாதிபதியான பதினொன்றாம் இட அதிபதி பதியும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு லக்கனத்திலோஅல்லது 2,9 மற்றும் 11 ஆம் இடங்களில் நின்று இயற்கை சுப கிரகங்கள் பார்வையைப் பெற்று மற்றும் தனகாரகன் குருபகவானும் பலமான நிலையில் நின்று, மேற்கண்ட ஸ்தானங்களில் (1,2,9,11 ) ஆம் இடங்களின் திசை நடப்பில் இருக்கும் காலங்களில் மகாதனம் சேரும் யோகம் சாதகருக்கு ஏற்படும்.


சில விதிவிலக்குகள்;



                                 தனாதிபதியும்,லாபதிபதியும் பரிவர்தனை தனயோகத்தை தந்தாலும் சில லக்கனங்களுக்கு மாரகாதிபதி மற்றும் பாதகாதிபதி
ஆகிவிடுவதால் சில கெடுதல்களை செய்து விடுகிறதுஂ
உதாரணமாக தூலாம் லக்கனத்தை பொறுத்த வரை சர ராசியாக இருப்பதால் 2- மிடம் மாரகஸ்தானம்,11-மிடமு பாதகஸ்தானம் .எனவே  இவ்விரு கிரகங்களும் பரிவருதனை தனயோகத்தை கொடுத்தாலும் சில
கெடுதல்களை செய்துவிடுகிறது.


எனவே கொடுக்கப்பட்ட தகவல்களை அப்படியே பயன்படுத்தாமல் பலவித ஆராய்சி செய்து பயன்படுத்த வேண்டும்
இதற்கு அனுபவ அறிவுடன்,தெய்வபக்தியும் அவசியம்.
வாழ்க பல்லாண்டு.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்
    9715189647

   செல்
       9715189647
          7402570899



அன்புடன்
   சோதிடர்  சோ.ப.ரவிச்சந்திரன்  M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம்..

My email;
 masterastroravi@gmail.com

....... ......   ......    ........    ......   ......